முதல்முறையாக புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக் இந்தியாவில் தரிசனம்: படங்கள்!

Written By:

ஆரம்ப விலை ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் இளைஞர்களின் முதன்மை தேர்வுகளில் ஒன்றாக இருந்து வரும் பைக் மாடல் யமஹா ஆர்15. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், மேம்படுத்தப்பட்ட இந்த புதிய மாடல் தற்போது முதல்முறையாக இந்திய மண்ணில் தரிசனம் தந்துள்ளது.

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக் இந்தியாவில் தரிசனம்: படங்கள்!

அடையாளங்கள் மறைக்கப்படாத நிலையில், பைக்கை முழுமையாக காணும் வகையில் இந்த புதிய மாடலின் படங்கள் கிடைத்துள்ளன. இதனால், இந்த பைக் விரைவில் விற்பனைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது.

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக் இந்தியாவில் தரிசனம்: படங்கள்!

பல வெளிநாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், இன்னமும் இந்தியாவில் அறிமுகமாவது ஏமாற்றம் தருகிறது. மேலும், வெளிநாடுகளில் இருக்கும் சில கூடுதல் சிறப்பம்சங்கள் இந்திய மாடலில் இடம்பெற்றிருக்கவில்லை என்பதும் இந்த படங்கள் மூலமாக புலனாகிறது.

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக் இந்தியாவில் தரிசனம்: படங்கள்!

வெளிநாடுகளில் புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் உள்ளது. ஆனால், இந்திய மாடலில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் இடம்பெற்றிருக்கும். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்படாது என்று தெரிய வந்துள்ளது.

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக் இந்தியாவில் தரிசனம்: படங்கள்!

வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள மாடலில் முன்புறத்தில் ஃபென்டர் அமைப்பு புதிதாக இருக்கிறது. ஆனால், இந்தியா வர இருக்கும் ஆர்15 வி3.0 மாடலில் வி2.0 மாடலில் இருக்கும் ஃபென்டர் அமைப்புதான் பயன்படுத்தப்படுகிறது.

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக் இந்தியாவில் தரிசனம்: படங்கள்!

எம்ஆர்எஃப் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் அலுமினிய ஃபுட்பெக்குகள் கொடுக்கப்படும் நிலையில், இந்திய மாடலில் சாதாரண ரக ஃபுட்பெக்குகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன், ஸ்லிப்பர் க்ளட்ச்சும் இந்திய மாடலில் இருக்காது.

Recommended Video - Watch Now!
[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக் இந்தியாவில் தரிசனம்: படங்கள்!

அதேநேரத்தில், சில ஏமாற்றங்கள் இருந்தாலும், ஆர்15 வி3.0 மாடலின் முக அமைப்பு மிக வசீகரமாக மாற்றப்பட்டு இருக்கிறது. எல்இடி டியூவல் ஹெட்லைட்டுகள் முக வசீகரத்தை கூட்டுவதற்கு முக்கிய காரணம். ஃபேரிங் பேனலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. வால் பகுதியில் லேசான மாற்றம் உள்ளது.

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக் இந்தியாவில் தரிசனம்: படங்கள்!

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் 155.1சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.04 பிஎச்பி பவரையும், 14.7 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக் இந்தியாவில் தரிசனம்: படங்கள்!

வெளிநாடுகளில் சிறப்பான வசதிகளுடன் விற்பனையில் இருக்கும் புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக் இந்தியாவில் சில சிறப்பம்சங்கள் குறைவாக வருவது ஏமாற்றம் தரும் விஷயம்தான். விலையை மிக சவாலாக நிர்ணயிப்பதற்காக இந்த சமரசங்களை யமஹா செய்து கொண்டுள்ளது. எனினும், டிசைனில் சிறிய மாற்றங்கள் நிச்சயம் இளைஞர்களை கவரும்.

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha YZF-R15 V3.0 Spotted In India; Launch Imminent?
Story first published: Tuesday, November 28, 2017, 11:03 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark