பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

Written By:

கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஜிஎஸ்310 ஜிஎஸ் மற்று் ஜி310 ஆர் பைக் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. இதில், பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் படங்களை இந்த செய்தியில் காணலாம்.

 பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

ஜெர்மனியை சேர்ந்த பிரிமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டோராட் நம் நாட்டை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனத்தின் கூட்டணியில் பட்ஜெட் விலையிலான ஸ்போர்ட்ஸ் பைக்குகளை தயாரித்து வருகிறது.

 பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

இந்த கூட்டணியில் கீழ் பிஎம்டபிள்யூ பிராண்டில் ஜி310 ஜிஎஸ், ஜி310ஆர், டிவிஎஸ் பிராண்டில் அப்பாச்சி ஆர்ஆர்310 மாடலும் உருவாக்கப்பட்டு விற்பனையில் இருக்கின்றன. இதில், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் மற்றும் ஜி310ஆர் பைக்குகள் ஓசூரில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இதுவரை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை.

 பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

இந்த நிலையில், கிரேட்டர் நொய்டாவில் துவங்கி இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

 பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் பட்ஜெட் பைக் மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது புதிய ஜி310ஆர் பைக். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் உயர்தர உற்பத்தி நெறிமுறைகளுடன், ஓசூரில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் பைக் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் நேக்கட் மாடல்தான் இந்த ஜி310ஆர் மாடல். இந்த பைக்கின் டிசைன் மிக கவர்ச்சிகரமாக இருப்பதுடன், முதல் பார்வையிலேயே சுண்டி இழுக்கும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

 பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

இந்த பைக்கில் 312சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இதே எஞ்சின்தான் அண்மையில் விற்பனைக்கு வந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

 பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

இந்த பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு முரட்டுத்தனமான தோற்றத்தை அளிக்கிறது. தவிரவும், பக்கவாட்டில் கொடுக்கப்பட்டு இருக்கும் கவுல்களும் மிரட்டலை கூட்டுகிறது.

 பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்று இருக்கிறது.

 பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

கேடிஎம் ட்யூக் 390, பெனெல்லி டிஎன்டி 300, கவாஸாகி இசட்250 மற்றும் டோமினார் 400 ஆகிய பைக் மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக களமிறங்க உள்ளது.

English summary
Auto Expo 2018: BMW G 310 R showcased. BMW Motorrad has showcased the G 310 R naked street fighter at the 2018 Auto Expo. The G 310 R is the entry-level naked motorcycle from the stable of German automaker, and it is currently being manufactured in India. BMW Motorrad already exports the G 310 R to several global markets.
Story first published: Wednesday, February 7, 2018, 21:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark