புதிய வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு: விபரம்!

Written By:

வெஸ்பா நிறுவனம் புதிய மின்சார ஸ்கூட்டர் மாடலை மிலன் மோட்டார்சைக்கிள் ஷோவில் வெளியிட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
புதிய வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு: விபரம்!

அடுத்து வரும் ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் படிப்படியாக வழக்கொழியும் நிலை இருக்கிறது. இதனால், எதிர்காலத்தில் மின்சார வாகனங்களுக்கான காலமாக கருதப்படுகிறது. இதனால், அனைத்து நிறுவனங்களும் மின்சார வாகனங்களை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

புதிய வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு: விபரம்!

அந்த வகையில், ஸ்கூட்டர் தயாரிப்பில் புகழ்பெற்ற வெஸ்பா நிறுவனம் புதிய மின்சார ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டு இருக்கிறது. தனது தாயகமான இத்தாலியில் நடந்து வரும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய ஸ்கூட்டர் வெஸ்பா எலக்ட்ரிக்கா என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video
[Tamil] TVS Jupiter Classic Launched In India - DriveSpark
புதிய வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு: விபரம்!

கடந்த ஆண்டு மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த ஸ்கூட்டர் தற்போது தயாரிப்பு நிலை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

புதிய வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு: விபரம்!

இந்த புதிய வெஸ்பா மின்சார ஸ்கூட்டர் வெஸ்பா பிரைமாவெரா ஸ்கூட்டரின் அடிப்படையிலான மின்சார ஸ்கூட்டராக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

புதிய வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு: விபரம்!

புதிய வெஸ்பா மின்சார ஸ்கூட்டரில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 5.2 பிஎச்பி பவரையும், சீரான இயக்கத்தின்போது 2.6 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதாவது, 50சிசி பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையான திறனை பெற்றிருக்கிறது.

புதிய வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு: விபரம்!

இந்த மின்சார ஸ்கூட்டரில் இருக்கும் லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 99 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

புதிய வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு: விபரம்!

இதில், ஹைப்ரிட் மாடலும் உண்டு. அதில், சிறிய பெட்ரோல் எஞ்சின் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பயணத்தின்போது பேட்டரி சார்ஜ் முழுமையாக தீர்ந்து போகும் பிரச்னையை சமாளிக்க உதவும்.

புதிய வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு: விபரம்!

இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய வெஸ்பா எலக்ட்ரிக்கா ஸ்கூட்டர் உற்பத்திக்கு செல்லும் என்று தகவல்கள் கூறுகின்றன. வரும் ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வெஸ்பா நிறுவனம் புதிய மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும்... #வெஸ்பா #vespa #eicma
English summary
Piaggio has revealed its new electric scooter, the Vespa Elettrica at the 2017 EICMA motorcycle show in Milan, Italy. T
Story first published: Wednesday, November 8, 2017, 17:43 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos