டிவிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்த இருக்கும் இரண்டு புதிய பைக்குகள் பற்றிய முழு தகவல்கள்..

Written By:

தமிழ்நாட்டைச் சேர்ந்ததும், நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும் விளங்கும் டிவிஎஸ், இந்த ஆண்டில் இரண்டு புதிய பைக்குகளை அறிமுகப்படுத்த உள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

அதில் ஒன்று 125சிசி ஸ்கூட்டர் என்றும், மற்றொன்று ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் என்றும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவை என்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

டிவிஎஸ் நிறுவனம் நாட்டின் இரண்டாவது பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருகிறது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

இந்நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள ஓசூர், கர்நாடகாவில் உள்ள மைசூரு மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள நலகர்க் ஆகிய மூன்று இடங்களில் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

நடப்பு ஆண்டில் உற்பத்தியை மேலும் துரிதப்படுத்த எண்ணியுள்ள இந்நிறுவனம் இதற்காக 500 கோடி ரூபாயை தனது உற்பத்தி தொழிற்சாலைகளில் முதலீடு செய்ய உள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே இரண்டு புதிய பைக்குகளை அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம். இந்த புதிய மாடல்கள் குறித்து சில விவரங்கள் வெளியாகி உள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

டிவிஎஸ் நிறுவனம் பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிள் பிரிவில் ஏற்கெனெவே கவனம் செலுத்தி வருவது தெரிந்ததே.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

அந்த வகையில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் இரண்டு மாடல்களில் ஒன்று ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் மாடலான ‘அப்பாச்சி ஆர்டிஆர் 310 ' பைக்காக இருக்கலாம் என்று தெரியவருகிறது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

இந்த பைக்கானது டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘பிஎம்டபிள்யூ ஜி 310ஆர்' பைக்கில் உள்ள அதே இஞ்சின் கொண்டிருக்கும்.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

தற்போது பிஎம்டபிள்யூவின் ‘ஜி 310ஆர்' பைக்குகள் டிவிஎஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

டிவிஎஸ் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ‘ஜி 310ஆர்' பைக்குகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

இந்தியாவில் இந்நிறுவனங்களின் கூட்டணியில் வெளிவர இருக்கும் முதல் மாடலாகவும் டிவிஎஸ் ‘அப்பாச்சி ஆர்டிஆர்310' பைக் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

இந்தியாவில் அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக் வரும் ஜூலை மாதம் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்கின் அறிமுகத்தை தொடர்ந்து இந்தியாவில் ‘பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்' பைக்கின் அறிமுகம் இருக்கும்.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் 2017ஆம் ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2017ன் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

இரண்டு பைக்குகளும் ஒரே இஞ்சின் கொண்டிருக்கும், இவை இரண்டிற்குமான வித்தியாசம் தோற்ற அளவில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் நேகட் ஸ்ட்ரீட் ஸ்டைலிங்கிலும், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக் ஸ்போர்ட்ஸ் பைக் தோற்றத்திலும் இருக்கும்.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக் மூலம் ஸ்போர்ட்ஸ் பைக் செக்மெண்டில் டிவிஎஸ் நிறுவனம் கால்பதிக்க உள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

இந்த பைக்குகளில் ஒற்றை சிலிண்டர் கொண்ட லிக்விட் கூல்டு 4-ஸ்ட்ரோக் 313சிசி இஞ்சின் உள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

இந்த இஞ்சின் அதிகபட்சமாக 34 பிஹச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்கவல்லதாகும்.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

இந்த இஞ்சினானது பிரத்யேக ரிவர்ஸ் சிலிண்டர் லேஅவுட் அமைப்பில் இருக்கும். இண்டேக் பகுதி இஞ்சினின் முகப்பிலும், எக்ஸாஸ்ட் பகுதி பின்புறத்தில் இருக்கும்.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக் ரூ.1.6 லட்சம் முதல் ரூ.1.7 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

இதன் மூலம் இந்தியாவில் இந்த செக்மெண்டில் கிடைக்கக்கூடிய full-faired பைக்குகளில் மிகக் குறைவான விலை கொண்டதாக அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக் இருக்கும்.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

இந்தியா மற்றும் உலக சந்தைகளில் 500சிசிக்கும் குறைவான இஞ்சின் கொண்ட பைக் பிரிவில், உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்காக பிஎம்டபிள்யூ மோட்டோரேட் மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் கை கோர்த்தன.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

இந்த கூட்டணி 2013ல் உருவானது. தற்போது தான் இந்த நிறுவனங்களின் முதல் பைக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள இரண்டு புதிய மாடல்களில் ஒன்று எது என்பது குறித்து விரிவாக பார்த்தோம், தற்போது அந்நிறுவனத்தின் இரண்டாவது மாடல் குறித்தும் காணலாம்.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

அந்நிறுவனம் அடுத்த அறிமுகப்படுத்த உள்ளது 125சிசி ஸ்கூட்டர் ஆகும்.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

தற்போது டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர், வீகோ மற்றும் ஸ்கூட்டி பிராண்டுகளில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

ஆயினும் இந்த அனைத்து ஸ்கூட்டர்களுமே 110சிசிக்கும் குறைவான செக்மெண்டில் உள்ளவையாகவே இருக்கின்றது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

இந்த மூன்று பிராண்டுகளில் ஜூபிடர் தான் இந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் ஆக உள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஜூபிடர் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

2016-17 நிதி ஆண்டில் 7.5 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தை முந்தி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது டிவிஎஸ்.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

எனவே புதிதாக அறிமுகமாகவுள்ள 125சிசி ஸ்கூட்டர் அதிகம் விற்பனையாகும் ஜூபிடர் பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய பைக்குகள்..!

தற்போது ஸ்கூட்டர் விற்பனையில் டிவிஎஸ் நிறுவனத்தை விடவும் முன்னிலை வகிப்பது ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

English summary
Read in Tamil about upcoming new bikes from tvs motor company. more details revealed.
Please Wait while comments are loading...

Latest Photos