சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்?

Written By:

2018ம் ஆண்டு புதிதாக வெளியாகியுள்ள ஹோண்டா சிபி ஹார்னட் 160ஆர், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, அம்சங்கள், விலை, மைலேஜில் எது பெஸ்ட் என இந்த செய்தியில் நாம் பார்ப்போம்.

சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்

ஹோண்டா நிறுவனத்தின் புதிய 2018 சிபி ஹார்னட் 160 ஆர் டில்லி எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ 84,675 க்கு கிடைக்கிறது. இதில் பெரும்பாலும் பழைய மாடல் பைக்கில் உள்ள அதே டிசைனே பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்

எனினும் புதிய எல்.இ.டி., ஹெட்லைட், ஏபிஎஸ், புதிய கலர் வெரியண்ட்கள், புதிய கிராபிக்ஸ் என சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. 160 சிசி ரக பைக்குகளில் சிறந்த பைக்காக இந்த பைக் பார்க்கப்படுகிறது.

சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்

டிசைன்

ஹார்னட் பைக் பழைய மாடல் பைக்கின் டிசைனையே கொண்டுள்ளது. எனினும் புதிய எல்.இ.டி. ஹெட்லைட், பெட்ரோல் டேங்கின் டிசைன், புதிய கிராபிக்ஸ் ஆகியவை ஒரு ஸ்போர்ட் பைக்கின் லுக்கை தருகிறது.

x வடிவிலான பின் பக்க லைட், ஸ்போஸ்ட் லுக் தரும் பின் பக்க கைபிடி, பின் பக்க பெரிய டயர், சிறிய புகை வெளியிடும் கருவி ரிம் ஸ்டிப் ஆகியன புதிய ஹார்னட்டிற்கு புதிய வடிவத்தை அளிக்கின்றன.

சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வியை பொருத்தவரை ஆர்டிஆர் 200 எல்இடி 4வியின் அம்சங்களையே அதிகமாக பெற்றுள்ளது. டிஆர்எல் உடன் கூடிய ஹெட்லைட், பெட்ரோல் டேங்க் அருகே செக்டு கொடி கிராபிக்ஸ், இன்ஜின் அருகே பெல்லி பேன் புதிய அம்சங்கள் உள்ளன. பக்கபாட்டில் சில்வர் கலர் பேனல் அமைந்துள்ளது.

பின்பக்க எல்இடி லைட், இரண்டு கைப்பிடிகள், இரண்டு பேரல் கொண்ட புகைவெளியிடும் கருவி என மொத்தத்தில் ஹார்ன்டிற்கு கடும் போட்டி தருகிறது ஆர்டிஆர் 160 4வி.

சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்

டிசைன் ரேட்டிங்

ஹோண்டா சிபி ஹார்னட் 160ஆர் 8/10

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி 8/10

சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்

அம்சம்

புதிய ஹோண்டா ஹார்னட்டில் ஏற்கனவே சொன்னது போல் எல்இடி ஹெட்லைட், எல்இடி பின் பக்க லைட், உள்ளது. மேலும் முற்றிலும் டிஜிட்டல் கிளஸ்டர், ஆலாய் வீல் ஹார்டு லைட் சுவிட்ச் உள்ளது. ஹார்னட்டில் டெலஸ்கோபிக் ஃபோக்ஸ், மோனோ ஷாக் அப்ஷர்பர், முன்பக்க வீலில் சிங்கள் சேனல் ஏபிஎஸ் ஆகியன இதன் அம்சங்களாக உள்ளது.

சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்

ஆப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 4வி யை பொறுத்தவரை டிஜிட்டல் கிளஸ்டர், எல்இடி டிஆர்எல், எல்இடி பின் பக்க லைட், ஓரே ஹேன்டில் பார், ஏர் இன்டேக் அலாய் வீல், டெலஸ்கோபிக் ஃபோக்ஸ், ஷோவா டியூன் சஸ்பென்ஷன், என இரு பைக்குகளும் கிட்டத்தட்ட ஒரே அம்சத்தை கொண்டிருந்தாலும் ஹார்னட்டில ஏபிஎஸ் வசதியுள்ளது.

சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்

அம்சங்களுக்கான ரேட்டிங்

ஹோண்டா சிபி ஹார்னட் 160ஆர் 8/10

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி 7.5/10

சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்

இன்ஜின் கியர் மைலேஜ்

ஹோண்டா 2018 ஹார்னட் 160 ஆர் பைக் 162.71 சிசி 5 கியர் சிங்கிள் சிலிண்டர் இன்ஜினுடன் 14.9 பிஎச்பி மற்றும் 14.5 என்.எம் டார்க் திறனை வெளிபடுத்தக்கூடியது. இது 40-45 கி.மீ வரை மைலேஜ் தருகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் 159.77 சி.சி. சிங்கிள் சிலிண்டர் 4 வால்வ், 5 கியர், ஆயில் கூல்டு இன்ஜினுடன் 16.58 பிஎச்பி 14.8 என்.எம். டார்க் திறனை வெளிபடுத்துகிறது. இது 40-45 கி.மீ. மைலேஜை தருகிறது.

சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்

இன்ஜின்,கியர், மைலேஜ்க்கான ரேட்டிங்

ஹோண்டா சிபி ஹார்னட் 160ஆர் 8/10

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி 8/10

சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்

விலை

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4 வி 3 வித வெரியண்ட்களில் கிடைக்கிறது. முன் பக்க டிஸ்க் பிரேக், பின் பக்க டிஸ்க் பிரேக் , இஎப்ஐ இதன் டில்லி எக்ஸ் ஷோரூம் விலை ரூ 81,149, ரூ 89,990 ஆக உள்ளது.

சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்

ஹோண்டா சிபி ஹார்னட் 160 ஆரின் விலை டில்லி எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ 84,675 முதல் ஆரம்பமாகிறது. டாப் மாடலனா ஏபிஎஸ் வெரிண்ட் 92,675 ஆக உள்ளது. இருபைக்கையும் ஒப்பிடுகையில் டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்டிஆர் சற்று விலை குறைவாக உள்ளது,.

சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்

மொத்தத்தில் ஹோண்டா சிபி 160 ஆர் 160 சிசி ரக பைக்குகளில் ஏபிஎஸ், எல்இடி ஹெட்லைட், உடன் சிறப்பாக தோற்றமளிக்கிறது. ஸ்டைலான, ஸ்மூத்தான, பைக்தான் உங்கள் விருப்பம் தான் ஹார்னட் தான் சரியான சாய்ஸ்

160 சிசி ரக பைக்குகளில் சிறந்த பவர்புல் பைக்காக ஆப்பாச்சி ஆர்டிஆர் ரக பைக் இருக்கிறது. பட்ஜெட், அவுட்ரைட் செயல்பாடுதான் உங்கள் தேர்வு என்றால் ஆப்பாச்சி ஆர்.டி.ஆர் தான் உங்கள் சரியான சாய்ஸ்.

English summary
2018 Honda CB Hornet 160R Vs 2018 TVS Apache RTR 160 4V Comparison: Specs, Price, Mileage & Features. Read in Tamil
Story first published: Thursday, March 29, 2018, 15:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark