அப்ரில்லா ஸ்டிரோம் 125 ஸ்கூட்டர் எப்பொழுது விற்பனைக்கு வருகிறது?

அப்ரில்லா நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டரான ஸ்டிரோம் 125 என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி தயாராகி வருகிறது. அப்ரில்லா நிறுவனம் கடந்த பிப். மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இதை அறிமுகப்படுத்தியிருந்தது.

By Balasubramanian

அப்ரில்லா நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டரான ஸ்டிரோம் 125 என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி தயாராகி வருகிறது. அப்ரில்லா நிறுவனம் கடந்த பிப். மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இதை அறிமுகப்படுத்தியிருந்தது. இதை இந்தாண்டு இறுதியில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அப்பொழுது அறிவித்தது.

அப்ரில்லா ஸ்டிரோம் 125 ஸ்கூட்டர் எப்பொழுது விற்பனைக்கு வரு

ஆனால் தற்போது அறிமுகப்படுத்துவது மேலும் தாமதப்படுத்தப்படும் என தெரிகிறது. 2019ம் ஆண்டு துவக்கத்தில் இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. இது ஸ்கூட்டர் விலை குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

அப்ரில்லா ஸ்டிரோம் 125 ஸ்கூட்டர் எப்பொழுது விற்பனைக்கு வரு

ஆனால் இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமானால் இந்தியாவில் விற்கப்படும் அப்ரில்லா ஸ்கூட்டர்களில் இது தான் குறைந்த விலை ஸ்கூட்டராக இருக்கும் என கருதப்படுகிறது. அதாவது தற்போது உள்ள எஸ்ஆர்125 ஸ்கூட்டரை விட குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எஸ்ஆர் 125 மற்றம் எஸ்ஆர் 150 ஆகிய பைக்குகளுக்கு இடைபட்ட விலையிலும் இதன் விலை நிர்ணயிக்கப்படலாம்.

அப்ரில்லா ஸ்டிரோம் 125 ஸ்கூட்டர் எப்பொழுது விற்பனைக்கு வரு

இந்த அப்ரில்லா 125 ஸ்டிரோம் இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் 125 சிசி 4 ஸ்டோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் சிவிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஹேண்டிலிங், டார்க் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

அப்ரில்லா ஸ்டிரோம் 125 ஸ்கூட்டர் எப்பொழுது விற்பனைக்கு வரு

இந்த இன்ஜின் 9.65 பிஎஸ் பவரையும், 9.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த ஸ்கூட்டரில் 12 இன்ச் வீல் பயன்படுத்தப்படுகிறது. முன்பக்க டயர் 120/80 மற்றும் பின் பக்க டயர் 130/80 என்ற அளவுகளை கொண்டதாக பொருத்தப்பட்டுள்ளது.

அப்ரில்லா ஸ்டிரோம் 125 ஸ்கூட்டர் எப்பொழுது விற்பனைக்கு வரு

இந்த டயர்கள் அப்ரில்லா ஸ்டிரோம் 125 ஸ்கூட்டருக்கு ஆப் ரோட்டிற்கான அப்பீல் கிடைக்கிறது. ஆனால் இதன் பெர்பாமென்ஸ் என்ஹேண்சர் ஆன் ரோட்டிற்காக டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆப் ரோட்டிற்கு அது சரி பட்டு வராது.

அப்ரில்லா ஸ்டிரோம் 125 ஸ்கூட்டர் எப்பொழுது விற்பனைக்கு வரு

இந்த ஸ்கூட்டரின் சஸ்பென்ஸனை பொரத்தவரை டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. மேனோஷாக் ஆப்ஷர்பர் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் பிரேக்கை பொருத்தவரை முன்பக்கம் டிஸ்க் பிரேக் மற்றம் பின்பக்கம் டிரம் பிரேக் ஆகியன பொருத்தப்பட்டுள்ளது.

அப்ரில்லா ஸ்டிரோம் 125 ஸ்கூட்டர் எப்பொழுது விற்பனைக்கு வரு

மேலும் இதில் காம்பி-பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது ஸ்கூட்டரில் செல்லும் போது ஏதாவது ஒரு பிரேக்கை பிடித்தால் போதும் இரண்டு பிரேக்குகளும் ஒரே நேரத்தில் செயல்படும். இதனால் வழக்கான பிரேக்கை விட இது சிறப்பாக இருக்கும்.

அப்ரில்லா ஸ்டிரோம் 125 ஸ்கூட்டர் எப்பொழுது விற்பனைக்கு வரு

இந்த பைக்கின் விலையை பொருத்தவரை குறைவான விலையாக அறிவிக்கப்பட்டால் ரூ 60,000- ரூ 63,000 வரை விற்பனைக்கு வரும் என எதிர்பாகர்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்கூட்டரில் பல கஷ்டமைஸ்டு ஆப்ஷன்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia Storm 125 scooter, launch and price. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X