ரூ.12 லட்சத்தில் அறிமுகமான வெஸ்பா ஸ்கூட்டருக்கு ஏற்பட்ட கதி என்ன தெரியுமா?

Written By:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது. ரூ.12 லட்சத்தில் இந்த ஸ்கூட்டரை பார்த்து இந்தியர்கள் வியப்பும், திகைப்பும் அடைந்தனர்.

ரூ.12 லட்சத்தில் அறிமுகமான வெஸ்பா ஸ்கூட்டரின் கதியை பார்த்தீங்களா?

வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி ஸ்கூட்டர் மிகவும் பிரத்யேகமான அம்சங்களை கொண்டது. அர்மானி நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்கூட்டரை வெஸ்பாவின் தாய் நிறுவனமான பியாஜியோ உருவாக்கியிருந்தது.

ரூ.12 லட்சத்தில் அறிமுகமான வெஸ்பா ஸ்கூட்டரின் கதியை பார்த்தீங்களா?

இந்த ஸ்கூட்டர் இந்திய பணக்காரர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு பொய்யானது. இந்தியாவில் ஒரு வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி ஸ்கூட்டர் கூட விற்பனையாகவில்லை.

ரூ.12 லட்சத்தில் அறிமுகமான வெஸ்பா ஸ்கூட்டரின் கதியை பார்த்தீங்களா?

இந்த ஸ்கூட்டரில் ஃப்ளோட்டிங் சீட் என்ற விசேஷ இருக்கை கொடுக்கப்பட்டு இருந்தது. பிரிமியம் லெதர் கவர், மேட் பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ண கலவை, கிளாசிக் வீல் ரிம்கள், பழைமையான ஸ்கூட்டர்களில் இருப்பது போன்ற ஸ்டோரேஜ் பேக் ஆகியவை இந்த ஸ்கூட்டரின் தனித்துவமான அம்சங்களாக இருந்தன.

Recommended Video - Watch Now!
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ரூ.12 லட்சத்தில் அறிமுகமான வெஸ்பா ஸ்கூட்டரின் கதியை பார்த்தீங்களா?

எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டிஸ்க் பிரேக்குகள் போன்றவை இந்த ஸ்கூட்டரின் பிற சிறப்புகள். இந்த ஸ்கூட்டரில் 11 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது.

ரூ.12 லட்சத்தில் அறிமுகமான வெஸ்பா ஸ்கூட்டரின் கதியை பார்த்தீங்களா?

இந்த ஸ்கூட்டரில் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இருந்தன. இந்த ஸ்கூட்டர் இறக்குமதி செய்து விற்பனைக்கு வந்தது.

ரூ.12 லட்சத்தில் அறிமுகமான வெஸ்பா ஸ்கூட்டரின் கதியை பார்த்தீங்களா?

ஆனால், ரூ.12 லட்சம் விலை என்பது ஸ்கூட்டருக்கு பொருந்தாத ஒன்றாக இந்தியர்கள் கருதிவிட்டனர் போலும். இதனால், ஒரு ஸ்கூட்டர் கூட இந்தியாவில் விற்பனையாகாத நிலை ஏற்பட்டது.

ரூ.12 லட்சத்தில் அறிமுகமான வெஸ்பா ஸ்கூட்டரின் கதியை பார்த்தீங்களா?

இதனையடுத்து, இந்த ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளது பியாஜியோ நிறுவனம். பொதுவாகவே வெஸ்பா நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் பிரிமியம் ரகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

ரூ.12 லட்சத்தில் அறிமுகமான வெஸ்பா ஸ்கூட்டரின் கதியை பார்த்தீங்களா?

ஆனால், ரூ.12 லட்சம் என்பது மிக அதிகம் என்று வாடிக்கையாளர்கள் கருதியதும் இந்த மாடலை இந்திய சந்தையில் ஃபெயிலியர் ஆக்கிவிட்டது. பொருளுக்கும், தரத்திற்கும் சரியான விலை நிர்ணயித்தால் மட்டுமே இந்தியர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை இதன் மூலமாக பியாஜியோ பாடம் கற்றிருக்கும் என்று நம்பலாம்.

மேலும்... #வெஸ்பா #vespa
English summary
Piaggio introduced the Vespa 946 Emporio Armani as a flagship offering from the company. But the scooter failed to attract the Indian customers, and finally, after nine months it has been pulled out of the Indian market.
Story first published: Friday, September 1, 2017, 8:34 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark