மேம்படுத்தப்பட்ட புதிய 2017 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் ரூ.37,580 விலையில் அறிமுகம்..!

Written By:

தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் டிவிஎஸ் மோட்டார்ஸ், பிஎஸ்-4 தரத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஸ்போர்ட் பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் சிறந்த மைலேஜ் பைக்குகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

சிறப்புகள்

சிறப்புகள்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2017 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் பாரத் ஸ்டேஜ்-4 தர மாசு உமிழ்வு சான்றிதழ் பெற்ற இஞ்சினும், 35 வாட்ஸ் ஆட்டோமேடிக் ஹெட்லைட்டும் புதிய அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளது.

இஞ்சின்

இஞ்சின்

ஸ்போர்ட் பைக்கில் 99.77சிசி 4-ஸ்ட்ரோக் டூரா லைஃப் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 7.7 பிஹச்பி ஆற்றலையும், 7.8 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய 2017 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் அறிமுகம்!

இந்த பைக்கின் முன்புறம் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கம் 5 வகையில் மாற்றியமைத்துக்கொள்ளும் டிவின் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய 2017 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் அறிமுகம்!

இதன் இரண்டு பக்கமும் டிரம் பிரேக்குகளே கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 130 மிமி மற்றும் பின்பக்கம் 110மிமி அளவு கொண்ட டிரம் பிரேக்குகள் இடம்பெற்றுள்ளன.

வண்ணங்கள்

வண்ணங்கள்

புதிய 2017 ஸ்போர்ட் பைக் 7 வண்ணங்களில் கிடைக்கிறது. அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

பிளாக் சில்வர்

இண்டிகோ ஸ்ட்ரீக்

மெர்குரி கிரே

பிளேஸ் ரெட்

வோல்கேனோ ரெட்

டேஸ்லிங் ஒயிட்

எலெக்ட்ரிக் கிரீன்

வேரியண்டுகள்

வேரியண்டுகள்

மேம்படுத்தப்பட்ட புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் 3 வேரியண்டுகளில் கிடைக்கிறது. இவை ரூ. 37,580 முதல் ரூ. 46,924 என்ற விலைகளில் கிடைக்கிறது.

விலை விவரம்

விலை விவரம்

வேரியண்ட் வாரியான விலை விவரம்:

  • கிக் ஸ்டார்ட் / ஸ்போக் வீல் மாடல் - ரூ.37,580
  • கிக் ஸ்டார்ட் / அலாய் வீல் மாடல் - ரூ.43,236
  • எலெக்ட்ரிக் ஸ்டார்ட்/ அலாய் வீல் மாடல் - ரூ.46,924
மைலேஜ்

மைலேஜ்

ஸ்போர்ட் பைக் லிட்டருக்கு 95 கிலோமீட்டர்கள் மைலேஜ் தரும் என டிவிஎஸ் நிறுவனம் கூறுகிறது. 12 லிட்டர் அளவு கொண்ட பெட்ரோல் டேங்க், மைலேஜ் அளவைக் காட்டும் எகனோமீட்டர் ஆகியவை உள்ளது. இந்த பைக்கின் எடை 108.5 கிலோவாக உள்ளது.

English summary
Read in Tamil about 2017 Tvs sport launch in india. price, mileage, colors,specs and more details in tamil.
Story first published: Thursday, April 13, 2017, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark