புதிய யமஹா ஆர்15 வெர்ஷன் 3.0 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

Written By:

இளைஞர்களை பெரிதும் கவர்ந்த பைக் மாடல் யமஹா ஆர்15 பைக். குறைவான விலையில் சூப்பர் பைக்குகளுக்கு இணையான தோற்றமும் கவர்ந்திழுக்க காரணம். அதேபோன்று, இதன் சக்திவாய்ந்த எஞ்சினும் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் பெரிய அளவிலான வரவேற்பை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இந்த நிலையில், யமஹா ஆர்15 பைக் தற்போது மேம்படுத்தப்பட்டு புதிய மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய யமஹா ஆர்15 வெர்ஷன் 3.0 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

அண்மையில் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய யமஹா ஆர்15 வி3 பைக் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. எனவே, இந்த புதிய மாடலில் இருக்கும் சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப விபரங்கள் மற்றும் படங்களை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.

புதிய யமஹா ஆர்15 வெர்ஷன் 3.0 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

முன்புறம் இரட்டை எல்இடி ஹெட்லைட்டுகள் கொண்டதாக முகப்பு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹெட்லைட்டுகளுக்கு நடுவில் அம்புகுறி கீழ்நோக்கி இருப்பது போன்ற சிறிய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் டேங்கில் பெரிய பிளாஸ்டிக் பாகங்கள் இணைக்கப்பட்டு இருப்பதால் முரட்டுத்தனமாக இருக்கிறது. ஸ்டிக்கர் டிசைனிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. மற்றபடி, பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை.

புதிய யமஹா ஆர்15 வெர்ஷன் 3.0 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் இருக்கும் 155 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த எஞ்சின் 19.3 பிஎச்பி பவரையும், 14.7 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக கூடுதல் சக்திமிகுந்ததாக வந்துள்ளது.

புதிய யமஹா ஆர்15 வெர்ஷன் 3.0 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருப்பதுடன், கூடுதலாக ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, அதிவேகத்தில் செல்லும்போது வேகத்தை உடனடியாக குறைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட கூடுதல் எரிபொருள் சிக்கனம் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய யமஹா ஆர்15 வெர்ஷன் 3.0 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

இந்த பைக்கில் முழுவதுமான எல்சிடி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது யமஹா ஆர்15 பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்கிிறது.

புதிய யமஹா ஆர்15 வெர்ஷன் 3.0 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக் 1,990மிமீ நீளமும், 725மிமீ அகலமும், 1,135மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. அதேநேரத்தில், 1,345மிமீ ஆக இருந்த வீல் பேஸ் இப்போது 1,325மிமீ ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய யமஹா ஆர்15 வெர்ஷன் 3.0 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக்கின் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் இருக்கிறது. 17 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய யமஹா ஆர்15 வெர்ஷன் 3.0 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

சாம்பல், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கும். தவிரவும், மோட்டோ ஜீபி பைக் மாடல் போன்ற ஸ்டிக்கருடன் கூடிய மாடலும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது கேடிஎம் ஆர்சி200, ஹோண்டா சிபிஆர் 150ஆர் மற்றும் பஜாஜ் பல்சர் 200ஆர்எஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

புதிய யமஹா ஆர்15 வெர்ஷன் 3.0 பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!!

தற்போது விற்பனையில் உள்ள யமஹா ஆர்15 வி2.0 பைக் மாடல் ரூ.1.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய யமஹா ஆர்15 வி3.0 மாடல் ரூ.1.30 லட்சம் முதல் ரூ.1.40 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கேடிஎம் ஆர்சி390 பைக்கின் படங்கள்!

புதிய கேடிஎம் ஆர்சி390 பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Read in Tamil: The Yamaha R15 V3.0 was unveiled by nine-time world champion Valentino Rossi and young Spaniard Maverick Vinales.
Story first published: Monday, February 27, 2017, 14:26 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark