பிஎம்டபுள்யூ-வின் புதிய அட்வென்ச்சர் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

14வது டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிஎம்டபுள்யூ நிறுவனம் எஃப் 750 ஜிஎஸ் மற்றும் எஃப் 850 ஜிஎஸ் ஆகிய  அட்வென்ச்சர் ரக மோட்டார் சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பிஎம்டபுள்யூ-வின் புதிய அட்வென்ச்சர் ரக பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

பிஎம்டபுள்யூ-வின் இந்த மோட்டார் சைக்கிள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் எஃப் 750 ஜிஎஸ் பைக் ரூ.12.2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா), எஃப் 850 ஜிஎஸ் பைக் ரூ. 13.7 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

பிஎம்டபுள்யூ-வின் புதிய அட்வென்ச்சர் ரக பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்த இரண்டு பைக்குகளில் முற்றிலும் புதிய 853 சிசி பேரலல்-ட்வின் எஞ்சின் உள்ளது. பிஎம்டபுள்யூ எஃப் 750 ஜிஎஸ் பைக் 77 பிஎச்பி பவர் மற்றும் 83 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

தொடர்ந்து பிஎம்டபுள்யூ எஃப் 850 ஜிஎஸ் பைக் 85 பிஎச்ப் பவர் மற்றும் 92 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

பிஎம்டபுள்யூ-வின் புதிய அட்வென்ச்சர் ரக பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

பிஎம்டபுள்யூ-வின் இந்த புதிய ரக பைக்குகளில் புதிய சஸ்பென்ஷன் செயல்பாட்டிற்காக மோனோகாக் ஃபிரேம் பொருத்தப்பட்டுள்ளது.

இருக்கை, ஹேண்டில்பாருக்கு இடையில் எரிவாயு டேங்க் உள்ளது. இதனால் மோட்டார் இந்த மோட்டார் சைக்கிள்களின் ரைடிங் சிறப்பாக இருக்கும்.

பிஎம்டபுள்யூ-வின் புதிய அட்வென்ச்சர் ரக பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

பிஎம்டபுள்யூ எஃப் 750 ஜிஎஸ் மற்றும் எஃப் 850 ஜிஎஸ் பைக்கில் புதிய முன்பக்க ஃபோர்க்ஸ் உள்ளது. எஃப் 850 ஜிஎஸ் பைக்கில் ஃபோர்க்ஸ் 43 மிமீ அளவில் அப்சைடு டவுன் யூனிட் உள்ளது.

பிஎம்டபுள்யூ-வின் புதிய அட்வென்ச்சர் ரக பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

தவிர எஃப் 750 ஜிஎஸ் பைக்கில் 43மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் உள்ளது. இந்த புதிய பைக்குகளில் உள்ள மோனோஷாக் அப்ஸபர்கள் மற்றும் அலுமினியம் டபுள்-சைடு ஸ்விங்ஆர்ம் சஸ்பென்ஷன் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

பிஎம்டபுள்யூ-வின் புதிய அட்வென்ச்சர் ரக பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

மின்சாரத்தால் இயங்கும் சஸ்பென்ஷன் அமைப்பு, ஏபிஸ் மற்றும் ஏஎஸ்சி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் பிஎம்டபுள்யூ எஃப் 750 ஜிஎஸ் மற்றும் எஃப் 850 ஜிஎஸ் பைக்குகளில் உள்ளன.

பிஎம்டபுள்யூ-வின் புதிய அட்வென்ச்சர் ரக பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்த அட்வென்ச்சர் பைக்குகளில் ரெயின் மற்றும் ரோடு என்ற இரண்டு ரைடிங் மோடுகள் உள்ளன. தவிர முற்றிலும் எல்.இ.டி லைடிங் மற்றும் பன்முக செயல்பாடுத்தன்மையை பெற்ற இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளன.

பிஎம்டபுள்யூ-வின் புதிய அட்வென்ச்சர் ரக பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஆர் 1200 ஜிஎஸ் மாடலை பின்பற்றி இந்த பைக்கிற்கான வடிவமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எஃப் 850 ஜிஎஸ் மோட்டார் சைக்கிள் ஸ்போக் சக்கரங்களை பெற்றுள்ளன.

பிஎம்டபுள்யூ-வின் புதிய அட்வென்ச்சர் ரக பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

சிபியூ பிளாட்ஃபார்மின் கீழ் தயாரிக்கப்படுள்ள பிஎம்டபுள்யூ எஃப் 750 ஜிஎஸ் மற்றும் எஃப் 850 ஜிஎஸ் பைக்குகளுக்கான டெலிவெரி 2018 ஜூன் அல்லது ஜூலையில் தொடங்கும்.

பிஎம்டபுள்யூ-வின் புதிய அட்வென்ச்சர் ரக பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஸ்போர்டி திறன் கொண்ட வடிவமைப்பு, எஞ்சின் செயல்திறன் மற்றும் உறுதியான கட்டமைப்பு ஆகியவற்றை பிஎம்டபுள்யூ எஃப் 750 ஜிஎஸ் மற்றும் எஃப் 850 ஜிஎஸ் மோட்டார் சைக்கிள்கள் சிறப்பாக பெற்றுள்ளன.

பிஎம்டபுள்யூ-வின் புதிய அட்வென்ச்சர் ரக பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

தற்போது பயன்பாட்டில் இருக்கும் மாடல்களை விட இந்த புதிய அட்வென்ச்சர் ரக மோட்டார் சைக்கிள்களின் செயல்பாடு சிறப்பான முறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயல்திறன் மற்றும் வடிவமைப்பு ஆகிய தேர்வுகளில் இந்த இரு பைக்குகளும் டிரையம்ப் டைகர் 800 மாடலுக்கு போட்டியாக உள்ளது.

பிஎம்டபுள்யூ-வின் புதிய அட்வென்ச்சர் ரக பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்த பைக்குகளை தொடர்ந்து பிஎம்டபுள்யூ-விடமிருந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய புதிய மாடல்கள் 2018ம் ஆண்டியில் இறுதியில் வெளிவரும் என்று தெரிகிறது.

English summary
Read in Tamil: BMW F 750 GS And F 850 GS Launched In India; Prices Start At Rs 12.2 Lakh. Click for Details...
Story first published: Thursday, February 8, 2018, 9:56 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark