2018 ஆட்டோ எக்ஸ்போ லைவ்: ரூ. 65, 310 விலையில் அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

Posted By:

இந்திய வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டர், 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ரூ. 65,310 (எக்ஸ்-ஷோரூம் பூனே) விலையில் விற்பனைக்கு வந்தது.

அப்ரிலியா எஸ்ஆர் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்தியாவில் ஆன்-சேலில் உள்ள இந்த ஸ்கூட்டர் செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புகளில் டிவிஎஸ் என்டார்க் 125, ஹோண்டா கிராஸியா மற்றும் சுஸுகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

அப்ரிலியா எஸ்.ஆர் ஸ்கூட்டரில் 124சிசி திறன் பெற்ற 3 வால்வ் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது அதிகப்பட்சமாக 9.45 பிஎச்பி பவர் மற்றும் 8.2 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

மேலும் இதில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது. அப்ரிலியா எஸ்.ஆர் ஸ்கூட்டரின் எரிவாயு கொள்ளவு 7 லிட்டராகும், தவிர நிலத்திலிருந்து ஸ்கூட்டரின் இருக்கை 775 மிமீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அப்ரிலியா எஸ்ஆர் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் முன்பக்க சக்கரத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ், பின் சக்கரத்தில் மோனோஷாக் அப்ஸபர்கள் ஆகியவை சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.

14 இஞ்ச் அளவிலான அலாய் சக்கரங்கள் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கூட்டரின் முன்பக்க சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. பின்சக்கரத்தில் 140 மிமீ டிரம் பிரேக் உள்ளது.

வடிவமைப்பு & அம்சங்கள்

வடிவமைப்பு & அம்சங்கள்

முன்னதாக வெளியான எஸ்.ஆர். 150 ஸ்கூட்டரின் வடிவமைப்பு மற்றும் அம்சங்களை பின்பற்றி தான் புதிய எஸ்.ஆர். 125 ஸ்கூட்டரை அப்ரிலியா நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ட்வின் பாட் முகப்பு விளக்குகளை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டர், கையாள்வதிலும் எளிதாக இருக்கும் என அப்ரிலியா தகவல் தெரிவித்துள்ளது.

அப்ரிலியா எஸ்ஆர் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஸ்கூட்டருக்கான தொழில்நுட்ப கட்டமைப்பில் அனலாகில் இயங்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது. டூயல் டோன் இருக்கை மற்றும் நீலம், சில்வர் என இரு வண்ணங்களில் கவர்ந்திழுக்கும் கிராஃபிக்ஸ் வேலைபாடுகள் கண்ணை பறிக்கின்றன.

அப்ரிலியா எஸ்ஆர் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்தியாவிற்கான 125சிசி ஸ்கூட்டர் சந்தையில் இத்தாலியை சேர்ந்த அப்ரிலியா வெற்றிக்கரமாக காலடியை எடுத்து வைத்துள்ளது.

அதிக செயல்திறன் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மீது ஆர்வம் கொண்ட பலருக்கு அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டர் சிறந்த தேர்வாக இருக்கும்.

English summary
Read in Tamil: Aprilia SR 125 Launched At Rs 65,310 - Specifications, Features & Images. Click for Details...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark