பிஎஸ்4 தரத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் ரூ.44,300 விலையில் அறிமுகம்.

மேம்படுத்தப்பட்ட புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

பாரத் ஸ்டேஜ்-4 தரத்தில் மேம்படுத்தப்படுத்தப்பட்ட ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கினை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அறிமுகம்!

டிவிஎஸ் நிறுவனத்தின் முத்திரை பதித்த மாடலான ஸ்டார் சிட்டி பைக்கின் வழித்தோன்றலே ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்காகும்.

மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அறிமுகம்!

முதல்முறையாக 2014ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கை காட்சிப்படுத்தியது டிவிஎஸ் நிறுவனம்.

மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அறிமுகம்!

தற்போது புதிய தோற்றத்தில், கூடுதல் சிறப்பு அம்சங்களுடன், எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியுடன் மேம்படுத்தப்பட்டு வெளிவந்துள்ளது புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்.

மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அறிமுகம்!

இதில் இடம்பெற்றுள்ள புதிய அம்சங்களை தொடர்ந்து காணலாம்.

மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அறிமுகம்!

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள விதிமுறைகள்படி இந்த பைக்கில் புதிய ஆட்டோமேடிக் ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.

மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அறிமுகம்!

புதிய அலாய் வீல்கள், கலர் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்கள், கிளியர் லென்ஸ் இண்டிகேட்டர், நம்பர் பிளேட் இல்லுமினேட்டர்.

மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அறிமுகம்!

டிஜிட்டல் இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே, அனலாக் ஸ்பீடோமீட்டருடன் கூடிய புதிய இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் இதிக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கின் முன்புரம் ஹைடிராலிக் டெலஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் 5 வகையில் மாற்றியமைத்துக்கொள்ளும் வசதியுடன் அட்ஜஸபிள் டூயல் ஷாக் அப்சார்பர் தரப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அறிமுகம்!

இந்த புதிய பைக்கின் இரண்டு புறமும் டிரம் பிரேக்குகளே தரப்பட்டுள்ளன. எனினும் டிஸ்க் பிரேக் ஆப்ஃஷனலாக கிடைக்கிறது.

மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அறிமுகம்!

எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் அளவுகளை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

  • நீளம் - 1980 மிமீ
  • அகலம் - 750 மிமீ
  • உயரம் - 1080 மிமீ
  • கிரவுண்ட் கிளியரன்ஸ் - 172மிமீ
  • வீல் பேஸ் - 1260 மிமீ
  • மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அறிமுகம்!

    புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கில் 110சிசி இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 8.3 பிஹச்பி ஆற்றலையும், 8.7 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது.

    இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

    மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அறிமுகம்!

    2017 ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்10 புதிய வண்ணங்களில் கிடைக்கிறது.

    • சாக்லேட் கோல்டு (Chocolate Gold)
    • ஒயிட் கோல்டு (White Gold)
    • பிளாக் கோல்டு (Black Gold)
    • பிளாக் சில்வர் (Black Silver)
    • பிளாக் புளூ ( Black Blue)
    • மேட் கிரே (Matt Grey)
    • டைட்டேனியம் கிரே (Titanium Grey)
    • ஆஸ்கர் பிளாக் (Oscar Black)
    • ஷோ ஸ்டாப்பர் புளூ (Showstopper Blue)
    • செலிபிரிட்டி பிளாக் (Celebrity Black)
    • மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அறிமுகம்!

      புதிய 2017 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

      மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அறிமுகம்!

      இது லிட்டருக்கு 86 கிமீ மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

      மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அறிமுகம்!

      புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கின் வேரியண்ட் வாரியான விலை விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

      • எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மேக் கோல்டு - ரூ.49,684
      • கிக் ஸ்டார்ட் மேக் - ரூ.44,300
      • எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மேக் - ரூ.48,684
      • மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் அறிமுகம்!

        டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் பஜாஜ் பிளாட்டினா, ஹீரோ பாஷன் ப்ரோ மற்றும் ஹோண்டா டிரீம் யுகா பைக்குகளுடன் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Read in Tamil about tvs star city plus launch in india with bs4 and aho. price, specs, mileage and more
Story first published: Monday, April 24, 2017, 19:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X