2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்த பிஎம்டபுள்யூ ஜி 310 ஜிஎஸ் அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள்..!!

Written By:

பிஎம்டபுள்யூ மற்றும் டிவிஎஸ் கூட்டணியில் உருவாகியுள்ள அட்வென்ச்சர் டூரர் ஜி310 ஜிஎஸ் மோட்டார் சைக்கிள் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான பிஎம்டபுள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்!

ஜி 310 ஆர் பைக்கை தொடர்ந்து வெளியான இந்த மோட்டார் சைக்கிள், டிவிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஓசூர் ஆலையில் தயாரிக்கப்பட்டுயிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான பிஎம்டபுள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்!

இந்தியாவில் 2018 ஜூன்- ஜூலையில் விற்பனைக்கு வரவுள்ள பிஎம்டபுள்யூ ஜி310 ஜிஎஸ் பைக், ரூ. 2.8 லட்சம் வரை விலை பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

313சிசி சிங்கிள் சிலிண்டர் கொண்ட இந்த பைக்கில் எஞ்சின் அதிகப்பட்சமாக 33.5 பிஎச்பி பவர் மற்றும் 28 என்.எம் டார்க் திறனை வழங்கும். இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான பிஎம்டபுள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்!

169.5 கிலோ எடைக்கொண்ட பிஎம்டபுள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக், 11 லிட்டர் எரிவாயு கொள்ளவு திறன் கொண்டது. ரிசர்வில் இருக்கும் போது மேலும் இதனால் 1 லிட்டர் எரிவாயு வரை தாக்குப்பிடிக்கும்.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான பிஎம்டபுள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்!

2075 மிமீ நீளம், 880 மிமீ அகலம் மற்றும் 1230 மிமீ உயரம் கொண்ட இந்த பைக்கின் வீல் பேஸ் 1420 மிமீ. நிலத்திலிருந்து இந்த பைக்கின் இருக்கை 835 மிமீ உயரத்தில் உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான பிஎம்டபுள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்!

பிஎம்டபுள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கின் முன்சக்கரத்தில் கீழிலிருந்து மேல் நோக்கிய ஃபோர்க்ஸை பெற்றுள்ளது. அதேபோல பின்சக்கரத்தில் மோனோஷாக் அப்ஸபர்களை கொண்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான பிஎம்டபுள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்!

அதேபோல முன்சக்கரத்தில் 330 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குகளை இந்த பைக் பெற்றுள்ளது. மேலும் இதில் ஏபிஎஸ் நிறுத்த பாதுகாப்பு அமைப்பும் உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான பிஎம்டபுள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்!

பிஎம்டபுள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கில் 19 இஞ்ச் அலாய் சக்கரங்கள் உள்ளன. ரியர் பகுதியில் 17-இஞ்ச் அளவில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிஎம்டபுள்யூ மோட்டோராட் தயாரித்துள்ள இந்த அட்வென்ச்சர் ரக ஜி 310 ஜிஎஸ் மோட்டார் சைக்கிள் சிறந்த இயக்கத்திறனை வழங்கும் விதத்தில் உருவாக்கியுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான பிஎம்டபுள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்!

தற்போது இந்தாண்டில் அரையாண்டு முடிவில் பிஎம்டபுள்யூ ஜி 310 ஜிஎஸ் விற்பனைக்கு வரவுள்ளது, இந்தியாவில் ஆஃப்-ரோடு மற்றும் அட்வென்ச்சர் ரைடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

English summary
Read in Tamil: Auto Expo 2018 BMW G 310 GS Showcased In India. Click for Details...
Story first published: Wednesday, February 7, 2018, 20:37 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark