பியாஜியோ விரைவில் வெளியிடும் வெஸ்பா ரெட் ஸ்கூட்டரின் சிறப்புகள் உங்களுக்கு தெரியுமா..??

Written By:

இத்தாலி நாட்டை சேர்த்த வாகன நிறுவனம் பியாஜியோ, தனது புதிய வெஸ்பா ரெட் ஸ்கூட்டரை விறுவிறுவென வெளியிட விரைந்து தயாராகி வருகிறது.

பியாஜியோ வெளியிடும் வெஸ்பா ரெட் ஸ்கூட்டரின் பின்னணி..!!

இந்திய சந்தையை குறிவைத்து களமிறங்கும் இந்த ஸ்கூட்டர் முற்றிலும் சிவப்பு நிறத்தாலான தோற்றப்பொலிவை பெற்றுள்ளது.

பார்க்கவே கவர்ந்திழுக்கும் இந்த ஸ்கூட்டர், இந்திய வாடிக்கையாளர்களுக்காக அக்டோபர் 3ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

பியாஜியோ வெளியிடும் வெஸ்பா ரெட் ஸ்கூட்டரின் பின்னணி..!!

விற்பனையை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பியாஜியோ நிறுவனம் வெஸ்பா ரெட் ஸ்கூட்டரை வெளியிடவில்லை என்பது இங்கு சுவாரஸ்ய பின்னணி.

பியாஜியோ வெளியிடும் வெஸ்பா ரெட் ஸ்கூட்டரின் பின்னணி..!!

எய்ட்ஸ், காசநோய், மற்றும் மலேரியா போன்ற நோய்களால் பாதித்த மக்களின் சிகிச்சைக்காக உதவும் ரெட் என்ற தொண்டு நிறுவனத்துடன் பியாஜியோ கைக்கோர்த்துள்ளது.

Recommended Video - Watch Now!
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
பியாஜியோ வெளியிடும் வெஸ்பா ரெட் ஸ்கூட்டரின் பின்னணி..!!

தற்போது அறிமுகமாகும் வெஸ்பா ரெட் ஸ்கூட்டர் மூலம் கிடைக்கும் வருவாயில் பாதியை , அந்த தொண்டு நிறுவனத்திற்கு வழங்கிட பியாஜியோ முடிவு செய்துள்ளது.

பியாஜியோ வெளியிடும் வெஸ்பா ரெட் ஸ்கூட்டரின் பின்னணி..!!

உலகளவில் இந்த ஸ்கூட்டர் வெஸ்பா 946 என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது. விற்பனை ஆகும் ஒவ்வொரு ஸ்கூட்டரில் இருந்தும் 150 அமெரிக்கா டாலர்கள் பியாஜியோவிடம் இருந்து ரெட் நிறுவனத்திற்கு சென்றடையும்.

பியாஜியோ வெளியிடும் வெஸ்பா ரெட் ஸ்கூட்டரின் பின்னணி..!!

2006 ல் நிறுவப்பட்ட ரெட் தொண்டு நிறுவனம், உலகளாவில் நிதியத்தில் இருந்து பெறப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மூலம், உலக நாடுகள் பலவற்றி எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறது.

இதில் தன்னை இணைத்துக்கொண்டு சமூகப் பணி ஆற்றிட பியாஜியோ அறிமுகம் செய்யும் மாடல் தான் 946 ரெட் ஸ்கூட்டர்.

பியாஜியோ வெளியிடும் வெஸ்பா ரெட் ஸ்கூட்டரின் பின்னணி..!!

இந்தியாவில் 946 ரெட் ஸ்கூட்டர்களுக்கு பதிலாக வெஸ்பா மாடலில் இங்கு பயன்பாட்டில் உள்ள 125சிசி மற்றும் 150சிசி திறன் பெற்ற ஸ்கூட்டர்களிலேயே சிவப்பு பூச்சு கொண்டு வெளியிடப்படும்.

பியாஜியோ வெளியிடும் வெஸ்பா ரெட் ஸ்கூட்டரின் பின்னணி..!!

வெஸ்பாவின் விஎக்ஸ்எல், எஸ்எக்ஸ்எல், எலிகெனட் மற்றும் சாதரண வெஸ்பா ஸ்கூட்டர் போன்ற வேரியண்டுகளில் ரெட் மாடல் அறிமுகமாகும் என பியாஜியோ அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக பியாஜியோ நிறுவனம் வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி என்ற மாடல் ஸ்கூட்டரை வெளியிட்டது.

பியாஜியோ வெளியிடும் வெஸ்பா ரெட் ஸ்கூட்டரின் பின்னணி..!!

பூனே எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ.12.04 லட்சம் விலையில் அறிமுகமான இந்த ஸ்கூட்டர், பியாஜியோ மற்றும் ஜியோர்கிரோ கூட்டணி முடிவுக்கு வந்த பிற்பாடு அதற்கான உற்பத்தி நிறுத்தப்பட்டது.

பியாஜியோ வெளியிடும் வெஸ்பா ரெட் ஸ்கூட்டரின் பின்னணி..!!

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள வெஸ்பா மாடலில் 125சிசி அல்லது 150சிசி எஞ்சின் கொண்ட ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகி வருகின்றன.

11.44 பிஎச்பி முதல் 10.45 பிஎச்பி வரை ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த ஸ்கூட்டர்கள், இந்தியா வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான அடையாளமாக உள்ளன.

பியாஜியோ வெளியிடும் வெஸ்பா ரெட் ஸ்கூட்டரின் பின்னணி..!!

ஹெச்.ஐ.வி பாதித்த மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் புதிய வெஸ்பா ரெட் ஸ்கூட்டரை பியாஜியோ நிறுவனம் வெளியிடுவது பாராட்டத்தக்க ஒன்று.

பியாஜியோ வெளியிடும் வெஸ்பா ரெட் ஸ்கூட்டரின் பின்னணி..!!

பயன்பாட்டில் இருக்கும் வெஸ்பா ஸ்கூட்டர்கள் இந்தியாவில் ரூ.71,000 முதல் ரூ.97,000 வரையிலான விலையில் விற்பனை ஆகி வருகின்றன.

பியாஜியோ வெளியிடும் வெஸ்பா ரெட் ஸ்கூட்டரின் பின்னணி..!!

அவற்றை விட கூடுதலாக ரூ.5,000 முதல் ரூ.10,000 விலையில் வெஸ்பா ரெட் மாடல் ஸ்கூட்டர் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #பியாஜியோ #piaggio
English summary
Read in Tamil: Italian two-wheeler manufacturer Piaggio is all set to launch a new scooter model named as Vespa RED.Click for Details...
Story first published: Thursday, September 28, 2017, 13:35 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark