ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகமான முத்தான 3 பவர்ஃபுல் மின்சார பைக்குகள்!

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மூன்று முத்தான மின்சார பைக் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

எதிர்பார்த்தது போலவே ஆட்டோ எக்ஸ்போவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருந்தது. சில நிறுவனங்கள் திடு திப்பென சக்திவாய்ந்த பைக் மாடல்களை களமிறக்கி பார்வையாளர்களையும், இந்தியர்களையும் திக்குமுக்காட செய்துள்ளன. ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான சிறந்த பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

01. யுஎம் ரெனிகேட் தோர் [ரகம்: க்ரூஸர் பைக்]

01. யுஎம் ரெனிகேட் தோர் [ரகம்: க்ரூஸர் பைக்]

க்ரூஸர் பைக் தயாரிப்பில் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் ஆட்டோ எக்ஸ்போவில் ரெனிகேட் தோர் என்ற அசத்தலான மின்சார க்ரூஸர் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகமான முத்தான 3 பவர்ஃபுல் மின்சார பைக்குகள்!

திடகாத்திரமான உடல் அமைப்பு கொண்ட பிரிமியம் க்ரூஸர் மாடலாகவே டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மின்சார மோட்டார்சைக்கிள் ரூ.4.9 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகமான முத்தான 3 பவர்ஃபுல் மின்சார பைக்குகள்!

க்ரூஸர் ரகத்தை இந்த மோட்டார்சைக்கிள் மூன்றுவிதமான சக்தியை வெளிப்படுத்தும் திறன் தேர்வில் கிடைக்கும். இந்த மோட்டார்சைக்கிளில் வழங்கப்படும் 7.5kW திறன் வாய்ந்த பேட்டரி 80 கிமீ தூரமும், 15kW திறன் வாய்ந்த பேட்டரி 149 கிமீ தூரமும், 27kW திறன் கொண்ட பேட்டரி 270 கிமீ தூரமும் பயணிக்கும். இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 185 கிமீ வேகம் வரை பயணிக்கும்.

02. மென்ஸா லுகட் [ரகம்: ஸ்போர்ட்ஸ் பைக்]

02. மென்ஸா லுகட் [ரகம்: ஸ்போர்ட்ஸ் பைக்]

ஆமதாபாத்தை சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனத்தின் கைவண்ணத்தில் உருவான பைக் மாடல்தான் மென்ஸா லுகட். ஆட்டோ எக்ஸ்போவை சரியான தளமாக கருதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டுகாட்டி டிசைன் பிரதிபலிப்புகள் இருக்கின்றன.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகமான முத்தான 3 பவர்ஃபுல் மின்சார பைக்குகள்!

சிவப்பு வண்ண ப்ரேமுடன் சூப்பர் பைக்குகளுக்கு உரிய மிரட்டலுடன் வடிவமைக்கப்ப்டடு இருக்கிறது. ஸ்போக்ஸ் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. வழக்கமாக எஞ்சின் பகுதி அமையும் பகுதியில் பேட்டரி மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகமான முத்தான 3 பவர்ஃபுல் மின்சார பைக்குகள்!

இந்த பைக்கில் இருக்கும் 72V லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் பிடிக்கும். குயிக் சார்ஜர் மூலமாக 90 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், சீராக இயக்கும்போது 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ரூ.2.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

03. எம்ஃப்ளக்ஸ் ஒன் [ரகம்: சூப்பர் பைக்]

03. எம்ஃப்ளக்ஸ் ஒன் [ரகம்: சூப்பர் பைக்]

பெங்களூரை சேர்ந்த எம்ஃப்ளக்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியிருக்கும் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் மாடல் என்ற பெருமையுடன் விற்பனைக்கு வந்துள்ளது எம்ஃப்ளக்ஸ் ஒன் மின்சார பைக். இந்த பைக்கில் எக்கச்சக்கமான சிறப்பம்சங்களும், செயல்திறன் மிரட்டும் வகையிலும் அமைந்துள்ளன. சூப்பர் பைக்குகளுக்கு உரித்தான அம்சங்களுடன் சிறப்பாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. விலை குறைந்த மாடல் ரூ.6 லட்சம் ஆன்ரோடு விலையிலும், விலை உயர்ந்த மாடலுக்கு ரூ.11 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகமான முத்தான 3 பவர்ஃபுல் மின்சார பைக்குகள்!

பெட்ரோல் சூப்பர் பைக்குகளே வாய் பிளக்க வைக்கும் விதத்தில், இந்த மின்சார சூப்பர் பைக்கின் தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த சூப்பர் பைக் அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகத்தை தொடும் வல்லமை கொண்டது. இந்த பைக்கில் இருக்கும் சக்திவாய்ந்த மின் மோட்டார்அதிகபட்சமாக 80.4 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததது. ஆனால், 71 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் விதத்தில் கட்டுப்படுத்ததப்பட்டு இருக்கிறது. இந்த பைக் மோட்டார் 84 என்எம் டார்க் திறனை வாரி வழங்கும்.

ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகமான முத்தான 3 பவர்ஃபுல் மின்சார பைக்குகள்!

எம்ஃப்ளக்ஸ் ஒன் சூப்பர் பைக் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் தொட்டுவிடும் வல்லமை கொண்டதாக தெரிவிக்கப்ப்படுகிறது. முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்தால் 150 கிமீ முதல் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்கும். குயிக் சார்ஜர் மூலமாக 30 நிமிடங்களில் 85 சதவீதம் அளவு பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். ஓலின்ஸ் சஸ்பென்ஷன், பிரெம்போ டிஸ்க் பிரேக், கார்பன் ஃபைபர் பேனல் உள்ளிட்ட ஆக்கசஸெரீகள் விலை உயர்ந்த மாடலில் கிடைக்கும்.

Most Read Articles
English summary
3 Powerful Electric Bikes Launched At Auto Expo.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X