புதிய டிவிஎஸ் ஜுபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் அறிமுகம்- விபரம்

Written By:

பழமையான டிசைன் தாத்பரியங்களுடன் கூடிய புதிய டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் படங்கள் மற்றும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

வெஸ்பா ஸ்கூட்டருக்கு போட்டியான ஸ்டைலில் புதிய டிவிஎஸ் ஜுபிடர்!

டிவிஎஸ் ஜுபிடர் க்ளாசிக் என்ற பெயரில் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சாதாரண ஜுபிடர் ஸ்கூட்டரில் கூடுதல் ஆக்சஸெரீகளை சேர்த்து புதிய மாடலாக அறிமுகம் செய்துள்ளது டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம்.

Recommended Video - Watch Now!
2017 DSK Benelli 302 R Launched In Inida | In Tamil - DriveSpark தமிழ்
வெஸ்பா ஸ்கூட்டருக்கு போட்டியான ஸ்டைலில் புதிய டிவிஎஸ் ஜுபிடர்!

வட்ட வடிவிலான க்ரோம் பூச்சுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள், விண்ட்ஷீல்டு போன்றவை கவனிக்க வைக்கும் ஆக்சஸெரீகள். இந்த ஸ்கூட்டரில் இரட்டை வண்ண இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பேக் ரெஸ்ட் அமைப்புடன் கூடிய க்ராப் ரெயில் கைப்பிடியும் கூடுதல் கவனத்தை பெறுகிறது.

வெஸ்பா ஸ்கூட்டருக்கு போட்டியான ஸ்டைலில் புதிய டிவிஎஸ் ஜுபிடர்!

இந்த புதிய டிவிஎஸ் ஜுபிடர் க்ளாசிக் ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் புதிதாக இருப்பதுடன், கவர்வதாகவும் இருக்கிறது.

வெஸ்பா ஸ்கூட்டருக்கு போட்டியான ஸ்டைலில் புதிய டிவிஎஸ் ஜுபிடர்!

டிவிஎஸ் ஜுபிடர் இசட்எக்ஸ் என்ற மாடலில் இருப்பது போன்றே, இந்த ஜுபிடர் க்ளாசிக் மாடலிலும், முன்சக்கரத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தவிர, சிங்க் பிரேக்கிங் சிஸ்டமும் இதன் சிறப்பு.

வெஸ்பா ஸ்கூட்டருக்கு போட்டியான ஸ்டைலில் புதிய டிவிஎஸ் ஜுபிடர்!

டிவிஎஸ் ஜுபிடர் க்ளாசிக் ஸ்கூட்டரின் எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. இந்த ஸ்கூட்டரில் 109.7சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்பா ஸ்கூட்டருக்கு போட்டியான ஸ்டைலில் புதிய டிவிஎஸ் ஜுபிடர்!

புதிய டிவிஎஸ் ஜுபிடர் க்ளாசிக் ஸ்கூட்டர் ரூ.55,266 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வெஸ்பா ஸ்கூட்டரை போன்று சில பழமையான டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது.

வெஸ்பா ஸ்கூட்டருக்கு போட்டியான ஸ்டைலில் புதிய டிவிஎஸ் ஜுபிடர்!

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அடுத்து விற்பனையில் டிவிஎஸ் ஜுபிடர்தான் சிறந்த மாடலாக வலம் வருகிறது. இந்த நிலையில், இந்த புதிய ஜுபிடர் மாடல் ஸ்கூட்டர் பிரியர்களையும், வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவரும் என்று நம்பலாம்.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Jupiter Classic launched in India. The TVS Jupiter Classic is priced at Rs 60,487 ex-showroom (India).

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark