இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனையை அதிகரிக்க புதிய டிரென்டை உருவாக்கும் முயற்சியில் டிவிஎஸ்..!!

Written By:

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, தற்போது மின்சார ஆற்றலில் இயங்கும் ஸ்கூட்டரை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் முடிவில் டிவிஎஸ்

இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கான சந்தை ஏகத்துக்கும் எகிறக்கிடைக்கிறது. பைக்குகளுக்கு இணையான விற்பனை திறனை தற்போது ஸ்கூட்டர்களும் பெறுகின்றன.

மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் முடிவில் டிவிஎஸ்

ஹோண்டா, ஹீரோ, யமஹா போன்ற நிறுவனங்களே ஸ்கூட்டர் விற்பனையில் இந்தியாவில் கலக்கத்தொடங்க, தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் கோதாவில் களமிறங்கியது.

Recommended Video - Watch Now!
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் முடிவில் டிவிஎஸ்

தற்போது இந்தியாவின் ஸ்கூட்டர் விற்பனை செய்யும் நிறுவனங்களில் டிவிஎஸ் தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டமுள்ளது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் முடிவில் டிவிஎஸ்

குறிப்பாக இதனுடைய ஜூப்பிட்டர் மற்றும் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 மாடல்கள் இந்தியாவில் விற்பனை திறனில் ஸ்கூட்டர்களுக்கான பட்டியலில் டாப் இடங்களை பிடித்திருக்கின்றன.

மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் முடிவில் டிவிஎஸ்

மேலும் 110சிசி திறன் பெற்ற வாகனங்களை தொடர்ந்து டிவிஎஸ் 125சிசி திறனில் ஸ்கூட்டர் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த புதிய மாடலின் விற்பனை இந்தியாவில் பண்டிகை காலங்களில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் முடிவில் டிவிஎஸ்

இதற்கிடையில் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சந்தை உருவாகி வருவதை உணர்ந்த டிவிஎஸ் புதியதாக மின்சார ஆற்றல் பெற்ற ஸ்கூட்டரை தயாரிக்கும் பணிகளில் இறங்கியுள்ளது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் முடிவில் டிவிஎஸ்

எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பல நாடுகள் முயன்று கொண்டுயிருக்கயில், அதற்கான வாய்ப்பை தற்போதே உருவாக்கினால் மிகவும் உசிதமாக இருக்கும் என டிவிஎஸ் விரும்புகிறது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் முடிவில் டிவிஎஸ்

மேலும் இந்திய அரசும் மின்சார வாகன பயன்பாட்டை மக்களிடம் உருவாக்க பல்வேறு முயற்சிகளை கையாள நினைத்து வருகிறது. இதில் தற்போது டிவிஎஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் முடிவில் டிவிஎஸ்

அதற்காக தற்போது பேட்டரிகளை தயாரிக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக டிவிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் முடிவில் டிவிஎஸ்

இந்தாண்டின் இறுதிக்குள் மின்சார ஸ்கூட்டரை தயாரித்து 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் டிவிஎஸ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் முடிவில் டிவிஎஸ்

மேலும் ஸ்கூட்டருக்கான மின்சார மோட்டாரை டிவிஸ் நிறுவனம் தயாரிக்கிறதா அல்லது இறக்குமதி செய்து பிறகு வாகனங்களில் பொருத்தப்படுமா என்பது தெரியவில்லை.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
Read in Tamil: TVS Motor Company Working on New Electric Scooter to sweep the electrical market. Click for Details...
Story first published: Tuesday, August 8, 2017, 16:21 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark