பஜாஜ் வி12 பைக்கின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்!

பஜாஜ் வி12 பைக்கின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கம் முதலே பஜாஜ் வி12 பைக்கின் விற்பனையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டது. மேலும், டீலர்கள் இந்த பைக்கிற்கு முன

By Saravana Rajan

பஜாஜ் வி12 பைக்கின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஜாஜ் வி12 பைக்கின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்!

பஜாஜ் வி12 பைக்கின் வித்தியாசமான வடிவமைப்பு வாடிக்கையாளர்களை கவர்ந்ததுடன் விற்பனையிலும் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வந்தது. இந்த பைக்கில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட இரும்பு இந்த பைக்கின் உதிரிபாகங்களில் குறிப்பிட்ட சதவீதம் சேர்க்கப்படுவதாகவும் பஜாஜ் அறிவித்ததால், பெரிதும் கவர்ந்தது.

பஜாஜ் வி12 பைக்கின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்!

பஜாஜ் டிஸ்கவர் 125 மற்றும் வி15 பைக்குகளுக்கு இடையிலான விலை ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு துவக்கம் முதலே பஜாஜ் வி12 பைக்கின் விற்பனையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டது. மேலும், டீலர்கள் இந்த பைக்கிற்கு முன்பதிவை பெறவில்லை. இதனால், கடந்த மாதம் விற்பனை பூஜ்யமாகியது.

பஜாஜ் வி12 பைக்கின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்!

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் வி15 பைக்கின் டிசைனை ஒத்திருக்கிறது. ஆனால், கவர்ச்சிக்காக வி15 பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் பல க்ரோம் உதிரிபாகங்கள் இந்த பைக்கில் இருந்து நீக்கப்பட்டு இருந்தன. மேலும், சாதாரண இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டது.

பஜாஜ் வி12 பைக்கின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்!

இந்த பைக்கில் 124.5சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 10.5 பிஎச்பி பவரையும், 10.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

பஜாஜ் வி12 பைக்கின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்!

பஜாஜ் வி15 பைக்கைவிட விலை குறைவான மாடலாக வந்ததால், விற்பனையில் அதிக எண்ணிக்கையை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த பைக் வாடிக்கையாளர்களை கவரவில்லை.

பஜாஜ் வி12 பைக்கின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்!

எனினும், இந்த பைக்கை கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தி அடுத்த சில மாதங்களில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதேபோன்றுதான், பஜாஜ் பல்சர் எல்எஸ்135 பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டு, மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Most Read Articles
English summary
Bajaj Auto has discontinued sales of their V12 motorcycle offering. However, the company has said that the discontinuation is only temporary. According to BikeWale, the Bajaj V12 will be back on sale in a few months time.
Story first published: Thursday, July 5, 2018, 15:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X