புதிய யமஹா ஆர்3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

Written By:

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய யமஹா ஆர்3 பைக் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் இந்த புதிய பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தார். இந்த புதிய ஆர்3 பைக் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

 புதிய யமஹா ஆர்3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் பாரத் - 4 மாசு உமிழ்வு தர விதிகள் கட்டாயமாக்கப்பட்டன. இதனையடுத்து, பாரத் - 3 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த யமஹா ஆர்3 ஸ்போர்ட்ஸ் பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது.

புதிய யமஹா ஆர்3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்தியாவில் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டு ஓர் ஆண்டு நெருங்கும் நிலையில், பாரத் - 4 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட மேம்படுத்தப்பட்ட எஞ்சினுடன் யமஹா ஆர்3 பைக் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய யமஹா ஆர்3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய யமஹா ஆர்3 பைக்கில் இருக்கும் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 321சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 41 பிஎச்பி பவரையும், 29.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய யமஹா ஆர்3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

மேம்படுத்தப்பட்ட எஞ்சின் தவிர்த்து, புதிய யமஹா ஆர்3 பைக்கில் இரண்டு சக்கரங்களுக்குமான டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் வரவேற்கத்தக்க அம்சமாக இருக்கும்.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
புதிய யமஹா ஆர்3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய யமஹா ஆர்3 பைக்கில் முன்புறத்தில் 41மிமீ கயபா ஃபோர்க்குகளுடன் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய யமஹா ஆர்3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

முன்சக்கரத்தில் 298மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மெட்ஸீலர் எம்-5 டயர்களும் முக்கிய விஷயமாக கூறலாம்.

புதிய யமஹா ஆர்3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

எஞ்சின், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் தவிர்த்து, புதிய வண்ணங்களில் யமஹா ஆர்3 பைக் வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் விஷயமாக இருக்கும்.

புதிய யமஹா ஆர்3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்தோனேஷியாவில் உள்ள யமஹா நிறுவனத்தின் ஆலையிலிருந்து உதிரிபாகங்களாக தருவிக்கப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும்.

புதிய யமஹா ஆர்3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ரூ.3.48 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய யமஹா ஆர்3 பைக் விற்பனைக்கு வந்துள்ளது. ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டில் தொடர்ந்து சிறப்பான தேர்வாக புதிய யமஹா ஆர்3 இருக்கும் என்று நம்பலாம்.

மேலும்... #யமஹா #yamaha #auto expo 2018
English summary
2018 Yamaha YZF-R3 Launched In India.
Story first published: Friday, February 9, 2018, 14:48 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark