மேம்படுத்தப்பட்ட புதிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

டிவிஎஸ் நிறுவனத்தின் மாடல்களிலேயே முதலாவதாக பாரத் ஸ்டேஜ் - 4 மாசு உமிழ்வு தர சான்றிதழ் பெற்றுள்ள புதிய வீகோ ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய ஸ்கூட்டர் 2 புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது டிவிஎஸ் நிறுவனம்.

புதிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் அறிமுகம்!!

மெட்டாலிக் ஆரஞ்சு மற்றும் டி-கிரே ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் 2017 வீகோ ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது. ஆனால் இந்த புதிய கலர்கள் குறிப்பிட்ட டீலர்களிடம் மட்டுமே கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் அறிமுகம்!!

புதிய வீகோவில் மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் விதமாக யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் தரப்பட்டுள்ளது. இருவண்ண கலவையில் புதிய சீட் கவர் மற்றும் இதில் உள்ள சில்வர் ஓக் முன்பக்க பானல் கவர்ச்சிகரமான பார்வையை வழங்குகிறது. இதில் சிங்க் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

புதிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் அறிமுகம்!!

புதிய வீகோவின் அறிமுக நிகழ்ச்சியில் டிவிஎஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் (ஸ்கூட்டர்) பிரிவின் துணை தலைவர் அனிருதா ஹல்தர் கூறும் போது, "2016ஆம் ஆண்டிற்கான ஜேடி பவர் (ஆசிய பசிஃபிக்) குவாலிட்டி நடத்திய சர்வேயில் முதல் இடத்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீகோ பெற்றுள்ளது" என்றார்.

புதிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் அறிமுகம்!!

இருசக்கர வாகனங்களில் தரத்திற்கு அதிமுக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அதனை ஜேடி பவர் குவாலிட்டி சர்வே பறைசாற்றியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் அறிமுகம்!!

மக்களின் நம்பிக்கையை பெற்ற டிவிஎஸ் நிறுவனத்திற்கு, புதிய வீகோ மாடல் மூலம் புத்துணர்ச்சி கிடைத்துள்ளதாகவும், இது தொடரும் என்றும், மற்ற மாடல்களும் விரைவில் பாரத் ஸ்டேஜ் - 4 மாசு உமிழ்வு தர சான்றிதழ் பெற்று வெளிவரும் என்றும் அனிருதா ஹல்தர் தெரிவித்தார்.

புதிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் அறிமுகம்!!

புதிய 2017 வீகோவில் ஏற்கெனவே உள்ள மாடலில் இருக்கும் அதே 110சிசி சிவிடி-ஐ எஞ்சின் தான் உள்ளது. அதிகபட்சமாக 8 பிஹச்பி திறனை வெளிப்படுத்தும் தன்மை கொண்ட எஞ்சின் இதுவாகும்.

ஏப்ரிலியா எஸ்ஆர்150 ரேஸ் மாடல் பைக்கின் படங்கள் :

English summary
TVS Motor Company has launched the 2017 Wego with BS-IV engine with a price tag of Rs 50,434 ex-showroom (Delhi). Now available in two new colours - Metallic Orange and T-Grey.
Story first published: Tuesday, February 21, 2017, 16:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark