நடுத்தர சாகச பைக் தயாரிப்பில் மும்முரம் காட்டும் யமஹா

புதிய அட்வெஞ்சர் பைக் ஒன்றினை தயாரிக்கும் பணியில் யமஹா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக காணலாம்.

By Arun

உயர் திறன்மிக்க பைக்குகளின் டிமாண்ட் சமீபகாலமாக வியக்கத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. பிஎம்டபிள்யு, ஹோண்டா, இந்தியன், ஹார்லி டேவிட்சன், கவாஸாகி, டுகாட்டி, ஏப்ரிலியா, டிரையம்ப், எம்வி அகஸ்டா போன்ற நிறுவனங்கள், சூப்பர் பைக் மற்றும் அட்வெஞ்சர் பைக்குகளை போட்டி போட்டுக்கொண்டு அறிமுகப்படுத்தி வருகின்றன.

புதிய சாகச பைக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள யமஹா

இந்த செக்மெண்ட் பைக்குகளில் மற்ற நிறுவனங்களுடன் கடும் போட்டியை சந்தித்து வரும் யமஹா நிறுவனம், தற்போது புதிதாக சாகச பயணத்திற்கான பிரத்யேக 3 சிலிண்டர்கள் கொண்ட 850சிசி அட்வெஞ்சர் பைக்கை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது.

புதிய சாகச பைக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள யமஹா

யமஹாவின் போட்டி நிறுவனங்களான பிஎம்டபிள்யூ மற்றும் ஹோண்டா நிறுவன பைக்குகளுடன் போட்டியளிக்கும் வகையில் தற்போது யமஹாவின் ‘டூயல் ஸ்போர்ட் எக்ஸ்டி 1200இசட் சூப்பர் டெனர்' பைக் விளங்கி வருகிறது.

புதிய சாகச பைக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள யமஹா

இந்நிலையில், யமஹா அடுத்து தயாரிக்க உள்ள மத்திய தர அட்வெஞ்சர் பைக் அதிகபட்சமாக 115 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும் இதன் டிசைன் டெனர் சீரீஸ் பைக்குகளில் இருந்து பெறப்பட்டுள்ளது.

புதிய சாகச பைக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள யமஹா

இதில் வயர் ஸ்போக் வீல், மெடல் பேஷ் பிளேட், லாங் சஸ்பென்ஷன் ஆகியவையும் இடம்பெறலாம் எனவும் ஆஃப் டோடிங்கில் சிறந்த அனுபவத்தை இது வழங்கவல்லது என்றும் தெரியவருகிறது.

புதிய சாகச பைக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள யமஹா

இந்த பைக் அறிமுகமாகும் போது தற்போது விற்பனையில் சிறந்து விளங்கும் ‘பிஎம்டபிள்யூ எஃப்800 ஜிஎஸ்', ‘டுகாட்டி மல்டிஸ்ட்ரடா950' மற்றும் ‘டிரையம்ப் டைகர்800' ஆகிய பைக்குகளுக்கு கடும் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சாகச பைக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள யமஹா

இந்த நிலையில் யமஹா நிறுவனம் நெடுந்தூர மற்றும் சாகச பயணத்திற்கென தயாரிக்கப்பட்ட பிரத்யேக ‘எம்டி-09 ட்ரேசர்'என்ற பைக்கையும் தற்போது விற்பனை செய்து வருகிறது.

புதிய சாகச பைக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள யமஹா

யமஹாவின் இந்த புதிய பைக்கில் ‘எம்டி-09' மாடலில் உள்ள இஞ்சின் பொருத்தப்படும். இது நீரால் குளிர்விக்கப்படும் 3 சிலிண்டர்கள் கொண்ட 849சிசி இஞ்சின் ஆகும். இவை 10,000 ஆர்பிஎம்-ல் 113 ஹச்பி ஆற்றலையும், 8,500 ஆர்பிஎம்-ல் 93 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும்.

புதிய சாகச பைக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள யமஹா

இந்த பைக் அறிமுகம் குறித்து யமஹா நிறுவனம் அதிகாரப்பூர்வான தகவல் வெளியிடாத நிலையில், அதற்கான அறிவிப்பு இந்த ஆண்டின் இறுதியில் வெளிவரலாம என எதிர்பார்க்கப்படுகிறது.

யமஹாவின் 60ஆம் ஆண்டு நிறைவு எடிசனான ஒய்இசட்எஃப்- ஆர்1 பைக்கின் படங்களை கீழ் உள்ள கேலரியில் காணலாம்:

Most Read Articles
English summary
The mid-sized off-road machine from Yamaha will likely borrow the engine from the MT-09.
Story first published: Tuesday, March 7, 2017, 10:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X