"மேட் இன் தமிழ்நாடு ஸ்கூட்டர்" மூலம் கார்பரேட்களுடன் 'தில்'லாக போட்டிபோடும் உள்ளூர் நிறுவனம்

By Balasubramanian

தமிழ்நாட்டை மையமாக கொண்டு செயல்படும் அம்பியர் நிறுவனம் சுற்றுசூழலை மாசுபடுத்தாமல் செயல்படும் 2 புதிய எலெட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்களுடன் தில்லாக நேருக்கு நேர் போட்டியிடுகிறது. இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர் முழுவதும் தமிழ்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரை மையமாக கொண்ட அம்பியர் என்ற நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்நிறுவனம் பேட்டரியில் இயங்கக்கூடிய குறைந்த வேகத்தில் செல்லக்கூடிய வாகனங்களை தயாரித்து வந்தது.

அதாவது ரயில் நிலையங்களில், கோவில்களில் நடக்க முடியாதவர்கள் பயன்படுத்தும் படி வைக்கப்பட்டுள்ள வாகனம் சமீபத்தில் குப்பை சேகரிக்க பயன்படுத்தப்படும் வாகனம் என இந்த ரக வாகனங்களை தயாரித்து வந்தனர்.

இந்நிறுவனத்தின் ஸ்பெஷாலிட்டியே இந்நிறுவனம் தயாரிக்கும் எந்த வாகனங்களும் சுற்று சூழலுக்கு சேதத்தை ஏற்படுத்தாது. தற்போது இந்த நிறுவனம் இரண்டு விதமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய அம்பியர் வி48 மற்றும் ரியோ வி-இயான் ஆகிய ஸ்கூட்டர்கள் தற்போது விற்பனையாகி வருகின்றன. வி48 என்ற ஸ்கூட்டர் ரூ 38,000 மற்றும் ரியோ லி இயான் என்ற ஸ்கூட்டர் ரூ 46,000 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஸ்கூட்டரை நீங்கள் வாங்க ஆர்.டி.ஓ.வில் பதிவு செய்யவே தேவையில்லை. இந்த பைக் அதிகபட்சமாக 25 கி.மீ. வேகத்தில் தான் செல்லும், தற்போது அந்நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள 14 மாநிலங்களில் 150 டீலர்ஷிப்கள் நிறுவியுள்ளன.

கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் இதுவரை 35,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறை கோயம்புத்தூரில் செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் உள்ளவர்கள் தான் இந்த ஸ்கூட்டருக்கான சார்ஜர், பேட்டரி கண்ட்ரோலர் ஆகியவற்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த ஸ்கூட்டருக்கா பேட்டரி மற்றும் தைவான், மற்றும் சீனா போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த ஸ்கூட்டரின் டிசைன் முழுவதும், கோயம்புத்தூரில் தான் டிசைன் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டது. அதனால் இந்த பைக்கை நாம் மேட் இன் தமிழ்நாடு ஸ்கூட்டர் என்றே கூறலாம்.

இந்த ஸ்கூட்டர் 4-5 மணி நேரத்தில் முழு சார்ஜை எட்டி விடும். முழு சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி 65-70 கி.மீ., வரை செல்லும், ஆனால் இது 25 கி.மீ., வேகத்தில் தான் செல்கிறது.

இந்த பைக்கில் 250வாட்ஸ் பிரஸ்லெஸ் டிசி மோட்டார் பயன்படுத்தப்படுகிறது இதற்கு 48வோல்ட் லித்தியம் இயான் பேட்டரி மூலம் பவர் செலுத்தப்படுகிறது. ரியோ லி இயான் பேட்டரியை பொருத்தவரை 120 கிலோ வரை எடை தாங்ககூடியது. வி48 ரக ஸ்கூட்டர் 100 கிலோ வரை எடை தாங்ககூடியது. இந்த ஸ்கூட்டருடன் ரூ 3 ஆயிரம் மதிப்புள்ள லித்தியம் இயான் சார்ஜரையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அம்பியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பைக்கில் எந்த இருந்த விதமான புகையும் வெளிவராது. அதனால் இந்த பைக் சுற்றுசூழலை மாசுபடுத்தாது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் இவ்வளவு அம்சங்களுடன் ஒரு ஸ்கூட்டரை தயாரித்து பெரிய பெரிய நிறுவனங்களுடன் போட்டி போடுவதே பெரிய விஷயம் தான். இந்த நிறுவனத்தின் முயற்சியை நீங்களும் கமெண்டில் பாராட்டுங்கள்

டிரைவ் ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

01. ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

02. போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்! பிரம்மிப்பூட்டும் வீடியோ!!

03. பாலைவனத்தில் வைத்து புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 சோதனை: ஸ்பை படங்கள்!!

04. ஆடி கார் நிறுவனம் குறித்த சிதம்பர ரகசியம் கசிந்தது..!

05. பேன்ஸி நம்பர் வாங்குவதில் இமாலய சாதனை படைத்த தொழிலதிபர்...! சுவாரசியமான பின்னணி...!!!

Most Read Articles

English summary
Ampere Electric Vehicles Launches Two New Electric Scooters In India. Read in Tamil
Story first published: Friday, May 18, 2018, 14:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X