ஜிஎஸ்டி எஃபெக்ட்: டிவிஎஸ் இருசக்கர வாகனங்களின் விலை குறைகிறது!

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் கிடைக்கும் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு தர இருப்பதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

By Saravana Rajan

ஜிஎஸ்டி வரியின் மூலமாக கிடைக்கும் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ஜிஎஸ்டி எஃபெக்ட்: டிவிஎஸ் இருசக்கர வாகனங்களின் விலை குறைகிறது!

ஜிஎஸ்டி வரியின் மூலமாக ஏற்பட இருக்கும் மாற்றத்தை பொறுத்து இருசக்கர வாகனங்களின் விலையை நிர்ணயிக்க இருப்பதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரியால் ரூ.1,600 முதல் ரூ.2,300 வரை விலை குறைப்பு இருக்கும் என்று டிவிஎஸ் மோட்டார்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி எஃபெக்ட்: டிவிஎஸ் இருசக்கர வாகனங்களின் விலை குறைகிறது!

அதேநேரத்தில், எத்தனை சதவீதம் விலை குறைப்பு செய்யப்பட உள்ளது என்பது குறித்த முழு விபரத்தை தெரிவிக்கவில்லை. மேலும், இந்த விலை குறைப்பு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்றும் அவர் கூறி உள்ளார்.

ஜிஎஸ்டி எஃபெக்ட்: டிவிஎஸ் இருசக்கர வாகனங்களின் விலை குறைகிறது!

ஜிஎஸ்டி வரியால் வர்த்தகத்தில் பெரிய மாற்றங்களை தருவிக்கும். ஜிஎஸ்டி வரி மூலமாக கிடைக்கும் பயன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளோம் என்று டிவிஎஸ் மோட்டாகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கே.என்.ராதாகிருஷ்ணனும் உறுதி கூறி இருக்கிறார்.

ஜிஎஸ்டி எஃபெக்ட்: டிவிஎஸ் இருசக்கர வாகனங்களின் விலை குறைகிறது!

இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு ஜிஎஸ்டி வழி வகுத்தாலும், இருசக்கர வாகனங்கள் மீதான விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், பெரும்பாலான மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி காரணமாக இருசக்கர வாகனங்கள் விலை குறையும் வாய்ப்பு இருக்கிறது.

ஜிஎஸ்டி எஃபெக்ட்: டிவிஎஸ் இருசக்கர வாகனங்களின் விலை குறைகிறது!

தற்போது இருசக்கர வாகனங்களுக்கு 30 சதவீதம் என்ற அளவில் வரி விதிப்பு இருக்கிறது. ஆனால், ஜிஎஸ்டி வரியில் அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட உள்ளதால், இருசக்கர வாகனங்களின் விலை குறையும் வாய்ப்பு இருக்கிறது.

ஜிஎஸ்டி எஃபெக்ட்: டிவிஎஸ் இருசக்கர வாகனங்களின் விலை குறைகிறது!

அதேநேரத்தில், 350சிசி திறனுக்கும் மேல் எஞ்சின் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு 3 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது. இருப்பினும், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் கிடைக்கும் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக ராயல் என்ஃபீல்டு, பஜாஜ் ஆட்டோ மற்றும் யுஎம் லோஹியா ஆகிய இருசக்கர வாகன நிறுவனங்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Chennai-based two-wheeler manufacturer, TVS Motors has announced price cuts on its two-wheelers as it looks to pass on the expected benefits of goods and services tax (GST) to buyers.
Story first published: Monday, June 26, 2017, 12:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X