புதிய 400சிசி அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளை இந்தியாவில் களமிறக்கும் யுஎம்!

Written By:

அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் க்ரூஸர் வகை மோட்டார்சைக்கிள்கள் மூலமாக இந்திய வாடிக்கையாளர்களிடம் வெகு சீக்கிரமாக பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில், மார்க்கெட்டை தக்க வைக்கும் விதத்தில், அடுத்து ஒரு புதிய அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
புதிய 400சிசி அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளை இந்தியாவில் களமிறக்கும் யுஎம்!

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை குறிவைத்து பல நிறுவனங்கள் இப்போது காய் நகர்த்த துவங்கி இருக்கின்றன. ஹோண்டா நிறுவனம் கூட இந்த ரகத்தில் புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்த வரிசையில், யுஎம் நிறுவனமும் இணைய இருக்கிறது.

புதிய 400சிசி அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளை இந்தியாவில் களமிறக்கும் யுஎம்!

ஆம், புதிய அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளை யுஎம் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ரெனிகேட் கமான்டோ க்ளாசிக் மற்றும் ரெனிகேட் மொஜவே ஸ்பெஷல் எடிசன் ஆகிய புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுக நிகழ்வில் இந்த புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video
2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய 400சிசி அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளை இந்தியாவில் களமிறக்கும் யுஎம்!

இந்த புதிய மோட்டார்சைக்கிளில் 350சிசி அல்லது 400சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்று யுஎம் நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், 350சிசி முதல் 400 சிசி இடையிலான ரகத்தில் புதிய வி- ட்வின் எஞ்சினை உருவாக்கி வருவதாக யுஎம் தெரிவித்திருக்கிறது.

புதிய 400சிசி அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளை இந்தியாவில் களமிறக்கும் யுஎம்!

எனவே, இந்த புதிய எஞ்சின்தான் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் பொருத்தப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியான விஷயமாகவே பார்க்க முடியும்.

புதிய 400சிசி அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளை இந்தியாவில் களமிறக்கும் யுஎம்!

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த புதிய மாடல் பார்வைக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய 400சிசி அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளை இந்தியாவில் களமிறக்கும் யுஎம்!

இந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடல் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனால், அடுத்த சில மாதங்களில் இந்த புதிய மாடல் குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

English summary
UM Motorcycles is developing a new adventure motorcycle with an engine capacity of around 350cc to 400cc.
Story first published: Tuesday, September 5, 2017, 19:08 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos