பொங்கலோ பொங்கல்... டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க் டீம்!

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் பயணித்து பதிவு செய்கிறோம். பொங்கல் பண்டிகை கொண்டாட்ட பதிவுகளை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் சூரிய பகவானுக்கு படையலிட்டு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக முதல் நாள் பொங்கல் பண்டிகை கொாண்டாடப்படுகிறது. அதிகாலையிலேயே டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை காண்பதற்கு கிராமத்து தெருக்களில் ரவுண்டு அடித்தோம்.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க் டீம்!

கடும் குளிர் நிலவியபோதும், டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் எஞ்சின் எந்த திக்கு திணறல் இல்லாமல் செல்ஃப் ஸ்டார்ட் செய்ய முடிந்தது. விடியற்காலையிலேயே பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு அலங்கரிப்பதில் ஆர்வமாக ஈடுபட்டு இருந்தனர். அடுத்து பொங்கல் பண்டிகை பூஜையை துவங்குவதற்கு ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டனர். கரும்பு மற்றும் இஞ்சி, மஞ்சள் கொத்துகளுடன் பூஜை அறையும், பொங்கல் பானைகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க் டீம்!

நகர்ப்புறங்களில் விறகு பிரச்னையால் கேஸ் அடுப்பில் பித்தளை பாத்திரத்தில் பொங்கலிடுவது இப்போது வழக்கமாகிவிட்டது. ஆனால், கிராமங்களில் இன்றும் அடுப்புக் கட்டி, அதில் மண்பானைகளில் பொங்கலிடுவதுதான் வழக்கம். அங்கு இந்த வழக்கம் பலர் வீடுகளில் மாறாமல் இருப்பதே ஆறுதல் தந்தது. ஒரு பானையில் சர்க்கரை பொங்கலும், மற்றொரு பானையில் வெண் பொங்கலும் சமைத்து சூரிய பகவானுக்கு படையலிடுவது வழக்கம்.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க் டீம்!

மண்பானைகளில் மஞ்சள் கொத்துகளை கட்டி அடுப்பில் பானையை ஏற்றினர். பின்னர், புத்தரிசி இட்டு பொங்கல் சமையலை துவங்கினர். பானையில் பொங்கல் பொங்கத் துவங்கியதும் 'பொங்கலோ பொங்கல்' என்ற குடும்பத்தினர் ஒன்று கூடி உரக்க கூறி பொங்கலை கொண்டாடினர்.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க் டீம்!

பின்னர், சூரிய பகவானுக்கு வாழை இலைகளில் பொங்கலை படையலிட்டு குடும்பத்தினர் ஒன்றுபட்டு வழிபடுகின்றனர். பொங்கல் பொங்கி வருவது போன்று இந்த ஆண்டு முழுவதும் வளமையாக இருக்க வேண்டும் என்பதே பிரார்த்தனையாக இருந்தது.

 டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க் டீம்!

இரண்டாம் நாள் விவசாயத்திற்கு உழைத்த கால்நடைகளை நன்றி பாராட்டும் விதத்தில், மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாடு இருக்கும் வீடுகளுக்கு டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் விசிட் அடித்தோம். மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, மாலைகளை போட்டு அலங்கரித்தனர். பின்னர், பொங்கலிட்டு, அந்த பொங்கலை மாடுகளுக்கு வழங்குகின்றனர்.

 டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க் டீம்!

அப்போது, தப்பு தாளங்களின் முழங்க மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இப்போது கிராமத்தில் மாடுகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஆனாலும், சில கிராமங்களில் ஊரில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் ஒரே இடத்தில் வைத்து பொங்கல் கூறுகின்றனர்.

 டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க் டீம்!

மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கல் உற்சாகம் ஒவ்வொருவரிடமும் காண முடிந்தது. உழைத்து களைத்த விவசாய பெருங்குடி மக்கள், இதனை களிப்பில் திளைக்கும் தினமாக கருதி கொண்டாடுகின்றனர். தமிழை போற்றும் இலக்கியப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளுடன் இந்த தினம் களை கட்டுகிறது.

 டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க் டீம்!

தமிழர்களின் வீரத்தை பரைசாற்றும் ஏறுதழுவுதல் உள்ளிட்ட வீர விளையாட்டுகளும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இப்போது ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதால், பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக் காளைகள் கொட்டடியிலேயே சீற்றத்தை காட்டி நிற்கின்றன.

 டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க் டீம்!

பெரும்பாலான மக்கள் ஆற்றங்கரை மற்றும் கடற்கரைக்கு குடும்பத்தினர், நண்பர்களுடன் சென்று பொழுதை கழிப்பதையும் காண முடிந்தது. இன்றைய தினம்,வேளாங்கன்னி கடற்கரைக்கு சென்று காணும் பொங்கலை மக்களுடன் சேர்ந்து கொண்டாடினோம்.

 டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க் டீம்!

பருவ மழை பொய்த்தாலும், விவசாயம் பாதித்தாலும் வழக்கமான உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடினர். எந்த சூழலிலும் பாரம்பரியத்தை தமிழர்கள் விட்டுக் கொடுக்கமாட்டார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் பயணம் நல்வாய்ப்பாக அமைந்தது.

 டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பொங்கல் கொண்டாடிய டிரைவ்ஸ்பார்க் டீம்!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புற சாலைகளாகட்டும், கிராமப்புற சாலைகளாகட்டும், அனைத்து வித பயன்பாட்டிற்கும் மிகச் சிறந்த தொழில்நுட்பத்தையும், வடிவமைப்பையும் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் பெற்றிருப்பதை இந்த பயணம் மூலமாக வெகுவாக உணர முடிந்தது.

Most Read Articles
English summary
We explore Enchanting Tamil Nadu the day before Pongal to experience Pongal at its best and know what goes into celebration.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X