இந்தியாவில் 4 ஆண்டுகள் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் ஸ்கூட்டர்..!!

Written By:

டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ஜூப்பிட்டர் ஸ்கூட்டர், இந்தியாவில் சுமார் 2 மில்லியன் எண்ணிக்கையில் விற்பனை ஆகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

விற்பனையில் தொடர்ந்து வரலாறு படைக்கும் டிவிஎஸ் ஜூப்பிட்டர்..!!

தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம், தர்மபுரி ஒசூர் பகுதியில் இயங்கும் தனது ஆலையில் உற்பத்தி செய்யும் முக்கிய மாடல் தான் ஜூப்பிட்டர் ஸ்கூட்டர்.

விற்பனையில் தொடர்ந்து வரலாறு படைக்கும் டிவிஎஸ் ஜூப்பிட்டர்..!!

2013ம் ஆண்டு முதல் இங்கு உற்பத்தி ஆன 20 லட்சம் ஜூப்பிட்டர் ஸ்கூட்டர்கள் நல்ல விற்பனை திறனை எட்டியுள்ளதாக டிவிஎஸ் கூறியுள்ளது.

இந்தியாவில் இந்த ஸ்கூட்டருக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என டிவிஎஸ் நிறுவனமே எதிர்பார்த்திருக்காது.

Recommended Video - Watch Now!
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
விற்பனையில் தொடர்ந்து வரலாறு படைக்கும் டிவிஎஸ் ஜூப்பிட்டர்..!!

குறிப்பாக வெளியான முதல் 30 மாதங்களில் 1 மில்லியன் விற்பனை எண்ணிக்கையை பெற்ற ஸ்கூட்டராகவும் டிவிஎஸ் ஜூப்பிட்டர் பார்க்கப்படுகிறது.

விற்பனையில் தொடர்ந்து வரலாறு படைக்கும் டிவிஎஸ் ஜூப்பிட்டர்..!!

இது தவிர வெளியான 4 ஆண்டுகளில் 20 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனை ஆகி, வேகமான வளர்ச்சி திறனை பெற்ற ஸ்கூட்டராகவும் ஜூப்பிட்டர் உள்ளது.

விற்பனையில் தொடர்ந்து வரலாறு படைக்கும் டிவிஎஸ் ஜூப்பிட்டர்..!!

டிவிஎஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அனிருத்தா ஹல்தார் இதுப்பற்றி பேசும்போது, 20 லட்சம் என்ற விற்பனை திறன் மூலம் டிவிஎஸ் நிறுவனத்திற்கு 20 லட்சம் வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.

விற்பனையில் தொடர்ந்து வரலாறு படைக்கும் டிவிஎஸ் ஜூப்பிட்டர்..!!

ஜூப்பிட்டரின் இந்த மைல்கல் சாதனை எங்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. இதுபோன்ற பல வெற்றிகளை குறிவைத்து டிவிஎஸ் இயங்கும் என்று அவர் கூறினார்.

விற்பனையில் தொடர்ந்து வரலாறு படைக்கும் டிவிஎஸ் ஜூப்பிட்டர்..!!

டிவிஎஸின் ஜூப்பிட்டர் மாடல் ஸ்கூட்டரில் 110சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இதன்மூலம் 7.8 பிஎச்பி பவர் மற்ற்ம் 8 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

விற்பனையில் தொடர்ந்து வரலாறு படைக்கும் டிவிஎஸ் ஜூப்பிட்டர்..!!

ஏர் கூல்டு தொழில்நுட்பம் முறையில் இயங்கும் ஜூப்பிட்டர் ஸ்கூட்டரின் எஞ்சின் சிவிடி கியர்பாக்ஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளது.

விற்பனையில் தொடர்ந்து வரலாறு படைக்கும் டிவிஎஸ் ஜூப்பிட்டர்..!!

மெட்டல் கட்டமைப்பை பெற்றுள்ள டிவிஎஸ் ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் பயனாளர்களின் விருப்பத்தை உணர்ந்து உருவாக்கப்பட்ட மாடல்.

மேலும் இதில் உள்ள ஈகோ மற்றும் பவர் மோடுகள் மூலமாக ஸ்கூட்டரில் இரண்டு விதமான பயண முறைகளை தேர்வு செய்யலாம்.

விற்பனையில் தொடர்ந்து வரலாறு படைக்கும் டிவிஎஸ் ஜூப்பிட்டர்..!!

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜூப்பிட்டர் ஸ்கூட்டரின் புதிய மாடல் ஒன்றை டிவிஎஸ் வெளியிட்டது. அதில் கூடுதலாக முன்பக்க டிஸ்க் பிரேக் அமைப்பு இருக்கும். ஜூப்பிட்டர் ஸ்கூட்டரில் முன்பக்க டிஸ்க் பிரேக் தேவை இசட்.எக்ஸ். வேரியண்டில் கிடைக்கும்.

விற்பனையில் தொடர்ந்து வரலாறு படைக்கும் டிவிஎஸ் ஜூப்பிட்டர்..!!

டிஸ்க் பிரேக் தேவைக்கு பிறகு இம்மாத தொடக்கத்தில் டிவிஎஸ் ஜூப்பிட்டர் ஸ்கூட்டரில் கிளாசிக் எடிசனை கூடுதலாக வெளியிட்டது.

விற்பனையில் தொடர்ந்து வரலாறு படைக்கும் டிவிஎஸ் ஜூப்பிட்டர்..!!

ரெட்ரோ தோற்றம் கொண்ட இந்த ஸ்கூட்டர் ஐவரி நிறத்தில் கிடைக்கும். மேலும் முழுவதுமாக கிரோம் பூச்சு மற்றும் பெரிய வின்ட்ஸ்கீரின் அமைப்பையும் கிளாசிக் எடிசன் பெற்றுள்ளது.

விற்பனையில் தொடர்ந்து வரலாறு படைக்கும் டிவிஎஸ் ஜூப்பிட்டர்..!!

கூடுதலாக கிளாசியான பில்லியன் பேக்ரெஸ்ட் மற்றும் டூயல் டோன் கொண்ட இருக்கை அமைப்பையும் இந்த சிறப்பு பதிப்பில் பார்க்கலாம்.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
Read in Tamil: TVS Jupiter Scooter Crosses 2 Million Sales Milestone in 4 Years. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark