அமெரிக்காவில் பிஎம்டபிள்யூ ஜி 310 பைக்குகளுக்கு ரீகால்... இந்திய மாடல்களில் பாதிப்பு இருக்குமா?

அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய இரு பைக் மாடல்களும் திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன. சைடு ஸ்டான்டை இணைக்கும் உதிரிபாகத்தில் குறைபாடு இருப்பது தெரிய வந்

By Saravana Rajan

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்கள் நீண்ட தாமதத்திற்கு பின்னர் அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அறிமுகம் செய்யப்பட்ட மறுநாளே கவாஸாகி நிறுவனம் தனது ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட நின்ஜா 300 பைக்கை ரூ.2.98 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் களமிறக்கி ஒற்றை சிலிண்டர் எஞ்சினுடன் வந்த பிஎம்டபிள்யூ ஜி 310 பைக்குகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

அமெரிக்காவில் பிஎம்டபிள்யூ ஜி 310 பைக்குகளுக்கு ரீகால்... இந்திய மாடல்களில் பாதிப்பு இருக்குமா?

இதனால் வாடிக்கையாளர்கள் கவாஸாகி நின்ஜா 300 பைக்கையும் இப்போது தேர்வு பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளனர். இது பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக்கிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. விலையும் சற்று அதிகம் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய இரு பைக் மாடல்களும் திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன.

அமெரிக்காவில் பிஎம்டபிள்யூ ஜி 310 பைக்குகளுக்கு ரீகால்... இந்திய மாடல்களில் பாதிப்பு இருக்குமா?

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஓசூர் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பைக்குகளின் சைடு ஸ்டான்டில் பிரச்னை இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் பிஎம்டபிள்யூ ஜி 310 பைக்குகளுக்கு ரீகால்... இந்திய மாடல்களில் பாதிப்பு இருக்குமா?

நீண்ட கால பயன்பாட்டின்போது பைக்கின் ஃப்ரேமையும், சைடு ஸ்டான்டையும் இணைக்கும் உதிரிபாகம் சீக்கிரமாக தேய்ந்து, சைடு ஸ்டான்டு கழன்றுவிடும் ஆபத்து இருப்பதாக அமெரிக்காவின் தேசிய சாலை பாதுகாப்பு ஆணையம் கண்டறிந்துள்ளது.

அமெரிக்காவில் பிஎம்டபிள்யூ ஜி 310 பைக்குகளுக்கு ரீகால்... இந்திய மாடல்களில் பாதிப்பு இருக்குமா?

இதையடுத்து, அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட பிரச்னை இருப்பதாக கருதப்படும் 2,379 பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் பைக்குகளை திரும்ப அழைக்க பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. குறைபாடுடைய பாகத்தை சரிசெய்து தரவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் பிஎம்டபிள்யூ ஜி 310 பைக்குகளுக்கு ரீகால்... இந்திய மாடல்களில் பாதிப்பு இருக்குமா?

அடுத்த மாதம் 7ந் தேதி முதல் அங்கு பைக்குகளை திரும்ப அழைத்து பிரச்னை சரிசெய்து தருவதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதனிடையே, இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ ஜி 310 பைக்குகளுக்கு 1,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து டெலிவிரி எடுக்க காத்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் பிஎம்டபிள்யூ ஜி 310 பைக்குகளுக்கு ரீகால்... இந்திய மாடல்களில் பாதிப்பு இருக்குமா?

அடுத்த வாரம் இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் பைக்குகளின் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்க இருக்கின்றன. இந்த நிலையில், அமெரிக்காவில் இந்த பைக்குகளுக்கு விடுக்கப்பட்ட ரீகால் அறிவிப்பு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு சற்றே ஏமாற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

அமெரிக்காவில் பிஎம்டபிள்யூ ஜி 310 பைக்குகளுக்கு ரீகால்... இந்திய மாடல்களில் பாதிப்பு இருக்குமா?

எனினும்,இந்தியாவில் டெலிவிரி கொடுக்கப்பட இருக்கும் பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் பைக்குகளிலும் சைடு ஸ்டான்டு இணைப்பு பாகத்தை பிஎம்டபிள்யூ - டிவிஎஸ் கூட்டணி பரிசோதித்த பின்னரே டெலிவிரி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியாவில் டெலிவிரி கொடுக்கப்பட இருக்கும் பைக்குகளில் பிரச்னை இருக்காது என்று கருதலாம்.

Most Read Articles
English summary
BMW G 310 R, G 310 GS Recalled In USA.
Story first published: Tuesday, July 24, 2018, 15:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X