இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஏத்தர் எஸ்340 விற்பனைக்கு வருகிறது

இந்தியாவின் முதல் எலெட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டரான ஏத்தர் எஸ் 340 என்ற ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு வரும் ஜூன் மாதம் துவங்குகிறது.

By Balasubramanian

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஏத்தர் எனர்ஜி என்ற நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டரை தயாரித்துள்ளது.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஏத்தர் எஸ்340 விற்பனைக்கு வருகிறது

அந்நிறுவனம் தயாரித்திருக்கும் எலெட்ரிக் ஸ்கூட்டருக்கு எஸ் 340 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் பிளேடு ரன்னர் படத்தில் வரும் ஸ்கூட்டர் போன் வடிவத்தில் உள்ளது.

ஏத்தர் எஸ் 340 ஸ்கூட்டரை பொருத்தவரை இதில் முக்கிய அம்சமாக உள்ளது. இதன் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்ஸ் தான். அதில் ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி, பார்க்கிங் அசிஸ்ட், நேவிகேஷன் அசிஸ்ட், வாகனத்தை சார்ஜ் செய்யும் இடங்களை தேடுவது. ஆகிய வசதிகள் உள்ளது.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஏத்தர் எஸ்340 விற்பனைக்கு வருகிறது

மேலும் இந்த ஸ்கூட்டரில் சிபிஎஸ், எல்.இ.டி. லைட்டிங், சீட்டிற்கு அடியில் லைட், என பல கவனிக்க தக்க அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த ஸ்கூட்டர் குறைந்த எடை கொண்ட அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஏத்தர் எஸ்340 விற்பனைக்கு வருகிறது

இதில் உள்ள ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி மூலம் பைக்கில் எவ்வளவு சார்ஜ் உள்ளது, பைக் தற்போது எந்த இடத்தில் உள்ளது. சார்ஜ் ஏறும் சமயங்களில் எவ்வளவு சார்ஜ் ஏறியுள்ளது. இதை வைத்துக்கொண்டு எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என பல்வேறு தகவல்களை நமது ஸ்மார்ட் போனிலேயே பெற முடியும்.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஏத்தர் எஸ்340 விற்பனைக்கு வருகிறது

இதன் பேட்டரியை பொருத்தவரை லித்தியம் ஐயான் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இதில் முழு சார்ஜ் செய்தால் சுமார் 60 கி.மீ.,வரை பயணம் செய்ய முடியும். இந்த பைக் அதிகபட்சமாக 72 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடியது.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஏத்தர் எஸ்340 விற்பனைக்கு வருகிறது

இதில் உள்ள பாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி மூலம் 50 நிமிடத்தில் 80 சதவீத பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். மேலும் இந்த பேட்டரி சுமார் 50,000 கி.மீ. வரை உறுதியுடன் இருக்கும்.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஏத்தர் எஸ்340 விற்பனைக்கு வருகிறது

இந்தியாவில் எலெட்ரிக் வாகனங்கள் குறைவாக விற்பனையாவதற்கு முக்கிய காரணம் சார்ஜ் சென்டர்கள் இல்லாதது தான். இதை சரி செய்ய எத்தர் நிறுவனம் பெங்களூருவில் பல இடங்களில் சார்ஜ் சென்டர்களை அமைக்க இருக்கிறது. இது வரும் மே மாதம் முதல் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஏத்தர் எஸ்340 விற்பனைக்கு வருகிறது

இதற்கிடையில் பெங்களுவில் உள்ள இந்திராநகர் பகுதியில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக டெஸ்ட் டிரைவ் ஒன்றை நடத்தவுள்ளது. இதன் மூலம் ஸ்கூட்டர் விற்பனையை அதிகரிக்க முடியும் என கூறப்படுகிறது.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஏத்தர் எஸ்340 விற்பனைக்கு வருகிறது

தற்போது டுவென்டி டூ மோடார் பிளோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ 74,740க்கும் ஒக்கிநவா பிரைஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ 59,899 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏத்தர் விற்பனைக்கு வரும் பட்சத்தில் இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் இதற்கு போட்டியாக அமையும்.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஏத்தர் எஸ்340 விற்பனைக்கு வருகிறது

தற்போது இதன் விலை வெளியிடப்படவில்லை எனினும் சுமார் ரூ 1 லட்சம் விலையில் இந்த ஸ்கூட்டர் விற்பனையாகும் என கூறப்படுகிறது. இது ஸ்மார்ட் ஸ்கூட்டராக இருப்பதால் இதன் விலை மற்ற சாதாரண எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஏத்தர் எஸ்340 விற்பனைக்கு வருகிறது

இந்த ஸ்கூட்டர் மார்க்கெட்டில் வெற்றி பெரும் பட்சத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் சுமார் ரூ180 கோடி கொடுத்து இந்த நிறுவனத்தை தன்னுடன் இனணத்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
English summary
Ather S340 Bookings To Begin In June. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X