இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேக அங்காடியை சென்னையில் அமைத்தது யமஹா..!!

Written By:

இந்திய யமஹா மோட்டார் நிறுவனம் தனது ஸ்கூட்டர்க தயாரிப்புகளை விற்பனை செய்ய பிரத்யேக அங்காடி (Boutique) ஒன்றை தமிழக தலைநகர் சிங்கார சென்னையில் நிறுவியுள்ளது.

யமஹா ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேக அங்காடி சென்னைக்கு வந்தது..!

யமஹாவின் சிறப்புப்பெற்ற ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள இந்த நிலையத்திற்கு " பைக்கர்ஸ்" என பெயரிடப்பட்டுள்ளது.

யமஹா ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேக அங்காடி சென்னைக்கு வந்தது..!

வாடிக்கையாளர்கள், ஸ்கூட்டர்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கவும், மற்றும் ஸ்கூட்டர் டிரைவிங்கிற்கு தேவையான துணை பொருட்களை வாங்குவதற்குமான வசதிகளும் இந்த சிறப்பு அங்காடியில் உள்ளன.

யமஹா ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேக அங்காடி சென்னைக்கு வந்தது..!

சுமார் 3100 சதுர அடியில் அமைந்துள்ள யமஹா ஸ்கூட்டர்களுக்கான ஆங்காடியில், விற்பனை மட்டுமில்லாமல், பழுது பார்க்கவும் வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

யமஹா ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேக அங்காடி சென்னைக்கு வந்தது..!

இந்தியாவில் யமஹா விற்பனை செய்து வரும் அனைத்து மாடல் ஸ்கூட்டர்களும் இந்த அங்காடியில் இடம்பெற்றிருக்கும்.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சர்வீஸை கொடுக்கவும், புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆக்கத்திற்காக இந்த அங்காடியை யமஹா உருவாக்கியுள்ளது.

யமஹா ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேக அங்காடி சென்னைக்கு வந்தது..!

ஸ்கூட்டர்களுக்கான தேவைகளை உருவாக்கி, அதை வாடிக்கையாளர்கள் மத்தியில் கொண்டு சென்று, அவர்களது விருப்பத்திற்கு ஏற்றவாற்றான தயாரிப்புகளை வழங்குவதே ஸ்கூட்டர் தயாரிப்பில் யமஹாவின் நோக்கமாக உள்ளது.

யமஹா ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேக அங்காடி சென்னைக்கு வந்தது..!

யமஹா ஸ்கூட்டர் சிறப்பு அங்காடிக்கான நிர்வாக இயக்குநர் மஸாகி அசனோ கூறும்போது, "இருசக்கர வாகன தேவைகளில் யமஹாவின் ஆக்கத்திறன் மற்றும் செயல்பாடிற்கு வரவேற்பு உள்ளது. அதேபோன்ற தேவைகளோடு தான் யமஹாவின் ஸ்கூட்டர் தயாரிப்புகளும் இருக்கும்" என்று கூறினார்

யமஹா ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேக அங்காடி சென்னைக்கு வந்தது..!

இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை உச்சத்தில் உள்ளது, குறிப்பாக இங்குள்ள பெண்கள் மத்தியில் ஸ்கூட்டர் வாங்கும் திறன் அதிகளவில் உள்ளது.

இதை உலகளவிலான சந்தை நிலவரத்தோடு ஒப்பிட்டு அதற்கு ஏற்றவாறு இந்தியாவில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதும் யமஹாவின் நோக்கமாக உள்ளது.

யமஹா ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேக அங்காடி சென்னைக்கு வந்தது..!

யமஹாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான தலைமை துணை தலைவர் ராய் குரியன் பேசும்போது "யமஹாவின் ஸ்கூட்டர்களுக்கான அங்காடி நிச்சயம் வரவேற்பு பெறும். இந்தியாவில் இதற்கான வாங்கும் திறன் அதிகரிக்கும்" என்று தெரிவித்தார்.

யமஹா ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேக அங்காடி சென்னைக்கு வந்தது..!

புதிய, இளைமையான கட்டமைப்புகள் மற்றும் ஃபேஷன் ஆகியவற்றை நினைவில் கொண்டு உலகதரத்திற்கு யமஹா ஸ்கூட்டர்களுக்கான சிறப்பு அங்காடி கட்டமைக்கப்பட்டுள்ளது.

யமஹா ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேக அங்காடி சென்னைக்கு வந்தது..!

நமக்கு தேவைப்படக்கூடிய இடத்தில், எதிர்பார்ப்புகளோடு, தேவைப்படும் பட்ஜெட்டில் யமஹா தயாரிப்புகளை இந்த சிறப்பு விற்பனையகத்தில் இருந்து வாங்கிச் செல்லலாம்.

யமஹா ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேக அங்காடி சென்னைக்கு வந்தது..!

2012ம் ஆண்டில் இருந்து யமஹா இந்தியாவில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. ரெட்ரோ ஸ்டைலிஷ் மாடல் ஃபேசிகோ, புதிய ஆல்ஃபா டிஸ்க் பிரேக், அனைத்து தரப்பினருக்குமான சைங்னஸ் ரே இசட் மற்றும் சைங்னஸ் ரே இசட்-ஆர் போன்றவை யமஹா ஸ்கூட்டர்களில் குறிப்பிடத்தகுந்த தயாரிப்புகள்.

மேலும்... #யமஹா #yamaha
English summary
Read in Tamil- Yamaha India Opens Its First Scooter Boutique In Chennai. Click for Details...
Story first published: Saturday, July 22, 2017, 12:55 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark