புதிய யமஹா ஃபேஸர் 250 பைக்கின் அறிமுக தேதி விபரம்!

Written By:

இந்திய இளைஞர்கள் மத்தியில் 250சிசி ரக பைக்குகளுக்கு இருக்கும் வரவேற்பை கருதி, யமஹா நிறுவனம் எஃப்இசட்25 பைக் மாடலை அறிமுகம் செய்தது. இது நேக்கட் வகை மாடல்.

இந்த நிலையில்,  இந்த பைக்கின் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் ரக மாடலையும் இப்போது யமஹா அறிமுகம் செய்ய இருக்கிறது.

 புதிய யமஹா ஃபேஸர் 250 பைக்கின் அறிமுக தேதி விபரம்!

ஆம். யமஹா ஃபேஸர் 250 என்ற அந்த புதிய பைக் மாடல் இந்தியாவில் வைத்து தீவிரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த புதிய யமஹா பைக்கின் வருகையை இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 புதிய யமஹா ஃபேஸர் 250 பைக்கின் அறிமுக தேதி விபரம்!

இந்தநிலையில், இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, வரும் 21ந் தேதி இந்த புதிய பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வரும் 21ந் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்புக்கான அழைப்பை யமஹா நிறுவனம் அனுப்பி இருக்கிறது. இது நிச்சயமாக யமஹா ஃபேஸர் 250 பைக்கின் அறிமுக நிகழ்வாகவே இருக்கும் என்பது கணிப்பு.

 புதிய யமஹா ஃபேஸர் 250 பைக்கின் அறிமுக தேதி விபரம்!

புதிய யமஹா எஃப்இசட் 25 பைக்கின் ஃப்ரேம், சஸ்பென்ஷன் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகிய முக்கிய பாகங்கள்தான் இந்த புதிய யமஹா ஃபேஸர் 250 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த பைக்கில் முரட்டுத்தனமான தோற்றத்தை தரும் ஃபேரிங் பேனல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், ஸ்பிளிட் இருக்கைகள் ஆகியவை சிறப்பம்சங்களாக இடம்பெற்று இருக்கின்றன.

 புதிய யமஹா ஃபேஸர் 250 பைக்கின் அறிமுக தேதி விபரம்!

இந்த பைக்கில் 20.6 பிஎச்பி பவரையும், 20 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல, 249சிசி ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கும்.

 புதிய யமஹா ஃபேஸர் 250 பைக்கின் அறிமுக தேதி விபரம்!

யமஹா எஃப்இசட்25 பைக்கைவிட, ஃபேரிங் பேனல்கள் கூடுதலாக இருப்பதால், இந்த புதிய ஃபேஸர் 250 பைக்கின் எடை 10 முதல் 15 கிலோ வரை கூடுதலாக இருக்கும். இந்த பைக்கிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்காது என்று தகவல்கள் கூறுகின்றன. இது சற்று ஏமாற்றம் தரும் விஷயம்தான்.

 புதிய யமஹா ஃபேஸர் 250 பைக்கின் அறிமுக தேதி விபரம்!

ரூ.1.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய யமஹா ஃபேஸர் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் ட்யூக் 200, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ், ஹோண்டா சிபிஆர் 250ஆர் உள்ளிட்ட பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Photo Source: Autocarindia

மேலும்... #யமஹா #yamaha
English summary
Japanese two-wheeler manufacturer Yamaha is all set to introduce the new Fazer 250 in India. The automaker has sent an invite for an event on August 21, 2017, which is likely to be the launch of the fully-faired quarter-litre motorcycle.
Story first published: Saturday, August 12, 2017, 16:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark