வித்தியாசமான அம்சங்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் சுண்டி இழுத்த பைக் மாடல்கள்!

Written By:

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பைக் மாடல்களில் சில மாடல்கள் தனித்துவமாகவும், வித்தியாசமான டிசைனுடன் பார்ப்போரை கவர்ந்து இழுத்தது. அந்த தனித்துவமான மாடல்கள் உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

01. யமஹா மோட்டோராய்டு

01. யமஹா மோட்டோராய்டு

சமநிலைப்படுத்தி நுட்பம் கொண்ட யமஹா மோட்டோராய்டு என்ற புதிய கான்சசெப்ட் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் பார்ப்போரை வசீகரித்தது. கீழே விழாத வகையில் சிறப்பு நுட்பத்தை பெற்றிருந்த இந்த பைக்கின் விசேஷ செயல் விளக்க வீடியோவும் டிரைவ்ஸ்பார்க் தளத்திற்காக யமஹா நிறுவனம் வழங்கியது. அதில், பைக் எவ்வாறு கீழே விழாதவாறு செல்லும் என்பதை காட்டினார்கள்.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான பைக் மாடல்கள்!

யமஹா அரங்கில் நிறுத்தப்பட்டிருந்த செல்ஃப் பேலன்சிங் நுட்பம் கொண்ட பைக் பக்கவாட்டில் சிறிய சக்கரங்கள் கொண்ட ஸ்டான்டு துணையுடன்தான் நிறுத்தப்பட்டிருந்து. ஆனால், பைக் செல்லும்போது கீழே விழாத வகையிலான தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான பைக் மாடல்கள்!

யமஹா மோட்டோராய்டு பைக் தானியங்கி முறையில் கீழே விழாத வகையில் செல்லும் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. உரிமையாளர் மற்றும் ஓட்டுனரின் அடையாளத்தை கண்டறியும் திறனும் இந்த பைக்கிற்கு உண்டு என்பது ஹைலைட்டான விஷயம். எதிர்காலத்தில் இந்த பைக் தவிர்க்க முடியாத தொழில்நுட்பமாக இருக்கும் என யமஹா தெரிவித்துள்ளது.

02. மென்ஸா லுகட்

02. மென்ஸா லுகட்

ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மின்சார பைக் மாடல்களில் பெரிதும் கவனத்தை ஈர்த்திருக்கும் மாடல் மென்ஸா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லுகட் எலக்ட்ரிக் பைக். ரூ.2.8 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. வெளிப்புறத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஃப்ரேம் அமைப்பு பைக்கிற்கு மிரட்டலான தோற்றத்தை தருகிறது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான பைக் மாடல்கள்!

இந்த மின்சார பைக்கின் தொழில்நுட்ப அம்சங்கள் 200சிசி பைக்கிற்கு இணையாகவும், செயல்திறன் 650சிசி மோட்டார்சைக்கிள்களுக்கு இணையானதாகவும் இருக்கிறது. இந்த பைக் கஃபே ரேஸர் பைக் போன்று டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. 17 அங்குல ஸ்போக்ஸ் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான பைக் மாடல்கள்!

எல்இடி ஹெட்லைட், டேப்லெட் கம்ப்யூட்டர் போன்ற டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் முக்கிய அம்சங்கள். இந்த பைக்கில் இருக்கும் டிசி மின் மோட்டார் அதிகபட்சமாக 24 பிஎஸ் பவரையும், 60 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. மணிக்கு 121 கிமீ வேகம் வரை செல்லும்.

 03. டிவிஎஸ் க்ரையன்

03. டிவிஎஸ் க்ரையன்

டிவிஎஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்த புதிய க்ரையன் மின்சார ஸ்கூட்டரின் டிசைன் மிகவும் தனித்துவமாகவும், எல்லோரையும் கவர்ந்து இழுப்பதாகவும் அமைந்தது. பைக் மற்றும் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட க்ராஸ்ஓவர் ஸ்கூட்டர் மாடலாக இருக்கிறது. இரட்டை வண்ணக் கலவை அழகுக்கு அழகு சேர்க்கிறது. டிஎஃப்டி திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் முக்கிய அம்சம்.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான பைக் மாடல்கள்!

இந்த மின்சார ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், எல்இடி இண்டிகேட்டர் என அசத்துகிறது. 3 லித்தியம் அயான் பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் பயணிக்க முடியும். பேட்டரியை 60 நிமிடங்களில் 80 சதவீத அளவுக்கு சார்ஜ் ஏற்ற முடியும். ட்யூவல் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டு இருப்பதும் சிறப்பு.

04. சுஸுகி பர்க்மேன்

04. சுஸுகி பர்க்மேன்

இந்தியர்களுக்கு பழக்கப்பட்ட ஸ்கூட்டர் மாடல்களிலிருந்து சற்று வித்தியாசமான மேக்ஸி ரக ஸ்கூட்டர் ஸ்டைலில் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வந்த சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125சிசி ஸ்கூட்டர் எல்லோரையும் கவர்ந்த மாடலாகவிட்டது. ஐரோப்பாவில் பிரபலமான மேக்ஸி ரக ஸ்கூட்டரின் டிசைன் தாத்பரியங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் முக்கிய சிறப்பு.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான பைக் மாடல்கள்!

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் 124சிசி எஞ்சின்தான் இந்த புதிய ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.6 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக் சிஸ்டம் உள்ளது. புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் ரூ.65,000 முதல் ரூ.70,000 இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

05. அப்ரிலியா டுவானோ 150/ஆர்எஸ்150

05. அப்ரிலியா டுவானோ 150/ஆர்எஸ்150

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட பைக் மாடல்களிலேயே இளைஞர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த மாடல் அப்ரிலியா டுவானோ 150 மற்றும் ஆர்எஸ்150 பைக்குகள்தான். பிரிமியம் பைக்குகள் தயாரிப்பில் பிரபலமான அப்ரிலியா நிறுவனத்தின் குறைவான விலை மாடல்களாக வரும் வாய்ப்பு இருப்பதால் ஆவலைத் தூண்டி இருக்கிறது. அப்ரிலியா பிராண்டின் சூப்பர் பைக்குகள் டிசைன் அம்சங்களை இந்த பைக்குகள் பெற்றிருப்பதும், அட்டகாசமான வண்ணக் கலவையும் சுண்டி இழுக்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான பைக் மாடல்கள்!

இந்த பைக் மாடல்களில் இருக்கும் 150சிசி எஞ்சின் அதிகபட்சமாக 17 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். ரூ.1.5 லட்சம் விலையில் எதிர்பார்க்கலாம்.

 06. எம்ஃப்ளக்ஸ் ஒன் சூப்பர் பைக்

06. எம்ஃப்ளக்ஸ் ஒன் சூப்பர் பைக்

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் மாடலாக விற்பனைக்கு வந்தது புதிய எம்ஃப்ளக்ஸ் ஒன். மிக அசத்தலான ஸ்டைலில் இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் செயல்திறனை பெற்றிருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான பைக் மாடல்கள்!

இந்த பைக்கில் இருக்கும் சக்திவாய்ந்த மின்மோட்டார் 71 பிஎச்பி பவரையும், 84 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 200 கிமீ தூரம் வரை பயணிக்கும். மணிக்கு 200 கிமீ வேகத்தை தொட வல்லது. இரண்டு மாடல்களில் விற்பனைக்கு வந்துள்ளது. பேஸ் மாடல் ரூ.6 லட்சத்திலும், டாப் மாடல் ரூ.11 லட்சம் விலையிலும் கிடைக்கும்.

07. கவாஸாகி நின்ஜா எச்2 எஸ்எக்ஸ்

07. கவாஸாகி நின்ஜா எச்2 எஸ்எக்ஸ்

கவாஸாகி நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற நின்ஜா எச்2 சூப்பர் பைக்கின் ஸ்போர்ட்ஸ் டூரர் மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக் இரண்டு விதமான மாடல்களில் கிடைக்கும். அதிக பொருட்களை எடுத்துச் செல்வதற்கான விசேஷ பெட்டிகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான பைக் மாடல்கள்!

இந்த பைக்கில் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றவாறு எலக்ட்ரானிக் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. அதீத பிக்கப்பின்போது பின் சக்கரம் வழுக்குவதை தவிர்க்கும் லான்ச் கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது. ரூ.21.80 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

08. யுஎம் ரெனிகேட் ட்யூட்டி

08. யுஎம் ரெனிகேட் ட்யூட்டி

அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் பட்ஜெட் விலையில் இரண்டு புதிய க்ரூஸர் பைக்குகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. யுஎம் ரெனிகேட் ட்யூட்டி எஸ் மற்றும் ட்யூட்டி ஏஸ் என்ற இரு மாடல்களில் இந்த பைக்குகள் விற்பனைக்கு கிடைக்கும்.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான பைக் மாடல்கள்!

இந்த பைக்கில் 223சிசி ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 16 பிஎச்பி பவரையும், 17என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட், அனலாக் - டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இதன் முக்கிய அம்சங்கள். ரூ.1.10 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.

09. டிவிஎஸ் ஸெப்லின்

09. டிவிஎஸ் ஸெப்லின்

டிவிஎஸ் நிறுவனத்தின் ஸெப்லின் என்ற புதிய க்ரூஸர் பைக் மாடலின் தொழில்நுட்பம் அசரடிக்கிறது. இந்த பைக்கில் 220சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதற்கு துணையாக ஸ்டார்ட்டர் ஜெனரேட்டரும் எஞ்சினுக்கு துணையாக செயல்படும்.. ஆரம்ப நிலையில், கூடுதல் டார்க் திறனை இந்த ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் வழங்கும்.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான பைக் மாடல்கள்!

இதுதவிர்த்து, ஆற்றல் இழப்பை மின் ஆற்றலாக மாற்றி சேமிக்கும் திறன் கொண்ட 1,200 வாட் திறனுடைய ரீஜெனரேட்டிவ் அசிஸ்ட் மோட்டார் ஒன்றும் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிலிருந்து, தேவைப்படும்போது 20 சதவீத அளவுக்கு கூடுதல் டார்க் திறனை பெற முடியும். எல்இடி ஹெட்லைட், ஸ்மார்ட் கீ மற்றும் எலக்ட்ரானிக் ஸ்பீடோமீட்டர் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.

10. ஹோண்டா பிசிஎக்ஸ் ஸ்கூட்டர்

10. ஹோண்டா பிசிஎக்ஸ் ஸ்கூட்டர்

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஹோண்டா பிசிஎக்ஸ் என்ற மேக்ஸி ரக மின்சார ஸ்கூட்டர் பார்ப்போரை வசீகரித்தது. உலக அளவில் விற்பனையில் இருக்கும் ஹோண்டா பிசிஎக்ஸ் 150சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலின் மின்சார மாடல்தான் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு நிறுத்தப்பட்டு இருந்தது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான பைக் மாடல்கள்!

மிக வித்தியாசமான தோற்றம், பெரிய சக்கரங்கள், எல்இடி டெயில் லைட்டுகள் முக்கிய அம்சங்கள். இந்த மின்சார ஸ்கூட்டரில் பேட்டரியை தனியாக கழற்றி மாற்றும் வசதி இருக்கிறது. கான்செப்ட் நிலையிலிருந்து தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்படும் வாய்ப்புள்ள இந்த மின்சார ஸ்கூட்டர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

11. டிவிஎஸ் அப்பாச்சி எத்தனால்

11. டிவிஎஸ் அப்பாச்சி எத்தனால்

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக டிவிஎஸ் அப்பாச்சி 200 விளங்குகிறது. இந்த பைக்கின் எத்தனால் எரிபொருளில் இயங்கும் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் எல்லோரின் கவனத்தையும் பெற்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த வித்தியாசமான பைக் மாடல்கள்!

இந்த பைக்கில் எத்தனால் எரிபொருளில் செல்லும் விதத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. எத்தனால் எரிபொருள் காரணமாக, புகை அளவு குறைவதால் மாசு கட்டுப்படுத்தும் அம்சத்தை இந்த பைக் பெற்றிருக்கிறது.

English summary
Crazy And Futuristic Bikes At Auto Expo.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark