TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கில் ஏஎஸ்பிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம்!
பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கில் ஆன்டி ஸ்கிட் பிரேக்கிங் சிஸ்டம் (ASBS) என்ற புதிய பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது. மிகச் சிறப்பான இந்த புதிய பாதுகாப்பு அம்சம் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
சக்திவாய்ந்த புதிய எஞ்சின் உள்பட பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் பஜாஜ் பிளாட்டினா 110 பைக் வந்துள்ளது. இந்த பைக்கில் புதிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மற்றும் எல்இடி விளக்கு ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த பைக்கில் சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இருசக்கரங்களில் இருக்கும் பிரேக்குகளுக்கு சரியான அளவில் பிரேக் பவரை அனுப்பி செயல்பட வைப்பதுதான் இந்த காம்பி பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் சிபிஎஸ்.
அவசரத்தில் பிரேக் பிடிக்கும்போது இருசக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரேக் அப்ளை செய்யப்படும் என்பதால், வண்டி சறுக்கி விழாது. இந்த நிலையில், இதே தொழில்நுட்பத்தை இந்த பிரேக் சிஸ்டத்தை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் Anti Skid Braking System (ASBS) என்ற பெயரில் பிளாட்டினா 110 பைக்கில் அறிமுகம் செய்துள்ளது.
இதனால், இந்த பைக்கின் பாதுகாப்புக்கும் கூடுதல் உறுதி கிடைத்துள்ளது. இந்த மாடல் இரு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்சக்கரத்தில் டிரம் பிரேக் கொண்ட ஒரு மாடலிலும், இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக் பொருத்தப்பட்ட மற்றொரு மாடலிலும் கிடைக்கிறது.
இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இன்வர்டெட் நைட்ராக்ஸ் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் 80/100-17 அளவுடைய டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை பஜாஜ் பிளாட்டினா 102 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த புதிய மாடலில் டிஸ்கவர் 110 பைக்கில் பயன்படுத்தப்படும் 115சிசி சிங்கிள் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய எஞ்சின் அதிகபட்சமாக 8.5 பிஎஸ் பவரையும், 9.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்பபடுத்தும். பழைய மாடலைவிட .0.7 பிஎஸ் பவரையும், 1.47 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வெளிப்படுத்தும் திறனுடன் இந்த புதிய மாடல் வந்துள்ளது. இந்த பைக்கில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் 11 லிட்டர் கொள்திறன் கொண்டது.
ரூ.49,300 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய மாடல் சில பகுதிகளில் உள்ள பஜாஜ் டீலர்களை வந்தடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பஜாஜ் ஆட்டோவிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை இல்லை.
வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் புதிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு தக்கவாறு இந்த பைக் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. பட்ஜெட் விலையில் சிறப்பான பாதுகாப்பு அம்சம் கொண்ட மாடலாக வந்துள்ளது.
ImageCourtesy:Indian Bike