TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
2018 ஹோண்டா நவி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!
கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா நவி ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
விற்பனையில் சோபிக்காத ஹோண்டா நவி ஸ்கூட்டருக்கு புதுபபொலிவு கொடுத்துள்ளது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம். புதிய ஹோண்டா நவி ஸ்கூட்டரில் புதிய ஹெட்லைட் கவர், ரியர் வியூ மிரர்கள் மற்றும் பாடி கலரிலான கிராப் ரெயில் கைப்பிடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் ஸ்பிரிங் சிவப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருப்பது கூடுதல் வசீகரத்தை தருகிறது. இந்த ஸ்கூட்டருக்கு ஏராளமான கஸ்டமைஸ் ஆப்ஷன்களையும் ஹோண்டா வழங்குகிறது.
புதிய ஹோண்டா நவி மோட்டோஸ்கூட்டரில் பச்சை மற்றும் பழுப்பு வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த 4 வண்ணங்களை சேர்த்து இனி மொத்தமாக 6 வண்ணங்களில் கிடைக்கும். இந்த புதிய மாடலில் புதிய எரிபொருள் மானி, சைலென்சருக்கு புதிய மெட்டல் மஃப்ளர் அமைப்பு ஆகியவை கூடுதல் வசீகரத்தை தரும்.
ஹோண்டா ஆக்டிவா 110 மாடலில் இருக்கும் அதே 109சிசி எஞ்சின்தான் புதிய ஹோண்டா நவி மோட்டோஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
புதிய ஹோண்டா நவி ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஒற்றை ஷாக் அப்சார்பர் கொண்ட சஸ்பென்ஷனும் கொடுக்கப்படுகிறது. இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
2018 மாடலாக விற்பனைக்கு அறிமுமாகி இருக்கும் புதிய ஹோண்டா நவி ஸ்கூட்டருக்கு ரூ.44,775 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட ரூ.1,991 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான இந்த ஸ்கூட்டர் வித்தியாசமான போக்குவரத்து சாதனத்தை விரும்புவோருக்கான சாய்ஸாக இருக்கும்.