அட்டகாசமான 2 புதிய அப்ரிலியா 150சிசி பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

Written By:

கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், இரண்டு புதிய 150சிசி பைக்குகளை காட்சிக்கு வைத்து இந்திய பார்வையாளர்களை திக்குமுக்காட செய்துள்ளது அப்ரிலியா நிறுவனம்.

அப்ரிலியா டூவானோ 150 மற்றும் ஆர்எஸ்150 பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமத்தின் அங்கமாக செயல்படும் அப்ரிலியா நிறுவனம் பிரிமியம் பைக் தயாரிப்பில் உலகின் பாரம்பரியம் மிக்க நிறுவனங்களில் ஒன்று. இந்தியாவிலும் உயர்வகை பைக் மாடல்களை விற்பனை செய்வதுடன், அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர் மூலமாகா இந்தியர்களின் மனதில் இடம்பிடித்தது.

அப்ரிலியா டூவானோ 150 மற்றும் ஆர்எஸ்150 பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்த நிலையில், கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் புதிய அப்ரிலியா எஸ்ஆர்125 ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஏற்கனவே இருக்கும் எஸ்ஆர்150 ஸ்கூட்டரைவிட இது விலை குறைவான மாடல் என்பதால், இந்தியர்களின் தேர்வு பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பை பெற்றிருக்கிறது.

அப்ரிலியா டூவானோ 150 மற்றும் ஆர்எஸ்150 பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

அந்நிறுவனத்தின் விலை குறைவான எஸ்ஆர்125 ஸ்கூட்டர் மட்டுமின்றி, தனது இரண்டு புதிய 150சிசிசி பைக்குகளையும் அப்ரிலியா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருக்கிறது. அப்ரிலியா டுவானோ 150 மற்றும் அப்ரிலியா ஆர்எஸ்150 ஆகிய பெயர்களில் இந்த இரண்டு புதிய பைக் மாடல்களும் வந்துள்ளன.

அப்ரிலியா டூவானோ 150 மற்றும் ஆர்எஸ்150 பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

அப்ரிலியா நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற ஆர்எஸ்வி4 சூப்பர் பைக்கின் டிசைன் தாத்பரியங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த இரண்டு 150சிசி பைக் மாடல்களும் ஆட்டோ எக்ஸ்போவிற்கு வருகை தருவோரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
அப்ரிலியா டூவானோ 150 மற்றும் ஆர்எஸ்150 பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

அப்ரிலியா டுவானோ 150 மாடலானது நேக்கட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் என்ற திறந்த உடல் அமைப்பு கொண்ட பைக் மாடலாகவும், ஆர்எஸ்150 பைக் ஃபேரிங் பேனல்களுடன் உடல் மறைக்கப்பட்ட ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

அப்ரிலியா டூவானோ 150 மற்றும் ஆர்எஸ்150 பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

சர்வதேச அளவில் அப்ரிலியா டுவானோ பைக்கானது 125 எஞ்சினுடன் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தியாவில் 150சிசி எஞ்சினுடன் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பது உறுதியாகி இருக்கிறது.

அப்ரிலியா டூவானோ 150 மற்றும் ஆர்எஸ்150 பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்த இரண்டு பைக்குகளும் 150சிசி ரகத்தில் மிக பிரிமியமான மாடலாக இருக்கும். டிசைனும், வண்ணக் கலவையும் மிக கவர்ச்சிகரமாக இருக்கிறது. இந்த பைக் யமஹா ஆர்15 மற்றும் சுஸுகி ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்ஃப் ஆகிய பைக்குகளுக்கு இணையான ரகத்திலும், அதன் வாடிக்கையாளர்களை குறிவைத்தும் களமிறக்கப்படும் வாய்ப்புள்ளது.

அப்ரிலியா டூவானோ 150 மற்றும் ஆர்எஸ்150 பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்த இரண்டு பைக்குளும் ஒரே அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல்கள்தான். வடிவமைப்பில் மட்டும் வேறுபடுகின்றன. இந்த பைக் மாடல்களில் இருக்கும் 150சிசி எஞ்சின் அதிகபட்சமாக 17 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

அப்ரிலியா டூவானோ 150 மற்றும் ஆர்எஸ்150 பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

அப்ரிலியா டூவானோ 150 மற்றும் ஆர்எஸ்150 பைக் மாடல்களில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் அமைப்புடைய சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

அப்ரிலியா டூவானோ 150 மற்றும் ஆர்எஸ்150 பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

அதேபோன்று, முன்புறத்தில் 300மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 218 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்சக்கரமானது ஏபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. குயிக் கியர் ஷிஃப்ட் வசதியும் ஆப்ஷனலாக வழங்கப்படும்.

அப்ரிலியா டூவானோ 150 மற்றும் ஆர்எஸ்150 பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவிற்கு வரும் பார்வையாளர்களிடம் இந்த இரண்டு பைக் மாடல்களும் எந்தளவுக்கு வரவேற்பை பெறுகிறது என்பதை பார்த்து பின்னர், இந்த மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து அப்ரிலியா நிறுவனம் முடிவு செய்யும்.

அப்ரிலியா டூவானோ 150 மற்றும் ஆர்எஸ்150 பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இரண்டு பைக் மாடல்களும் மிக கவர்ச்சிகரமாகவும், பிரிமியம் அந்தஸ்தை பெற்றிருப்பதால், ஆட்டோ எக்ஸ்போவிற்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவரும் வாய்ப்புள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால், 150சிசி மார்க்கெட்டில் நிச்சயம் சிறப்பான தேர்வாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

English summary
The Aprilia Tuono 150 and RS 150 showcased at Auto Expo 2018. While the Aprilia Tuono 150 is a naked street fighter, the RS 150 is a fully faired motorcycle.
Story first published: Friday, February 9, 2018, 12:29 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark