லக்ஸரி காரின் வசதிகள் இப்போது ஸ்கூட்டரில்... இந்திய நிறுவனம் அசத்தல்...!

மோசமான நிலையில் உள்ள இந்திய சாலைகளில் பயணிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இப்படியான ஒரு சூழலில் வாகனங்களும் மோசமான நிலையில் இருந்தால், விபத்து நிகழ்வதை தவிர்ப்பது என்பது கடினம்தான்.

By Arun

மோசமான நிலையில் உள்ள இந்திய சாலைகளில் பயணிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இப்படியான ஒரு சூழலில் வாகனங்களும் மோசமான நிலையில் இருந்தால், விபத்து நிகழ்வதை தவிர்ப்பது என்பது கடினம்தான். இதை எல்லாம் மனதில் வைத்து, எம் 9 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆர்ட்டெம். இதுதான் உலகின் மிகவும் பாதுகாப்பான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என ஆர்ட்டெம் தெரிவித்துள்ளது.

லக்ஸரி காரின் வசதிகள் இப்போது ஸ்கூட்டரில்... இந்திய நிறுவனம் அசத்தல்...!

1.4 லட்சம் பேர் பலி

கடந்த ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் மட்டும் 1.4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதுமா? என கேட்காதீர்கள். இந்தியாவில் மட்டும். இந்திய சாலைகளில் பயணிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அது எமனுக்கே சவால் விடுவதை போன்றது. கடந்த ஆண்டு உயிரிழந்த 1.4 லட்சம் பேரில், 35 சதவீதத்தினர் டூவீலர் விபத்தில் சிக்கியவர்கள்.

3.60 கோடி டூவீலர்கள்

இப்படியான ஒரு சூழ்நிலையில் வெளியாகியுள்ள ஒரு புள்ளி விபரம் நம்மை திகைப்பட வைக்கும். இந்தியாவில் தற்போதை நிலையில் ஒரு ஆண்டுக்கான டூவீலர் நுகர்வு 20 மில்லியனாக உள்ளது. அதாவது 2 கோடி டூவீலர்கள். இதே நிலையில் சென்றால், 2022-23ம் ஆண்டில் இந்தியாவின் டூவீலர் நுகர்வு 36 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 3.60 கோடி டூவீலர்கள். எனவே அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த டூவீலர்களை தயாரிப்பது அவசியமாகிறது.

இந்திய நிறுவனத்தின் அசத்தல்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலைமை இடமாக கொண்டு ஆர்ட்டெம் எனர்ஜி பியூச்சர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் வாகன டெக்னாலஜி நிறுவனமான ஆர்ட்டெம், எம் 9 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதான் உலகின் மிகவும் பாதுகாப்பான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என ஆர்ட்டெம் வெளியிட்டுள்ள அறிவிப்புதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எம் 9 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், முன்னெப்போதும் இல்லாத ஏடிஏஎஸ் (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்) சேர்க்கப்படவுள்ளது. ஏடிஏஎஸ் இதற்கு முன்பாக விலை உயர்ந்த லக்ஸரி கார்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர்

இந்த ஸ்கூட்டரின் டாப் ஸ்பீட் மணிக்கு 90 கிலோ மீட்டர். பூஜ்ஜியத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் என்ற வேகத்தை 6 வினாடிகளில் எட்டலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்கலாம்? என்பதில் உள்ள பயம்தான், சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாறுவதில் நமக்கு இருக்கும் பிரச்னை. அந்த பிரச்னையை களையும் விதமாக எம் 9 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதில், ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் பயணிக்கலாம்.

எக்கச்சக்க வசதிகள்

டிரைவரின் தவறு மற்றும் கவனக்குறைவு ஆகிய காரணங்களினாலேயே பெரும்பாலான டூவீலர் விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதை தவிர்க்கும் வகையிலான அம்சங்களில் ஆர்ட்டெம் கவனம் செலுத்தி வருகிறது. அதாவது சிறப்பான முடிவுகளை உரிய நேரத்தில் எடுக்க டிரைவருக்கு உதவி செய்யும் வகையிலான எச்சரிக்கை அறிவிப்புகளை எம் 9 அளித்து கொண்டே இருக்கும். நமக்கு மிகவும் நெருக்கமாக ஏதாவது வாகனம் சென்றால், அது தொடர்பான எச்சரிக்கையை எம் 9 உடனடியாக அளித்து விடும். வளைவில் திரும்பி முடித்த உடன், இன்டிகேட்டர்கள் தானாக ஆப் செய்யப்பட்டு விடும். இதற்கான சென்சார்கள் எம் 9 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்படவுள்ளன. எலக்ட்ரோ டைனமிக் பிரேக்கிங் (இடிபி), ஸ்மார்ட் ஹெல்மெட் என இதன் வசதிகள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளன.

அவசர கால மெசேஜ்

விபத்து நிகழ்ந்த உடன் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததாலேயே அதிகப்படியான உயிரிழப்புகள் நிகழ்கின்றன. அந்த குறையை போக்கும் வகையில் எம் 9 செயல்படும். ஒரு வேளை விபத்து நிகழ்ந்து விட்டால், ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள 5 தொலைபேசி எண்களுக்கு, அது தொடர்பான மெசேஜ்களையும் எம் 9 தானாகவே வழங்கி விடும்.

எப்போது விற்பனைக்கு வரும்?

ஆர்ட்டெம் எம் 9 விற்பனைக்கு வரும் காலம் குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகையில், மிக அதிக விலை கொண்டதாக ஆர்ட்டெம் எம் 9 இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Artem announces the M9 - the world's safest electric scooter. read in tamil
Story first published: Tuesday, May 8, 2018, 14:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X