டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கின் டிசைனுக்கு காபப்புரிமை!

Written By:

விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்கின் டிசைனுக்கு காப்புரிமை பெறப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கின் டிசைனுக்கு காப்புரிமை!

இந்த நிலையில், இந்த புதிய பைக்கின் டிசைனுக்கு காப்புரிமை பெற்றிருக்கிறது டிவிஎஸ் நிறுவனம். காப்புரிமைக்கான படத்தில் இருப்பது படி பார்த்தால், புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்கின் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கின் டிசைனுக்கு காப்புரிமை!

முன்புறத்தில் மட்டும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இருப்பது தெரிய வருகிறது. புதிய அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்கின் வால் பகுதி, அப்பாச்சி ஆர்டிஆர் 2004வி பைக்கின் வால் பகுதியை ஒத்திருக்கிறது. ஸ்பிளிட் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கின் டிசைனுக்கு காப்புரிமை!

முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கும். மொத்தத்தில் மிக நேர்த்தியான டிசைன் அம்சங்களுடன் இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை கவர வருகிறது புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்.

Recommended Video
2017 DSK Benelli 302 R Launched In Inida | In Tamil - DriveSpark தமிழ்
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கின் டிசைனுக்கு காப்புரிமை!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 313சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 34 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கின் டிசைனுக்கு காப்புரிமை!

அடுத்த மாதம் இந்த புதிய டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ரூ.2 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கின் டிசைனுக்கு காப்புரிமை!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக் மாடலானது, கேடிஎம் ஆர்சி390, ஹோண்டா சிபிஆர் 250ஆர் உள்ளிட்ட பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Motor Company patents the design of Apache RR 310S.
Story first published: Saturday, August 19, 2017, 14:05 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos