பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பந்தய களத்தில் பயன்படுத்துவதற்கான இந்த புதிய ரேஸ் பைக்கில் 215 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 999சிச

By Saravana Rajan

பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பந்தய களத்தில் பயன்படுத்துவதற்கான இந்த புதிய ரேஸ் பைக் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

கடந்த ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் லிமிடேட் எடிசன் மாடலாக வந்தது. மொத்தமாக 750 பைக்குகள் மட்டுமே உலக அளவில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. அதில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு ஒதுக்கப்படும்.

பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

கார்பன் ஃபைபர் ஃபிரேமுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் உலகின் முதல் பைக் மாடலாக பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக் குறிப்பிடப்படுகிறது. இந்த பைக்கின் முக்கிய அடிச்சட்டம் வெறும் 7.8 கிலோ மட்டுமே எடை கொண்டது. இதில் இருக்கும் ரிம்களும் கார்பன் ஃபைபராலானது. இதனால், எடை 30 சதவீதம் வரை குறைவாக இருக்கும்.

பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக் வெறும் 171 கிலோ எடை கொண்டது. கார்பன் ஃபைபர் மூலமாக சாதாரண பைக்குகளைவிட 37 கிலோ வரை எடை குறைந்துள்ளதாக பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக்கில் 999சிசி 4 சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 215 பிஎச்பி பவரையும் 120 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்ப்டடு இருக்கிறது. ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் இருக்கிறது.

பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

பந்தய களத்திற்கு ஏற்றவகையில் ஓலின்ஸ் நிறுவனத்தின் எஃப்ஜிஆர் 300 அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஓலின்ஸ் டிடிஎக்ஸ் 36 ஜிபி மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த பைக்கில் முன்புறத்தில் 320மிமீ டியூவல் ஃப்ளோட்டிங் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. இந்த பைக்கில் 17 அங்குல பைரெல்லி டயாப்லோ சூப்பர்பைக் ஸ்லிக் எஸ்சி2 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

கார்பன் ஃபைபர் ஃபேரிங் பேனல்கள், முழுவதுமான டைட்டானியம் அக்ரபோவிக் புகைப்போக்கி அமைப்பு, டைனமிக் டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை இந்த ரேஸ் பைக் பெற்றிருக்கிறது. எஞ்சின் பிரேக்கிங், வீலி கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இது பந்தய களத்திற்கான மாடல் என்பதால், ஹெட்லைட், டெயில் லைட்டுகள் இல்லை என்பது கூடுதல் தகவல். புதிய பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக் ஒரே ஒரு வண்ணக் கலவையில் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ எச்பி4 ரேஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இதற்கு போட்டியாளராக கருதப்படும், டுகாட்டி பனிகேல் 1299 சூப்பர்லெகரா சூப்பர் பைக் ரூ.1.12 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. எனினும், டுகாட்டி பனிகேல் 1299 சூப்பர்லெகரா சூப்பர் பைக் சாதாரண சாலைகளிலும் பயன்படுத்தும் சட்ட ரீதியான அனுதியை பெற்ற பைக் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
BMW Motorrad has launched the HP4 Race in India. The non-road legal motorcycle is priced at Rs 85 lakh, ex-showroom (India).
Story first published: Saturday, July 21, 2018, 12:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X