டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாட்டம்!

Written By:

நாட்டின் பாரம்பரிய பண்டிகைகளை டிவிஎஸ் ஸ்கூட்டரில் பயணித்து பதிவு செய்து வருகிறது டிரைவ்ஸ்பார்க் தளம். கொல்கத்தாவில் துர்கா பூஜை, புனே நகரில் தீபாவளி பண்டிகை, கொச்சியில் கிறிஸ்துமஸ் பண்டிகை, பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டங்களை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் பயணித்து பதிவு செய்திருந்தோம்.

இந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரியத்தை பரைசாற்றும் தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் பயணித்து பதிவு செய்கிறோம். கலை, கலாச்சார செறிவு மிக்க தமிழகத்தின் நெற்களஞ்சியமாக போற்றப்படும் தஞ்சை தரணியிலிருந்து பொங்கல் பண்டிகை கொண்டாட்ட நிகழ்வுகளை இங்கே பதிவு செய்கிறோம்.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாட்டம்!

விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதத்தில் இந்த பொங்கல் பண்டிகை தமிழர்களின் அடையாளச் சின்னமாக கொண்டாடப்படுகிறது. தஞ்சையில் துவங்கி, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மண் மனம் கமழ நடக்கும் பொங்கல் பண்டிகை விழாவிற்கு வாசகர்களையும் அழைத்துச் செல்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறோம்.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாட்டம்!

இதுவரை நாம் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் பயணித்தவை அனைத்தும் பெருநகரங்கள். ஆனால், முதல்முறையாக ஊரகப் பகுதிகளில் வலம் வர புறப்பட்டோம். பொதுவாக, ஊரகப் பகுதிகளில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு உண்டு. காரணம், உறுதியான கட்டமைப்பு. அந்த வகையில், போட்டியாளர்களைவிட மிக வலுவான ஃப்ரேம் கொண்ட டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் கரடுமுரடான சில ஊரக சாலைகளையும் எளிதாக எதிர்கொள்கிறது.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாட்டம்!

கைகளில் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் கிடைத்தவுடன் பொங்கல் பண்டிகை பரபரப்பில் இருந்த தஞ்சை நகர வீதிகளில் வலம் வந்தோம். தஞ்சை பெரிய கோயில், அரண்மனை உள்ளிட்ட இடங்களுக்கு விசிட் அடித்தோம். தஞ்சையின் தனி அடையாளச் சின்னமாக விளங்கும் பெரிய கோயிலின் கட்டடக் கலை நுணுக்கம் எத்துனை முறை பார்த்தாலும் வியக்க வைக்கிறது.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாட்டம்!

சோழ சாம்ராஜ்யத்தின் பெருமையை உலகுக்கு பரைசாற்றும் விதத்தில் தஞ்சையில் அமைந்திருக்கும் பெரிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றோம். இந்த கோயில் 1,000 ஆண்டுகள் பழமையானது. தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோயில் அக்கால கட்டடக் கலை நுட்பத்தின் வல்லமை எடுத்துக் காட்டும் பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாட்டம்!

கோபுரத்தின் உச்சியில் 80 டன் எடையுடைய இடைச்சிக் கல் வைக்கப்பட்டு இருக்கிறது. கோயில் கட்டுமானத்தின்போது அழகி என்ற இடையர் குல மூதாட்டி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தயிர், மோர் வழங்கி தொண்டு செய்தததை அறிந்து, இதனை கட்டிய ராஜராஜசோழன் அந்த கல்லில் அழகி என்ற பெயரை இடம்பெறச் செய்தார். இந்தளவு எடையுடைய கல்லின் பாரம் கோபுரத்தில் சரிசமமாக விரவும் விதத்தில் உத்தம வகை கோபுர அமைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த தொழில்நுட்பமானது டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் பாடி பேலன்சிங் தொழில்நுட்பத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. அதாவது, ஓட்டுபவரின் எடை ஸ்கூட்டரில் சரியான விகிதத்தில் விரவுவதால், அதிக நிலைத்தன்மை மற்றும் கையாளுமையை வழங்குகிறது.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாட்டம்!

அடுத்து நேராக பயணத்தின்போது வழியில் அறுவடைப் பணிகள் எந்திரம் மூலமாக நடந்து வருவதை காண முடிந்தது. ஒருகாலத்தில் அதிகாலை 2 மணி அல்லது 3 மணிக்கெல்லாம் அறுவடைக்கு ஆட்கள் புறப்பட்டு செல்வார்கள். அறுவடை முடிந்து உலர விட்டு மறுநாள் அதனை களத்திற்கு கொண்டு வந்து அடிப்பார்கள். ஆனால், இப்போது எந்திரம் மூலமாக நடக்கும் அறுவடையை காண்பதற்கு வயல்வெளி சாலைகளில் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரை விரட்டினோம்.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாட்டம்!

இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டு இருக்கும் 12 அங்குல சக்கரங்களும், முன்புற டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் அமைப்பும் அந்த வயல் சாலைகளில் செல்வதற்கு எந்த சிரமத்தையும் தரவில்லை. உதறல் இல்லாத நம்பிக்கையான பயணத்தை வழங்கியது. இதுவரை சிக்னல்களை பார்த்து பூத்துப் போயிருந்த எம் கண்களுக்கு கட்டற்ற சுதந்திரத்தை வழங்கிய வயல்வெளி சாலைகளில் டிவிஎஸ் வீகோ எஞ்சினின் சிறப்பான செயல்திறனும் ஓட்டுதல் உற்சாகத்தை கூட்டியது.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாட்டம்!

நாள்கணக்கில் நடந்த அறுவடைப் பணிகள் இப்போது அறுவடை எந்திரங்களால் மணிக்கணக்கில் சுருங்கிப் போனதை காண முடிந்தது. இந்த ஆண்டு மேட்டூர் அணை பாசனம் குறைந்ததால், ஆழ் குழாய் தண்ணீரை மட்டுமே நம்பி விவசாயத்தை ஒருபோகம் மட்டும் பயிர் செய்து ஒப்பேற்றியதாக விவசாயிகள் தெரிவித்தனர். நிலத்தடி நீர்மட்டமும் இந்த பகுதிகளில் வெகுவாக குறைந்துபோய் விட்டதாக கூறினர்.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாட்டம்!

பைக்குகள்தான் இந்த சாலைகளுக்கு சிறப்பானது என்று கருதிய விவசாயிகள் வயல்வெளி சாலைகளை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் எளிதாக கடந்து வந்ததை கண்டு வியப்பு தெரிவித்தனர். தைத்திருநாளில் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகள் எல்லாம் வர்ணம் பூசப்பட்டு பண்டிகை கொண்டாட்ட களையுடன் காண முடிந்தது. வெளியூர்களில் இருப்பவர்கள் சொந்த ஊரில் குடும்பத்தினருடன் சேர்ந்துகொண்டாடுவதற்காக வந்திருந்ததால், நலம் விசாரிப்புகளும், அளவளாவல்களுமார எல்லா வீடுகளிலும் மகிழ்ச்சி மணம் கமகமத்தது.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாட்டம்!

பொங்கல் பண்டிகை என்றாலே கட்டுக்கட்டாக கரும்பும் வாழைப்பழ தார்களும் ஊரெல்லாம் மணக்கும். கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து, வாழைத்தார்களால் நிரம்பி இருந்த சந்தைகளும், கடைத்தெருக்களும் மக்கள் கூட்டத்தால் வியாபாரத்தால் களை கட்டி இருந்தது. அந்த கூட்டத்திலும் எளிதாக செல்வதற்கு டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் உதவியது.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாட்டம்!

இதன் கையாளுமை நிச்சயம் சிறப்பானதாக கூறலாம். இதற்கு முக்கிய காரணம், சிறப்பான ஃப்ரேம் வடிவமைப்பும், அதிக வீல் பேஸும் முக்கிய காரணம். எந்த சாலைக்கும் ஏற்ற மாடல் என்பதை நிரூபித்துக் கொண்டே இருந்தது டிவிஎஸ் வீகோ.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாட்டம்!

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் இதுவரை பயணித்த அனுபவம் பன்மடங்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் வழங்கியது. பொங்கல் பண்டிகை கொண்டாட்ட பதிவுகளை, அடுத்த இரு நாட்களில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

English summary
We explore Enchanting Tamil Nadu the day before Pongal to experience Pongal at its best and know what goes into preparation.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more