யமஹா ஃபேஸர் 25 ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகம் - முழு விபரம்!

Written By:

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய யமஹா ஃபேஸர் 25 ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

யமஹாவின் புதிய 250சிசி பைக் இந்தியாவில் அறிமுகம் - முழு விபரம்!

250சிசி ரகத்தில் யமஹா நிறுவனம் இந்தியாவில் களமிறக்கி இருக்கும் இரண்டாவது பைக் மாடல் ஃபேஸர் 25. யமஹா நிறுவனம் ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகம் செய்த எஃப்இசட்25 நேக்கட் ரக பைக்கின் ஃபேரிங் வெர்ஷன்தான் இந்த புதிய பேஸர் 25 மாடல்.

யமஹாவின் புதிய 250சிசி பைக் இந்தியாவில் அறிமுகம் - முழு விபரம்!

இரண்டு பைக்குகளிலும் சேஸி, எஞ்சின் மற்றும் சஸ்பென்ஷன் உள்ளிட்ட பல முக்கிய உதிரிபாகங்கள் ஒன்றுதான். ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்டு ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

யமஹாவின் புதிய 250சிசி பைக் இந்தியாவில் அறிமுகம் - முழு விபரம்!

பேஸர் 150 பைக் போன்று இல்லாமல் முன்புறம் மிகவும் மிரட்டலாக இருக்கிறது. ஹெட்லைட், ஃபேரிங் பேனல்கள் ஆகியவை வழக்கமாக இல்லாமல் கண்களை உருட்டி, தோளை முறுக்கி மிரட்டுவது போல வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

Recommended Video
2017 DSK Benelli 302 R Launched In Inida | In Tamil - DriveSpark தமிழ்
யமஹாவின் புதிய 250சிசி பைக் இந்தியாவில் அறிமுகம் - முழு விபரம்!

இந்த பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 249சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 20 பிஎச்பி பவரையும், 20 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் லிட்டருக்கு 43 கிமீ மைலேஜ் தரும் என்று யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. 17 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

யமஹாவின் புதிய 250சிசி பைக் இந்தியாவில் அறிமுகம் - முழு விபரம்!

எல்இடி பொசிஷன் விளக்குகள், மல்டி ஃபங்ஷன் வசதியை அளிக்கும் எல்இடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கியமான அம்சங்கள். இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லை என்பது ஏமாற்றம்தான்.

யமஹாவின் புதிய 250சிசி பைக் இந்தியாவில் அறிமுகம் - முழு விபரம்!

புதிய யமஹா ஃபேஸர் 25 பைக் ரூ.1,28,335 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Fazer 25 Launched In India: Priced At Rs 1.28 Lakh.
Story first published: Monday, August 21, 2017, 14:49 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos