மேட் ஃபினிஷுடன் யமஹாவின் புதிய பைக், ஸ்கூட்டர் மாடல்கள் அறிமுகம்!

Written By:

பண்டிகை காலத்தையொட்டி, வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விதத்தில் கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் கார், பைக்குகளின் ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், யமஹா நிறுவனமும் தனது பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் கூடுதல் சிறப்பம்சம் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

யமஹா பைக், ஸ்கூட்டர்களின் விசேஷ மாடல்கள் அறிமுகம்!

'டார்க் நைட்' என்ற பெயரில் இந்த சிறப்பு பதிப்பு மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. யமஹா எஃப்இசட்- எஸ் எஃப்ஐ, சல்யூட்டோ ஆர்எக்ஸ் மற்றும் சிக்னஸ் ரே இசட்ஆர் டிஸ்க் பிரேக் ஸ்கூட்டர் ஆகியவற்றில் இந்த சிறப்பு பதிப்பு மாடல்கள் வந்துள்ளன.

யமஹா பைக், ஸ்கூட்டர்களின் விசேஷ மாடல்கள் அறிமுகம்!

இந்த டார்க் நைட் சிறப்பு பதிப்பு மாடல்களில் கருப்பு வண்ண மேட் ஃபினிஷ் தரத்தில் கிடைக்கும். அத்துடன் க்ரோம் பாகங்கள் மூலமாக அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
2017 DSK Benelli 302 R Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
யமஹா பைக், ஸ்கூட்டர்களின் விசேஷ மாடல்கள் அறிமுகம்!

யமஹா எஃப்இசட் எஸ்- எஃப்ஐ மாடலின் டார்க் நைட் பைக்கில் அதிகபட்சமாக 13 பிஎச்பி பவரையும், 12.8 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 149சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

யமஹா பைக், ஸ்கூட்டர்களின் விசேஷ மாடல்கள் அறிமுகம்!

யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் டார்க் நைட் மாடலில் 7.37 பிஎச்பி பவரையும், 8.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

யமஹா பைக், ஸ்கூட்டர்களின் விசேஷ மாடல்கள் அறிமுகம்!

யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர் டார்க் நைட் டிஸ்க் பிரேக் மாடலில் 7.10 பிஎச்பி பவரையும், 8.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 113சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் வி பெல்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

யமஹா பைக், ஸ்கூட்டர்களின் விசேஷ மாடல்கள் அறிமுகம்!

புதிய யமஹா எஃப்இசட்- எஸ் எஃப்ஐ பைக்கின் டார்க் நைட் எடிசன் மாடல் ரூ.84,012 எக்ஸ்ஷோரூம் விலையிலும், சலூட்டோ ஆர்எக்ஸ் பைக்கின் டார்க் நைட் எடிசன் மாடல் ரூ.48,721 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர் டிஸ்க் பிரேக் வசதி கொண்ட டார்க் நைட் ஸ்கூட்டர் ரூ.56,898 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

மேலும்... #யமஹா #yamaha
English summary
India Yamaha Motor Pvt. Ltd. has introduced the new 'Dark Night' variant of motorcycles and scooter. The new variant is offered in FZ-S FI, Saluto RX and Cygnus Ray ZR disc brake models.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark