டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!!

By Saravana Rajan

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முழு விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டுகாட்டி மாடல்களில் குறைவான விலை கொண்ட ஆரம்ப நிலை மாடலாக ஸ்க்ராம்ப்ளர் ரகம் விற்பனையில் இருக்கிறது. டுகாட்டியின் ஸ்க்ராம்ப்ளர் மாடல்கள் 803சிசி எஞ்சின் கொண்டதாக கிடைத்து வருகிறது. ரூ.7.21 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும் இந்த ஸ்க்ராம்ப்ளர் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!!

இந்த நிலையில், சக்திவாய்ந்த ஸ்க்ராம்ப்ளர் மாடலை எதிர்பார்ப்பவர்களுக்கும், பழைய மாடலை மாற்றி புதிய ஸ்க்ராம்ப்ளர் பைக் வாங்க விரும்புபவர்களை மனதில் வைத்து, சக்திவாய்ந்த 1100சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய மாடலை இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது டுகாட்டி.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!!

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 மாடலானது ஸ்டான்டர்டு, ஸ்பெஷல் மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவிதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். பாரம்பரியம் மற்றும் நவீன டிசைன் அம்சங்களை கலந்து கட்டிய ஸ்க்ராம்ப்ளர் பைக் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!!

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கில் L-Twin சிலிண்டர் அமைப்பு கொாண்ட 1,079சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரையும், 88 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. டுகாட்டி மானஸ்ட்டர் 1100 பைக்கில் பயன்படுத்தப்படும் எஞ்சின்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!!

இந்த பைக்கில் ஆக்டிவ், டூரிங் மற்றும் சிட்டி ஆகிய மூன்று டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரைடு பை ஒயர் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!!

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பேஸ் மற்றும் ஸ்பெஷல் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளிலும் முன்புறத்தில் 45மிமீ மர்ச்சோசி அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் கயபா மோனோஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளன.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!!

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கில் பாஷ் கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்பெஷல் வேரிண்ட்டில் கருப்பு வண்ண ஸ்போக்ஸ் கொண்ட சக்கரங்கள், க்ரோம் பூச்சுடன் கூடிய சைலென்சர் குழாய், அட்ஜெஸ்ட் வசதி கொண்ட முன்புற சஸ்பென்ஷன் போன்றவை முக்கிய அம்சங்கள்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!!

ஸ்போர்ட் வேரியண்ட்டில் ஓலின்ஸ் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மஞ்சள் வண்ண அலங்காரத்துடன் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது சற்று கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட விலை உயர்ந்த வேரியண்ட்டாக விற்பனைக்கு கிடைக்கும்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!!

இந்த பைக்கின் ஸ்டான்டர்டு மாடல் 62 யெல்லோ என்ற மஞ்சள் வண்ணத்திலும், ஷைனிங் பிளாக் என்ற கருப்பு வண்ணத்திலும் கிடைக்கும். ஸ்பெஷல் வேரியண்ட்டானது கஸ்டம் க்ரே என்ற சாாம்பள் வண்ணத்திலும், ஸ்போர்ட் வேரியண்ட் வைப்பர் பிளாக் என்ற கருப்பு வண்ணத்திலும் கிடைக்கும்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!!

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கின் விலை குறைவான ஸ்டான்டர்டு வேரியண்ட் ரூ.10.91 லட்சத்திலும், ஸ்பெஷல் வேரியண்ட் ரூ.11.12 லட்சத்திலும், ஸ்போர்ட் வேரியண்ட் ரூ.11.42 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் பைக்கிற்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
2018 Ducati Scrambler 1100 launched in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X