புதிய க்ளீவ்லேண்ட் பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

Written By:

அமெரிக்காவை சேர்ந்த க்ளீவ்லேண்ட் சைக்கிள்ஒர்க்ஸ் நிறுவனம் தனது இரண்டு பிராண்ட்டுகளின் கீழ் புதிய பைக் மாடல்களை சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு நிறுத்தி இருக்கிறது. இந்த இரண்டு புதிய பைக் மாடல்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய க்ளீவ்லேண்ட் பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

க்ளீவ்லேண்ட் ஏஸ் மற்றும் மிஸ்ஃபிட் என்ற பிராண்டுகளின் கீழ் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஏஸ் பிராண்டின் கீழ் ஏஸ் டீலக்ஸ், ஏஸ் ஸ்க்ராம்ப்ளர், ஏஸ் கஃபே ஆகிய மூன்று பைக்குகளும், மிஸ்ஃபிட் பிராண்டின் கீழ் ஜென்-II மிஸ்ஃபிட் என்ற பைக் மாடலும் பார்வைக்கு நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய க்ளீவ்லேண்ட் பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

க்ளீவ்லேண்ட் சைக்கிள்ஒர்க்ஸ் நிறுவனத்தின் அனைத்து பைக்குளும் 250சிசி ரகத்தை சேர்ந்தவை. இந்த பைக்குகளில் இருக்கும் 229சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 15.4 பிஎச்பி பவரையும், 16 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய க்ளீவ்லேண்ட் பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

ஏஸ் பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் மூன்று பைக்குகளும் பழமையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது. பாரம்பரிய சுவையுடன் நவீன தொழில்நுட்பத்திலான பைக்குகளை விரும்பும் இளைஞர்களை குறிவைத்து இந்த பைக் மாடல்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய க்ளீவ்லேண்ட் பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

க்ளீவ்லேண்ட் ஏஸ் டீலக்ஸ் மற்றும் கஃபே ஆகிய மாடல்கள் அலுமினிய சக்கரங்கள், அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் மற்றும் ட்வின் ஹைட்ராலிக் பின்புற சஸ்பென்ஷன் அமைப்பை பெற்றிருக்கின்றன.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
புதிய க்ளீவ்லேண்ட் பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

க்ளீவ்லேண்ட் ஜென் -II மிஸ்ஃபிட் மாடலானது அதிநவீன கஃபே ரேஸர் பைக் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கிலும் அதே 229சிசி எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. பவர் மற்றும் டார்க் திறனில் மாற்றங்கள் இல்லை.

புதிய க்ளீவ்லேண்ட் பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்த பைக்கில் தங்க வண்ணத்திலான இன்வர்டெட் ஃபோர்க்குகளுடன் முன்புற சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய க்ளீவ்லேண்ட் பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

க்ளீவ்லேண்ட் பைக்குகள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும். சாதாரண ரக பைக்குகளில் இருந்து பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளுக்கு மாற நினைப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த சாய்ஸாக இருக்கும்.

புதிய க்ளீவ்லேண்ட் பைக்குகள் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்தியாவில் சிறந்த டீலர் நெட்வொர்க்கை அமைக்கும் திட்டத்துடன் முயற்சிகளில் இறங்கி இருக்கிறது க்ளீவ்லேண்ட் சைக்கிள்ஒர்க்ஸ். நாட்டின் முக்கிய நகரங்களில் ஷோரூம்களை திறக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 35 ஷோரூம்களுடன் வர்த்தகத்தை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

English summary
Auto Expo 2018: Cleveland CycleWerks Ace and Misfit revealed. American motorcycle manufacturer Cleveland CycleWerks has revealed its two retro-inspired motorcycles, the Ace and Misfit at the 2018 Auto Expo. The Ace and Misfit will be offered in various design options in the Indian market
Story first published: Friday, February 9, 2018, 17:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark