அசத்தலான இரட்டை வண்ணங்களில் இப்போது டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்!

Written By:

பண்டிகை காலத்தில் வாகனம் வாங்க திட்டமிட்டிருப்போரை கவர்ந்திழுக்கவும், அவர்களது உற்சாகத்தை அதிகப்படுத்தும் விதத்தில் பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் தொடர்ந்து புதிய வாகன மாடல்கள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வரிசையி்ல லேட்டஸ்ட் வரவு, டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி ப்ளஸ். இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

கூடுதல் சிறப்புகளுடன் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் அறிமுகம்!

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் தற்போது இரட்டை வண்ணக் கலவையில் அறிமுகமாகி இருக்கிறது. கருப்பு- சிவப்பு, கருப்பு - நீலம், சிவப்பு- கருப்பு ஆகிய மூன்றுவிதமான இரட்டை வண்ணத் தேர்வுகளில் இப்போது ஸ்டார் சிட்டி ப்ளஸ் கிடைக்கும்.

கூடுதல் சிறப்புகளுடன் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் அறிமுகம்!

புதிய வண்ணங்கள் தவிர்த்து, 3டி க்ரோம் லேபிள் ஸ்டிக்கர் மற்றும் கருப்பு வண்ண க்ராப் ரெயில் கைப்பிடியும் கவர்ச்சி சேர்க்கிறது.

Recommended Video
2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
கூடுதல் சிறப்புகளுடன் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கில் அதிகபட்சம் 8.3 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 110 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

கூடுதல் சிறப்புகளுடன் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் அறிமுகம்!

இந்த பைக் லிட்டருக்கு 86 கிமீ மைலேஜ் வரை தரும் என்பது நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே, அதிக மைலேஜ் தரும் பட்ஜெட் ரக பைக் மாடல்களில் ஒன்றாகவும் கூறலாம்.

கூடுதல் சிறப்புகளுடன் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், டிஜிட்டல் மற்றும் அனலாக் டயல்கள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அட்ஜெஸ்ட்டபிள் ஷாக் அப்சார்பர், ட்யூப்லெஸ் டயர்கள், இரட்டை வண்ண சீட் கவர்கள், தேன்கூடு வடிவ க்ரில் அமைப்புடன் கூடிய பக்கவாட்டு பேனல்கள் ஆகியவை இதர முக்கிய சிறப்பம்சங்கள்.

கூடுதல் சிறப்புகளுடன் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் அறிமுகம்!

புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் இந்த இரட்டை வண்ண மாடல்கள் ரூ.50,534 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Star City Plus Dual-Tone Colour Scheme Launched in India.
Story first published: Tuesday, September 5, 2017, 17:46 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos