டிவிஎஸ் விக்டர் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

Written By:

பண்டிகை காலத்தையொட்டி, வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் அண்மையில் விற்பனைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது விக்டர் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடலை டிவிஎஸ் மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

டிவிஎஸ் விக்டர் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

புதிய டிவிஎஸ் விக்டர் பிரிமியம் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், தங்க வர்ணம் பூசப்பட்ட எஞ்சின் பகுதி ஆகியவை தனித்துவமான அம்சங்களாக கூறலாம். பகல்நேர எல்இடி விளக்குகளும் கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பு.

டிவிஎஸ் விக்டர் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

பக்கவாட்டில் இருக்கும் பேனல்கள் க்ரோம் பூச்சு மூலமாக தனித்துவம் பெற்றிருக்கிறது. பின்புறத்தில் இருக்கும் க்ராப் ரெயில் கைப்பிடி, பைக்கின் வண்ணத்திலேயே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் விக்டர் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கில் இருக்கும் 109.7சிசி ஆயில் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 9.3 பிஎச்பி பவரையும், 9.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. இந்த பைக் லிட்டருக்கு 72 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் விக்டர் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

புதிய டிவிஎஸ் விக்டர் பிரிமியம் எடிசன் மாடல் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட மாடலில் கருப்பு, மஞ்சள் வண்ணக் கலவையில் மட்டுமே கிடைக்கும். சாதாரண விக்டர் மாடல்கள் டிஸ்க் பிரேக் மட்டுமின்றி, டிரம் பிரேக் மாடலிலும் கிடைக்கிறது. சாதாரண பைக் மாடல் 5 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

டிவிஎஸ் விக்டர் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

புதிய டிவிஎஸ் விக்டர் பிரிமியம் எடிசன் பைக் மாடல் ரூ.55,065 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பண்டிகை காலத்தில் பைக் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு டிவிஎஸ் விக்டரின் இந்த பிரிமியம் எடிசன் மாடல் தனித்துவமான தேர்வாக அமையலாம்.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Motor Company has launched the new Premium edition of the TVS Victor in India. The Victor Premium Edition is priced at Rs 55,065 ex-showroom (Delhi).
Story first published: Friday, September 8, 2017, 11:25 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark