கேடிஎம் ட்யூக்390 பிஎஸ்-3 பைக் 1.5 லட்ச ரூபாய்க்கு விற்பனை? - ஒரு நேரடி களஆய்வு..!

Written By:

கடந்த ஏப்ரல்1 முதல் புகை மாசை அதிகம் ஏற்படுத்தி சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரத் ஸ்டேஜ்-3 தர இஞ்சின் கொண்ட வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்வதையும், பதிவு செய்வதையும் ரத்து செய்து ஆட்டோமொபல் உலகத்தையே கலக்கிய அதிரடி உத்தரவு ஒன்றை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

கேடிம் ட்யூக் 390 பைக் 1.5 லட்சத்துக்கு கிடைப்பது உண்மையா?

எனினும், இதன் பின்னரும் பிஎஸ்-3 பைக்குகள் விற்பனை ஜரூராக நடப்பதாக சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

கேடிம் ட்யூக் 390 பைக் 1.5 லட்சத்துக்கு கிடைப்பது உண்மையா?

இதன் நம்பகத்தன்மையை பரிசோதிக்க விரும்பியது டிரைவ் ஸ்பார்க் குழு. களத்தில் நடத்திய ஆய்வில் கிடைத்த சில ருசிகரமான தகவல்களை இத்தொகுப்பில் காணலாம்.

கேடிம் ட்யூக் 390 பைக் 1.5 லட்சத்துக்கு கிடைப்பது உண்மையா?

ஆட்டோமொபைல் துறையை பொருத்தமட்டில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதியே பிஎஸ்3 தர வாகனங்களின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டன.

கேடிம் ட்யூக் 390 பைக் 1.5 லட்சத்துக்கு கிடைப்பது உண்மையா?

எனினும் இலை மறை காய் மறைவாக சில டீலர்கள் பிஎஸ்-3 பைக்குகளை தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருவதாக ஒரு அதிர்ச்சிகரமான தகவல் பரவிவருகிறது.

கேடிம் ட்யூக் 390 பைக் 1.5 லட்சத்துக்கு கிடைப்பது உண்மையா?

சென்னையில் 1.96 லட்ச ரூபாய் எக்ஸ்ஷோரூம் விலை கொண்ட கேடிஎம் ட்யூக் 390 பைக்குகள் 1.50 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைப்பதாக ஒரு தகவல் பரவி வந்தது.

கேடிம் ட்யூக் 390 பைக் 1.5 லட்சத்துக்கு கிடைப்பது உண்மையா?

ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு தான் பிஎஸ்-3 வாகனங்களை விற்பனை செய்ய முடியாதே, ஒருவேளை முன்தேதியிட்டு விற்பனை செய்தாலும் கூட அதனை பதிவு செய்ய முடியாதே என உங்களைப் போல் நமக்கும் கேள்வி எழாமல் இல்லை.

கேடிம் ட்யூக் 390 பைக் 1.5 லட்சத்துக்கு கிடைப்பது உண்மையா?

இந்த ரகசிய வியாபாரத்திற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான பின்னணி இருப்பதாக சொல்லப்படுகிறது. அது வாடிக்கையாளர்களை எளிதாக கவர்ந்து இழுக்கும் வகையில், லாபகரமகாவும் உள்ளது.

கேடிம் ட்யூக் 390 பைக் 1.5 லட்சத்துக்கு கிடைப்பது உண்மையா?

அதாவது நஷ்டத்தில் இருந்து ஓரளவுக்கு தப்பிப்பதற்கு தான் மார்ச் 30 மற்றும் 31 தேதிகளில் அதிரடி சலுகைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்தனர்.

கேடிம் ட்யூக் 390 பைக் 1.5 லட்சத்துக்கு கிடைப்பது உண்மையா?

ஏப்ரல் 1-க்கு பிறகு விற்பனையாகாத பிஎஸ்-3 வாகனங்களை வைத்திருக்கும் டீலர்கள் தலையில் தான் நஷ்டம் விழும் என்பதால் டீலர்களில் சிலர் தகிடுதத்த வேளையில் ஈடுபட்டுள்ளதாக ஒரு ‘மேட்டர்' பரவியது.

நூதன முறையில் விற்பனை?

நூதன முறையில் விற்பனை?

பிஎஸ்-3 வாகனங்களை வைத்திருந்த டீலர்கள் சிலர் அவற்றை தங்களது பெயர்களிலேயே ஏப்ரல் 31க்குள் பதிவு செய்துகொண்டதாகவும். இவற்றை தற்போது வாடிக்கையாளர்களுக்கு செகண்ட் ஹேண்டாக தள்ளுபடி விலையில் நூதன முறையில் விற்பனை செய்வதாகவும் சொல்லப்படுகிறது.

செகண்ட் ஹேண்ட் விற்பனை

செகண்ட் ஹேண்ட் விற்பனை

செகண்ட் ஹேண்டாக இருந்தாலும் 1 கிமீ கூட ஓட்டப்படாத புத்தம் புதிய ஷோரூம் கண்டிஷன் பைக்குக்கு தள்ளுபடி விலை வேறு கிடைப்பதால் வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல டீலாக உள்ளது.

பெயர் மாற்றம் போதுமாம்!

பெயர் மாற்றம் போதுமாம்!

இந்த பைக்குகளை எளிதாக பெயர் மாற்றம் மட்டும் செய்தால் போதுமானது. இந்த வகையில் 2 லட்ச ரூபாய் ஆன் ரோடு விலை கொண்ட கேடிஎம் ட்யூக் 390 பைக் 1.5 லட்ச ரூபாய் ஆன்ரோடு விலைக்கு கிடைக்கிறது என்றால் யார் தான் வாங்க தயங்குவார்கள்?

ரகசிய புலனாய்வு

ரகசிய புலனாய்வு

இது குறித்து உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள டிரைவ்ஸ்பார்க் குழு சென்னை, மதுரை உள்ளிட்ட சில நகரங்களில் ரகசிய புலனாய்வை மேற்கொண்டது.

கேடிம் ட்யூக் 390 பைக் 1.5 லட்சத்துக்கு கிடைப்பது உண்மையா?

டீலர்கள் சிலரிடம் இது குறித்து விசாரித்ததில் இப்படி ஒரு வியாபாரம் என்பது நடக்கவில்லை என்ற விவரம் தெரியவந்தது.

வாட்ஸ் அப் அவதூறு

வாட்ஸ் அப் அவதூறு

எதற்கெடுத்தாலும் இவ்வாறான தகவல்களை வாட்ஸப்பில் சிலர் வேண்டுமென்றே பரப்புகின்றனர் என நொந்தவாரே பேசினர் ஷோரூம் ஊழியர்கள். இதை யாரும் நம்பி வராதீர்கள் என்று அட்வைஸ் செய்து நம்மை அனுப்பி வைத்தனர் இந்த நேர்மை மிக்க ஊழியர்கள்.

வடமாநிலங்களில் விற்பனை?

வடமாநிலங்களில் விற்பனை?

தமிழகத்தில் நிலைமை இவ்வாறாக இருக்க வேறு சில வடமாநிலங்களில் இது உண்மை தான் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து சில பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேடிம் ட்யூக் 390 பைக் 1.5 லட்சத்துக்கு கிடைப்பது உண்மையா?

எது எப்படி இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் பிஎஸ்-3 வாகனங்கள் தீங்கு விளைவிக்கின்றன எனவே அதை கட்டாயம் தடை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தான் அவற்றிற்கு உச்சநீதிமன்றம் தடை போட்டது.

கேடிம் ட்யூக் 390 பைக் 1.5 லட்சத்துக்கு கிடைப்பது உண்மையா?

இப்படிப்பட்ட உயரிய நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் நாமும் பொறுப்பான குடிமகனாக நடந்துகொள்வதே நன்நெறி பயக்கும் என்பதால். சில டீலர்கள் இதைப்போன்ற தவறுகளில் ஈடுபட்டால் கூட அதனை தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறது டிரைவ் ஸ்பார்க் குழு.

கேடிம் ட்யூக் 390 பைக் 1.5 லட்சத்துக்கு கிடைப்பது உண்மையா?

மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, கோவை மற்றும் சென்னையில் உள்ள ஷோரூம்களில் நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் டிரைவ் ஸ்பார்க் குழுவைச் சேர்ந்தவர்கள் இந்த ரகசிய புலனாய்வில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about KTM DUKE 390 bike sold for 1.5 lakhs on road price in chennai. a special investigation report in tamil. more details.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark