மின்சார வாகன உற்பத்திக்காக ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் பெரிய முதலீட்டில் கைக்கோர்த்த டிவிஎஸ்..!!

மின்சார வாகன உற்பத்திக்காக ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் பெரிய முதலீட்டில் கைக்கோர்த்த டிவிஎஸ்..!!

By Azhagar

அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை அறிமுகப்படுத்திய பிற்பாடு, டிவிஎஸ் நிறுவனம் மின்சார ஆற்றல் பெற்ற வாகன தயாரிப்பில் அதிக ஈடுபாடு காட்ட தொடங்கியுள்ளது.

மின்சார வாகன தயாரிப்பிற்காக டிவிஎஸ் போட்ட கேமிங் பிளான்..!!

ப்ரீமியம் தர பைக் விற்பனையில் தனது முதல் அடியை மிகவும் உறுதியாக எடுத்து வைத்துள்ளது அப்பாச்சி ஆர்ஆர் 310.

பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான இந்த பைக், டிவிஎஸ் நிறுவனத்திற்கு வெற்றி பெற்ற தயாரிப்பாக நிலைத்து நிற்கும்.

மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கிய டிவிஎஸ்..!!

எதிர்கால வாகன உலகம் மின்சார ஆற்றலில் தான் இயங்கும் என்பதை டிவிஎஸ் நன்கு உணர்ந்துள்ளது.

இதில் முதற்கட்டமாக மின்சார ஆற்றல் பெற்ற ஸ்கூட்டர்கள் தயாரிப்பதற்கான அறிவிப்பை டிவிஎஸ் வெளியிட்டது.

மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கிய டிவிஎஸ்..!!

இதில் அடுத்தக்கட்டமாக பெங்களூருவில் இயக்கும் அலட்ராவையோலேட்டே ஆட்டோமோட்டிவ் என்ற நிறுவனத்தின் 14.5% பங்குகளை ரூ.5 கோடி மதிப்பில் டிவிஎஸ் கைப்பற்றியுள்ளது.

மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கிய டிவிஎஸ்..!!

மின்சார வாகன உற்பத்திக்கு என பிரத்யேகமாக கடந்த 2015 டிசம்பரில் பெங்களூரில் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் அலட்ராவையோலேட்டே ஆட்டோமோட்டிவ்.

Recommended Video

[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கிய டிவிஎஸ்..!!

2015 முதல் தற்போது வரை மின்சார வாகன மாடல்களில் 3 முன்மாதிரிகள் அலட்ராவையோலேட்டே தயாரித்துள்ளது. ஆனால் அவை ஏதும் இதுவரை எங்கும் காட்சிப்படுத்தப்படவில்லை.

மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கிய டிவிஎஸ்..!!

நீரஜ் ராஜ்மோகன் மற்றும் நாரயணன் சுப்பிரமணியன் என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அலட்ராவையோலேட்டே ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தில் தற்போது 13 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கிய டிவிஎஸ்..!!

மின்சார வாகனங்களை தயாரிப்பது மட்டுமின்றி, அதற்கான வடிவமைப்பு, மேம்பாட்டு பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொள்ளும்.

மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கிய டிவிஎஸ்..!!

சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறான, மின்சார வாகன பேட்டரிகளையும் தயாரிப்பது அலட்ராவையோலேட்டே ஆட்டோமோட்டிவின் அடுத்த நோக்கம்.

மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கிய டிவிஎஸ்..!!

இந்தியாவில் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கும் இரண்டாவது நிறுவனம் தான் டிவிஎஸ். அதற்கு முன்னரே ஹீரோ மோட்டார்கார்ப் மின்சார வகான உற்பத்திக்கு விதிட்டுவிட்டது.

மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கிய டிவிஎஸ்..!!

சுமார் ரூ.205 கோடி செலவில் ஏத்தர் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற பெங்களூரு நிறுவனத்தோடு, மின்சார வாகன உற்பத்திக்கு ஹீரோ கைக்கோர்த்துள்ளது.

மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கிய டிவிஎஸ்..!!

மின்சார ஆற்றல் தான் இனி வாகன உலகில் எதிர்காலம் என்பதை டிவிஎஸ் உணர்ந்திருப்பது மகிழ்ச்சி. மேலும் அதற்கு ஏற்றவாறு இந்திய அரசும் 2030ம் ஆண்டிற்குள் வாகன உலகை மின்சார ஆற்றலுக்கு மாற்றும் நோக்கத்தை தெரிவித்துள்ளது.

மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கிய டிவிஎஸ்..!!

இந்நிலையில் டிவிஎஸ், ஹீரோ மற்றும் ஹோண்டா என வாகன துறையில் முன்னணி நிறுவனங்கள் மின்சார வாகன துறைக்கு மாற எடுக்கும் முயற்சிகள் மாற்றத்திற்கான படிக்கற்கள் என நம்புவோமாக.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Read in Tamil: TVS Motors Ventures Into The Future With Stake In Electric Vehicle Startup Firm. Click for Details...
Story first published: Monday, December 11, 2017, 12:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X