இந்தியாவில் ரூ. 1.60 லட்சம் வரை விலை குறையும் பிஎம்டபுள்யூ மோட்டோராட் பைக்குகள்... காரணம் இதுதான்..!
இந்தியாவில் ரூ. 1.60 லட்சம் வரை விலை குறையும் பிஎம்டபுள்யூ மோட்டோராட் பைக்குகள்... காரணம் இதுதான்..!!
இந்தியாவில் விற்பனையில் உள்ள தனது இருசக்கர வாகனங்களின் விலையை குறைத்துள்ளதாக அந்நிறுவனம் பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனம் அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பைக்குகளுக்கு மத்தியரசு சுங்க வரியை குறைந்துள்ளது.
இதன்படி இந்தியாவில் சிபியூ யூனிட்டின் கீழ் தயாராகும் பிஎம்டபுள்யூ பைக்குகள் 25 சதவீதம் வரை விலை குறைந்துள்ளது.

இதனடிப்படையில் பிஎம்டபுள்யூ மோட்டோராட் பைக்குகள் ரூ. 1.60 லட்சம் வரை விலை குறைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை மற்றும் விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பிஎம்டபுள்யூவின் அட்வென்ச்சர், ஸ்போர்ட், டூரிங், ஹெரிடேஜ் மற்றும் ரோட்ஸ்டர் போன்ற மாடல்கள் 10 சதவீதம் வரை விலை குறைந்துள்ளது.

தொடர்ந்து அந்நிறுவனம் அடுத்து வெளியிடவுள்ள ஜி310 ஆர், ஜி310 ஜிஎஸ் மற்றும் தற்போது தயாரிப்பு லைன்-அப்பில் உள்ள எஸ் 1000 ஆர்.ஆர், ஆர் 1200 ஆர்.எஸ். ஆர்1200 ஜிஎஸ், ஆர் 1200 ஜிஎஸ் அட்வென்ச்சர், எஃப் 750 ஜிஎஸ், எஃப் 850 ஜிஎஸ், எஸ் 1000 எக்ஸ்.ஆர், எஸ் 1000 ஆர், ஆர் 1200 ஆர், ஆர் நைன்டி, ஆர் நைன்டி ஸ்கிராம்பிளர், ஆர் நைன்டி ரேஸர், ஆர் 1200 ஆர்.டி. கே 1600 ஜிடிஎல் மற்றும் கே 1600 பி போன்ற பைக்குகளின் விலையும் குறைந்துள்ளது.
Recommended Video


இதற்கிடையில் பிஎம்டபுள்யூ புதியதாக வெளியிட்டுள்ள எஃப் 750 ஜிஎஸ் மற்றும் எஃப் 850 ஜிஎஸ் பைக்குகள் இந்த விலை குறைப்பில் பலன் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுப்பற்றி பேசிய பிஎம்டபுள்யூ இந்திய குழுமத்தின் தலைவர் விக்ரம் பவா, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிஎம்டபுள்யூவின் பைக்குகள் பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இதற்கான விலை குறைந்துள்ளது மேலும் பல வாடிக்கையாளர்களை அதிகரிக்கும். வாகன தயாரிப்பில் பிஎம்டபுள்யூ நிறுவனம் என்றுமே சமரசம் செய்து கொள்வதில்லை என்று அவர் கூறினார்.

புதிய விலையின் படி பிஎம்டபுள்யூ எஸ் 1000 எக்ஸ்.ஆர் ப்ரோ பைக் அதிகப்பட்சமாக ரூ. 1,60,000 வரை விலை குறைந்துள்ளது. தொடர்ந்து பிஎம்டபுள்யூ ஆர் 1200 ஜிஎஸ் ஸ்டேன்டர்டு பைக் ரூ. 20,000 வரை விலை குறைப்பு பெற்றுள்ளது.

பிஎம்டபுள்யூ பைக் விலைப்பட்டியல்
| மாடல் | பழைய விலை | புதிய விலை | வேறுபாடு |
| S 1000 RR Standard | ரூ. 18.90 லட்சம் | ரூ. 17.90 லட்சம் | ரூ. 1 லட்சம் |
| S 1000 RR Pro | ரூ.21.40 லட்சம் | ரூ. 20.60 லட்சம் | ரூ. 80,000 |
| R 1200 RS Standard | ரூ. 15.90 லட்சம் | ரூ. 15.40 லட்சம் | ரூ. 50,000 |
| R 1200 RS Dynamic+ | ரூ. 16.90 லட்சம் | ரூ.16.40 லட்சம் | ரூ. 50,000 |
| R 1200 GS Standard | ரூ. 15.90 லட்சம் | ரூ. 15.70 லட்சம் | ரூ. 20,000 |
| R 1200 GS Pro | ரூ. 19.50 லட்சம் | ரூ. 18.90 லட்சம் | ரூ. 60,000 |
| R 1200 GS Adventure Standard | ரூ. 17.50 லட்சம் | ரூ. 17.10 லட்சம் | ரூ. 40,000 |
| R 1200 GS Adventure Pro | ரூ. 21.40 லட்சம் | ரூ. 20.80 லட்சம் | ரூ. 60,000 |
| S 1000 XR Standard | ரூ. 18.50 லட்சம் | ரூ. 17.50 லட்சம் | ரூ. 1 லட்சம் |
| S 1000 XR Pro | ரூ. 21.50 லட்சம் | ரூ. 19.90 லட்சம் | ரூ. 1,60,000 |
| F 750 GS | ரூ. 12.20 லட்சம் | ரூ. 12.20 லட்சம் | Nil |
| F 850 GS | ரூ. 13.70 லட்சம் | ரூ. 13.70 லட்சம் | Nil |
| S 1000 R Standard | ரூ. 16.90 லட்சம் | ரூ. 16.30 லட்சம் | ரூ. 60,000 |
| S 1000 R Sport | ரூ. 17.90 லட்சம் | ரூ. 17.20 லட்சம் | ரூ. 70,000 |
| S 1000 R Pro | ரூ. 18.90 லட்சம் | ரூ. 18.10 லட்சம் | ரூ. 80,000 |
| R 1200 R Standard | ரூ. 14.90 லட்சம் | ரூ. 14.90 லட்சம் | Nil |
| R 1200 R Exclusive | ரூ. 15.40 லட்சம் | ரூ. 15.40 லட்சம் | Nil |
| R 1200 R Style | ரூ. 15.50 லட்சம் | ரூ. 15.50 லட்சம் | Nil |
| R nineT | ரூ. 17.90 லட்சம் | ரூ. 17.30 லட்சம் | ரூ. 60,000 |
| R nineT Scrambler | ரூ. 15.90 லட்சம் | ரூ. 15.40 லட்சம் | ரூ. 50,000 |
| R nineT Racer | ரூ. 17.30 லட்சம் | ரூ. 16.50 லட்சம் | ரூ. 80,000 |
| R 1200 RT Standard | ரூ. 18.50 லட்சம் | ரூ. 18.20 லட்சம் | ரூ. 30,000 |
| R 1200 RT Pro | ரூ. 21.90 லட்சம் | ரூ. 21.50 லட்சம் | ரூ. 40,000 |
| K 1600 GTL Pro | ரூ. 28.50 லட்சம் | ரூ. 28.30 லட்சம் | ரூ. 20,000 |
| K 1600 B Pro | ரூ. 29.00 லட்சம் | ரூ. 28.10 லட்சம் | ரூ. 90,000 |

தற்போது பிஎம்டபுள்யூ பைக்குகள் விலை குறைந்துள்ளதை தொடர்ந்து, அப்ரிலியா, யமஹா, எம்.வி அக்ஸ்டா, இந்தியன் மோட்டர்சைக்கிள், மோட்டோ குஸ்ஸி போன்ற நிறுவனங்களும் விலை குறைப்புக்கான அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








