அடுத்த வாரம் எக்ஸ்போவில் வெளிவரும் புதிய ப்ரீமியம் பைக் பற்றி இதுவரை தகவல்கள் தர மறுக்கும் ஹோண்டா..!

Written By:

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ப்ரீமியம் ரக இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்கிறது.

ஹோண்டா புதிய ரக ப்ரீமியம் பைக்: இதுவரை எந்த தகவல்களும் இல்லை

ஹோண்டாவின் இந்த பைக் 125சிசி திறன் பெற்ற எஞ்சினை பெற்றிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா புதிய ரக ப்ரீமியம் பைக்: இதுவரை எந்த தகவல்களும் இல்லை

அதன் காரணமாக இந்த புதிய பைக், ஹோண்டா சிபி ஷைன் அல்லது ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி ஆகிய மாடல்களுக்கு முன்னிலை பெற்ற மாடலாக இருக்க வாய்ப்புள்ளது.

Recommended Video - Watch Now!
Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark
ஹோண்டா புதிய ரக ப்ரீமியம் பைக்: இதுவரை எந்த தகவல்களும் இல்லை

ஏற்கனவே புதிய ரக நான்கு வித பைக்குகளை ஹோண்டா வெளியிடுவதாக அறிவித்துள்ளது. அதில் ஹோண்டா கிளிக், ஹோண்டா ஆஃபிரிக்க ட்வின் மற்றும் ஹோண்டா கிராஸியா ஸ்கூட்டர் என மூன்று மாடல்களை முன்னரே ஹோண்டா வெளியிட்டுவிட்டது.

ஹோண்டா புதிய ரக ப்ரீமியம் பைக்: இதுவரை எந்த தகவல்களும் இல்லை

இந்த வரிசையில் அது வெளியிடும் நான்காவது மாடல் தான் இந்த இருசக்கர வாகனம். சகஜமான நிலைகளை விடுத்து. ஒரு ப்ரீமியம் தர மாடலாக இந்த பைக் வெளிவரவிருப்பது மட்டும் உறுதி.

ஹோண்டா புதிய ரக ப்ரீமியம் பைக்: இதுவரை எந்த தகவல்களும் இல்லை

ஹோண்டா வெளியிடும் இந்த பைக் 125சிசி திறனில் வெளிவரும் முதல் ப்ரீமியம் தர மாடலாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. அல்லது இந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் நோக்கில் பைக்கின் எஞ்சின் 150சிசி திறனுடனும் வெளிவரலாம்.

ஹோண்டா புதிய ரக ப்ரீமியம் பைக்: இதுவரை எந்த தகவல்களும் இல்லை

ஏற்கனவே 150சிசி எஞ்சினில் ஹோண்டா ப்ரீமியம் தர சிபிஆர் 150ஆர் மாடலை தயாரித்து வந்தது. ஆனால் பிஎஸ் 4 எஞ்சின் அறிவிப்பிற்கு பிற்பாடு அந்த பைக்கின் தயாரிப்பு பணிகள் கைவிடப்பட்டன.

ஹோண்டா புதிய ரக ப்ரீமியம் பைக்: இதுவரை எந்த தகவல்களும் இல்லை

இருந்தாலும் மேம்படுத்தப்பட்ட ஒரு சிபிஆர் 150 ஆர் மாடலை பேக்-அப் பிளானாக ஹோண்டா இந்தோனேஷியாவில் வெளியிட்டுள்ளது. அது விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா புதிய ரக ப்ரீமியம் பைக்: இதுவரை எந்த தகவல்களும் இல்லை

தொடர்ந்து வெளிவரும் புதிய இருசக்கர வாகனங்களை பற்றிய எல்லா தகவல்களிலும் சஸ்பென்ஸ் காத்து வருகிறது ஹோண்டா. ஆனால் இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனையில் கில்லி என்றால் அது ஹோண்டா தான்.

ஹோண்டா புதிய ரக ப்ரீமியம் பைக்: இதுவரை எந்த தகவல்களும் இல்லை

அதன் காரணமாகவே இந்த பிரிவில் தொடர்ந்து வாகனங்களை தயாரிப்பதிலும், விற்பதிலும் அந்நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

English summary
Read in Tamil: Auto Expo 2018 Honda Tight Lipped About New Premium Bike. Click for Details...
Story first published: Tuesday, January 30, 2018, 11:19 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark