இந்தியாவில் தனிசிறப்பு பெற்ற வெஸ்பா ரெட் ஸ்கூட்டர் ரூ. 87,009 விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

பியாஜியோ நிறுவனம் வெஸ்பா மாடலில் புதிய ரெட் சிறப்பு பதிப்பு ஸ்கூட்டரை ரூ.87,009 (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

பியாஜியோ நிறுவனம் வெளியிட்ட புதிய வெஸ்பா ரெட் ஸ்கூட்டர்..!!

தற்போது பயன்பாட்டில் உள்ள வெஸ்பா 125 ஸ்கூட்டர் மாடலை அடிப்படையாக வைத்துதான் இந்த புதிய வெஸ்பா ரெட் தயாராகியுள்ளது.

பியாஜியோ நிறுவனம் வெளியிட்ட புதிய வெஸ்பா ரெட் ஸ்கூட்டர்..!!

எய்ட்ஸ் உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் உலகளவில் பிரபலமான ரெட் என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது.

பியாஜியோ நிறுவனம் வெளியிட்ட புதிய வெஸ்பா ரெட் ஸ்கூட்டர்..!!

ரெட் அமைப்புடன் இணைந்து எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள பியாஜியோ நிறுவனமும் கைக்கோர்த்துள்ளது.

அதற்கான முதற்கட்டமாக இந்தியாவில் பியாஜியோ வெளியிடும் சிறப்பு பதிப்பே, வெஸ்பா ரெட் ஸ்கூட்டர் மாடல்.

Recommended Video - Watch Now!
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
பியாஜியோ நிறுவனம் வெளியிட்ட புதிய வெஸ்பா ரெட் ஸ்கூட்டர்..!!

இந்தியாவில் விற்பனை ஆகும் ஒவ்வொரு வெஸ்பா ரெட் ஸ்கூட்டர் மூலம் ரூ. 3,277 பணம் ($50) ரெட் தன்னார்வ அமைப்பிற்கு சென்றடையும் என பியாஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பியாஜியோ நிறுவனம் வெளியிட்ட புதிய வெஸ்பா ரெட் ஸ்கூட்டர்..!!

தற்போது பயன்பாட்டில் இருக்கும் வெஸ்பா ஸ்கூட்டரின் அதே செயல்திறன் மற்றும் வடிவமைப்பு தான் இதற்கும் உள்ளது. தோற்றப்பொலிவில் மட்டுமே வெஸ்பா ரெட் தனித்து நிற்கிறது.

பியாஜியோ நிறுவனம் வெளியிட்ட புதிய வெஸ்பா ரெட் ஸ்கூட்டர்..!!

வெஸ்பா ரெட் ஸ்கூட்டரில் பூச்சு, இருக்கை, பேனல்கள் மற்றும் அலாய் சக்கரங்கள் அனைத்தும் சிவப்பு நிறத்திலேயே காட்சியளிக்கின்றன.

125சிசி திறன் பெற்றுள்ள வெஸ்பா ரெட் ஸ்கூட்டரின் எஞ்சின் 10 பிஎச்பி பவர் மற்றும் 10.6 என்.எம் டார்க் திறனை தர வல்லது.

பியாஜியோ நிறுவனம் வெளியிட்ட புதிய வெஸ்பா ரெட் ஸ்கூட்டர்..!!

விமானத்தை பின்பற்றி உருவாக்கப்பட்ட ஒற்றை பக்க சஸ்பென்ஷன் அமைப்பு, 220மிமீ முன்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் 12-இஞ்ச் அலாய் சக்கரங்கள் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன.

பியாஜியோ நிறுவனம் வெளியிட்ட புதிய வெஸ்பா ரெட் ஸ்கூட்டர்..!!

ஒற்றை துண்டு எஃகு கட்டமைப்பில் தயாராகியுள்ள வெஸ்பா ரெட் ஸ்கூட்டரில், உயர் வரையறை கொண்ட சிவப்பு பூச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பியாஜியோ நிறுவனம் வெளியிட்ட புதிய வெஸ்பா ரெட் ஸ்கூட்டர்..!!

ஸ்கூட்டரின் தோற்றத்திற்கு ஏற்றவாறு வெஸ்பா ரெட் மாடலுக்கான ஹெல்மெட், டி-ஷர்ட் மற்றும் தொப்பி போன்றவை வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு நிறத்திலேயே வழங்கப்படவுள்ளன.

பியாஜியோ நிறுவனம் வெளியிட்ட புதிய வெஸ்பா ரெட் ஸ்கூட்டர்..!!

இதுபற்றி பியாஜியோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டியாகோ கிராஃபி பேசும்போது,

"சமூக அக்கறையுடன், சமூக நலன் சார்ந்த நோக்கத்துடன் வெஸ்பா ரெட் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியானதில் எங்கள் நிறுவனத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி" என்று கூறினார்.

பியாஜியோ நிறுவனம் வெளியிட்ட புதிய வெஸ்பா ரெட் ஸ்கூட்டர்..!!

ஹெச்.ஐ.வி பாதித்த மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் புதிய வெஸ்பா ரெட் ஸ்கூட்டரை பியாஜியோ நிறுவனம் வெளியிடுவது பாராட்டத்தக்க ஒன்று.

வாடிக்கையாளர்கள் மத்தியிலும் இதற்கான வரவேற்பு எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்

மேலும்... #பியாஜியோ #piaggio
English summary
Read in Tamil: Piaggio India has launched the new Vespa RED scooter in India. Click for Price, Specifications and More...
Story first published: Tuesday, October 3, 2017, 17:50 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark