யமஹா டி7 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படங்கள் வெளியானது

யமஹா டி7 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படங்கள் வெளியானது

By Azhagar

யமஹா நிறுவனம் தனது எம்.டி-07 தளத்தில் புதிய டி-7 அட்வென்ச்சர் மாடல் மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு கொண்டு வர தீவிரமாக தயாராகி வருகிறது.

யமஹா டி7 ஸ்பை படங்கள்: இணையத்தில் வைரல்..!!

2016 நவம்பரில் மிலெனில் நடைபெற்ற கண்காட்சியின் போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக், 2018ம் ஆண்டிற்கு பிறகு தான் தயாரிப்பு நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

யமஹா டி7 ஸ்பை படங்கள்: இணையத்தில் வைரல்..!!

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி யமஹா டி7 பைக், இந்தாண்டிலேயே விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த மோட்டார் சைக்கிளின் ஸ்பை படங்கள் வெளியாகி இணையதளங்களில் பரபரப்பை கூட்டி இருக்கின்றன.

யமஹா டி7 ஸ்பை படங்கள்: இணையத்தில் வைரல்..!!

ஆஃப் ரோடு டிரைவிங்கிற்கான பைக் என்பதை பார்க்கும் போதே தெரிந்தாலும், டி7-னின் ஒவ்வொரு வடிவமைப்பு நுணுக்கமும் அதையேத்தான் உணர்த்துக்கின்றன.

யமஹா டி7 ஸ்பை படங்கள்: இணையத்தில் வைரல்..!!

வெளியாகியுள்ள ஸ்பை படங்கள் வைத்து பைக்கின் எஞ்சின் மற்றும் தோற்றத்தை குறித்து எந்த தகவலையும் திரட்ட முடியவில்லை.

ஷீட்டை போட்டு மூடி வைத்து அதன் மேல் ரைடர் டி7 பைக்கை ஓட்டுவது போன்ற புகைப்படங்கள் தான் வெளிவந்துள்ளன.

யமஹா டி7 ஸ்பை படங்கள்: இணையத்தில் வைரல்..!!

ஸ்பை படங்களை சாதரணமாக பார்த்தால் பைக் சாதரணமாகவே தோன்றுகிறது. உற்று பார்த்தால் தான், பைக்கில் உள்ள வடிவமைப்பு பணிகள் கவனமீர்க்கின்றன.

யமஹா டி7 ஸ்பை படங்கள்: இணையத்தில் வைரல்..!!

இந்த பைக்கில் 689சிசி திறன் பெற்ற யமஹாவின் எம்.டி-07 எஞ்சின் உள்ளது. பேரலல்-ட்வின் எஞ்சினான இதன் மூலம் 75 பிஎச்பி பவர் கிடைக்கும்.

யமஹா டி7 ஸ்பை படங்கள்: இணையத்தில் வைரல்..!!

அதேபோல எம்.டி-07 பிளாட்ஃபார்மில் தயாரான எல்.சி.டி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது. இந்த தகவல்களை தவிர பைக்கின் கட்டமைப்புகள் அனைத்திலும் புதிய வடிவமைப்புகளே இடம்பெற்றுள்ளன.

யமஹா டி7 ஸ்பை படங்கள்: இணையத்தில் வைரல்..!!

பில்லியனுக்கு ஏற்றவாறான சீட்பெல்டுகள், புதிய கேஸிஸ், அழுத்தமான சஸ்பென்ஷனை கொடுக்கக்கூடிய அமைப்புகள் என எளிய இயக்கத்திற்கு ஏதுவான அமைப்பை யமஹா டி7 பைக் கொண்டுள்ளது.

யமஹா டி7 ஸ்பை படங்கள்: இணையத்தில் வைரல்..!!

பைர்ரெல்லி ஸ்கார்பியன் எம்.டி-90 யின் ஆஃப்-ரோடு வடிவமைப்பிற்கான டயர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. பைக்கில் உள்ள முன்பக்க ஃபோர்க்ஸ் 21 அங்குலத்திலும் பின் பக்கம் 18 அங்குலத்திலும் இருக்கின்றன.

யமஹா டி7 ஸ்பை படங்கள்: இணையத்தில் வைரல்..!!

யமஹாவின் டி7 தயாரிப்பு நிலை எம்.டி-07 என்று பெயரிடப்படலாம். 2017ம் ஆண்டு நடக்கவுள்ள மோட்டார் கண்காட்சியில் இதனுடைய விற்பனை பதிப்பு வெளியாகலாம்.

யமஹா டி7 ஸ்பை படங்கள்: இணையத்தில் வைரல்..!!

தற்போது இந்த பைக்கிறான தயாரிப்பு பணிகளை யமஹா துரித கதியில் மேற்கொண்டு வருவதால், இந்தாண்டின் நவம்பரிலேயே டி7 பைக்கில் வெளியீடு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

யமஹா டி7 ஸ்பை படங்கள்: இணையத்தில் வைரல்..!!

உலகளவில் ஆஃப்-ரோடுகளுக்கான பைக் தேவைகளில் டிரையம்ப் டைகர் 800 எக்ஸ்.சி.எக்ஸ், ஹோண்டா ஆஃபிரிக்கா ட்வின் போன்ற மாடல்கள் தான் ஆதிக்கம் செலுத்து வருகின்றன.

இதற்கு பிறகு கே.டி.எம் நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ள 790 அட்வென்ச்சர் மற்றும் பிஎம்டபுள்யூ எஃப்850 ஜி.எஸ் போன்ற மாடல்கள் வருங்காலத்தில் ஆஃப் ரோடு தேவைகளில் ஆட்சி செய்யும்.

யமஹா டி7 ஸ்பை படங்கள்: இணையத்தில் வைரல்..!!

இந்தியாவிலும் ஆஃப்-ரோடு பைக்குகளுக்கான தேவை வாடிக்கையாளர்களிடம் அதிகரித்து வருகிறது.

டிரையம்ப் டைகர் 800 எக்ஸ்.சி.எக்ஸ் மாடலை தொடர்ந்து ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் வாகனமும் இந்தியாவில் நல்ல முன்னேற்றத்தில் உள்ளது.

யமஹா டி7 ஸ்பை படங்கள்: இணையத்தில் வைரல்..!!

இதற்கு பிறகு கே.டி.எம் வரவுள்ளது. இவையனைத்தையும் கவனித்து, யமஹா டி7 பைக்கின் விற்பனையை இந்தியாவில் தொடங்குமா..? என்பதை நாம் பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Read in Tamil- Yamaha MT-07 based adventure motorcycle being tested revealed that the motorcycle is nearing production. Click for Details...
Story first published: Monday, July 17, 2017, 17:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X